சிறுகதை

உயர்ந்தவர்

76views
சிரித்துக்கொண்டே எப்போதும் ஓடிவரும் என் மூன்று மகள்களும் இன்று முகவாட்டத்துடன் வந்தபோது என் முகமும் வாடி போனது. மூன்று வருடங்களுக்கு முன்பு என் மனைவி வேலை செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து அவளை மருத்துவமனையில் சமமாக காண நேர்ந்தது .
மாரடைப்பாம்.முதலிலேயே கவனித்து இருக்க வேண்டும். லாஸ்ட் டைம் இல்ல வந்தால் இப்படித்தான் ஆகும் என்றனர் மருத்துவர்கள்.
நானும் என் மனைவியும் பீடி சுற்றி அதிலிருந்து வரும் வருமானத்தை கொண்டு பிழைப்பை நடத்தி வந்தோம். அவ்வப்போது சொல்வாள் கைவலிக்குது ..கைவலிக்குது ..மூச்சு முட்டுது என்று குறைந்த விலைக்கு மருந்து மாத்திரைகள் ரொம்ப முடியாமல் போனால் அரசு மருத்துவமனை அங்கும் கலர் கலராய் மருந்து மாத்திரைகளை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள் .
இவளுக்கும் இரண்டு மூன்று நாட்களில் சரியாகி விடும் ஒரு நாள் கூட மார்பு வலி என்று சொன்னதில்லை.அப்படி ஏதாவது சொல்லி இருந்தால் யார் கை… கால்களில் விழுந்தாவது காப்பாற்றி இருப்பேன்..போறாத காலமோ என்னமோ காலனிடம் பறிகொடுத்து… சொந்தபந்தங்கள் விலகிய போது நான் பெற்ற மகள்களை எப்படி காப்பாற்றப் போகிறேன் என்று தெரியாமல் கண்களை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது .தூக்கத்தில் ஓநாய் சப்தங்களும்.. யானைகள் பிளிரும் சப்தங்களும் என்னை மிரள வைத்து எத்தனையோ நாள் தூங்காமல் கண் விழித்தேன் .என் குறையை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்த சமயத்தில் தொண்டு நிறுவனத்தில் இருந்து வந்த விக்னேஷ் என் குறையைக் கேட்டு சமாதானம் செய்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொன்னார்.
நானும் மூன்று மகள்களையும் அழைத்துக் கொண்டு நான்கு பேருந்துகள் மாறி சிறிது தூரம் நடந்தபோது அந்த இடம் வந்தது. அங்கு பெரிய அளவில் பெயர் பலகை இருந்தது. சற்று நேரத்திற்குள் விக்னேஷ் வந்துவிட எங்களை அந்த மிகப் பெரிய வீடுகள் போல் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கமாக நீண்ட பாதை வழியாக அழைத்துச் சென்றார்.
அது மிகப்பெரிய அலுவலகம் .பல அறைகளில் பல குழுக்கள்… வழக்கறிஞர்கள் ..சமூக ஆர்வலர்கள் என பலரிடம் பல குறைகளை கேட்டு கொண்டு சரி செய்வதாக வாக்குறுதி அளித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். எங்களை ஓரிடத்தில் சற்று நேரம் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு ஒரு அறைக்குள் சென்றார்.
சிறிது நேரத்தில் வந்து எங்களை அங்கிருந்த தனி அறைக்குள் அழைத்துச் சென்றார் .அந்த அறைக்குள் மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் வரிசையாகவும் நேர் எதிராகவும் அமர்ந்திருந்தனர்.
எங்களை பற்றி முன்பே சொல்லி இருக்க வேண்டும். அங்கு நடுவில் அமர்ந்திருந்த அதிகாரி நிமிர்ந்து கொண்டு எங்களைப் பார்த்தார். நாங்கள் கொண்டுவந்திருந்த சான்றிதழ்களை பார்த்துவிட்டு *நீங்க என்ன தொழில் செய்கிறீர்கள்*….
பீடி சுத்திர வேலை ஐயா.. என்றதற்கு அதில வருமானமும் கிடைக்காது எப்படி குடும்பத்தை சமாளிச்சிங்க…
ஏதோ அரைவயிறுமா கால்வயிறுமா வைத்துக் கட்டி வாயக் கட்டி பொழப்பு நடத்துறோம்.
உங்க கஷ்டம் புரியுது உங்களுக்கு முழு சம்மதம் தானா?
ஐயா என்ன சொல்றீங்கன்னு புரியவிலை..
விக்னேஷ் நீங்க எதுவும் சொல்லலையா….
இல்லைங்க உங்க முடிவு தெரியாமல் நான் எப்படி சொல்றதுன்னு ….
சரி சரி நானே சொல்லிடுறேன் என்று என்னை பார்த்து கேட்டார் .இத பாருங்க இது ஹோம் . இங்க உங்க பசங்கள சேர்த்து இங்க நாங்க நல்லா படிக்க வைத்து நல்ல வேலையில கைநிறைய சம்பாதிக்க மாதிரி கரை ர்ப்போம். அவங்களுக்கு சாப்பாடு ..துணி.. தங்க இடம் ..படிக்க பள்ளிக்கூடம் ..காலேஜ் எல்லாமே இலவசம் தான் .அவங்கள பொறுப்பா பார்த்துக்கறது எங்க கடமை என்ன சொல்றீங்க….
நான் அமைதியாக நின்றேன்.
ஏற்கனவே மனைவியேை இழுந்து விட்டேன் .இப்போது மகள்களையும் பிரிந்து செல்வது மனதுக்கு மிகவும் வேதனை அளித்தது .இருந்தாலும் ஒத்த ஆம்பள மூணு பொண்ணுங்க யோசிக்க நேரமில்லாமல் …அவங்கள நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா போதும். என்னால் எதுவும் செய்ய முடியாது. நீங்க உதவினீங்கனா.. என் பசங்க தீப்பெட்டி கம்பெனியிலேயோ..பீடி கம்பெனியிலேயோ வேலை செய்யணும் .என் கஷ்டம் என்னோட போகட்டும் .நீங்க சொன்ன மாதிரி எப்படியாவது கரை சேர்த்துடுங்கையா.. என்று கைகளை பிடித்தபடி அழுதேன்.
உங்க வீட்டுக்கு ஆளுங்க வருவாங்க அவங்க பார்த்துட்டு லெட்டர் கொடுப்பாங்க.. இப்ப படிக்கிற ஸ்கூல்ல இருந்து டிசி ..சர்டிபிகேட் எல்லாம் நாங்களே வாங்கி நல்ல ஸ்கூலா பார்த்து சேர்த்திடுவோம். அவங்கள கரை சேர்க்க வேண்டியது எங்கள் பொறுப்பு .நீங்க எதை பத்தியும் கவலைப்படாம ஊருக்கு போங்க. என்று அங்கிருந்த உதவியாளரை அழைத்து மதிய உணவு சாப்பிட வைத்து வழி அனுப்பினார்.
ஒரு வாரம் என்று சொன்னவர் சாக்கடை ..சகதி.. ஈக்கள்.. கொசுக்கள் தாண்டி நடந்து இருவருடன் என் இல்லத்திற்கு வந்தார் .அவர் வந்தபோது நானும் என் மகள்களும் பீடி சுற்றிக் கொண்டிருந்தோம் .இந்த சின்ன இடத்திலேயே எப்படி இத்தனை பேர் இருக்கீங்க? அதும் இந்த மாதிரி இடத்தில ..பார்க்கவே கஷ்டமா இருக்கு.. எப்படி தான் இங்க இருக்கீங்களோ தெரியல… என் மகள்களை அதட்டினார் .முதல்ல நீங்க மூணு பேரும் பீடியை சுத்துறது நிறுத்துங்க.. இதனால் எத்தனை வியதிகள் வருதுன்னு தெரியுமா? இதுக்கு மேல பீடி இலையில் மீது கூட கை வைக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணுங்க என்றார் .
என் இளையவள் ..அப்போ எப்படி சாப்பிடுறாதாம்.என்றாள்.
அதுக்கு தான் நாங்க இருக்கோம் உங்கள நல்லா பார்த்துக்கோம்.
எங்க அப்பாவை விட்டுட்டு நான் வரமாட்டேன்.. என்று கடைசி மகள் அழுதாள்.
நீ நல்லா படிச்சு வேலைக்கு போயி நிறைய சம்பாதித்து உங்க அப்பாவ நல்லபடியா பார்த்துக்கோ ..நல்ல பெருசா வீடு கட்டுங்க ..உங்க அப்பா சந்தோசப் படுவார் .என்று என்னை பார்த்து.. எத்தனை வருஷமா பீடி சுத்துறிங்க.. என்றதற்கு ..தெரியலைங்க சின்ன வயசுல இருந்தே பீடியை சுத்துறேன்.
இதுவரைக்கும் ௭ட்டு பீடி மண்டிகளை தாண்டி இப்போ ஓம்தாவது மண்டியில் வேலை பார்க்கிறேன். அப்படியும் ஒரு முதலாளி சினிமா தியேட்டரில் வேலை கொடுத்தார் .அங்கு வருமானமே இல்ல. இப்ப எல்லாம் சிகரெட்டுக்கு மாறிட்டாங்க .பீடி கம்பனி எல்லாம் மூடிட்டு வர்றாங்க ..அதுக்காக புகைபிடிப்பது சரின்னு சொல்லலை.. பீடியா இருந்தாலும் சிகரெட்டா இருந்தாலும் பிடிக்கறறது தப்புதான் ..நல்லா தெரியுது ..எங்க வயத்து பொழப்பு ..தெரிஞ்ச தொழில் செய்கிறோம். தயவு செஞ்சு என் பிள்ளைகளை நல்லா படிக்க வச்சு அவங்கள நல்ல ஆளாக்கினா உங்களுக்கு ரொம்ப புண்ணியம் சாமி.. என்று கெஞ்சினேன்.
முதல்ல கெஞ்சுவதை நிறுத்துங்கள்.. இதுக்கு மேல அவங்க எங்க புள்ளைங்க நாங்க நல்லா பாத்துப்போம். நீங்கதான் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கணும் .யாராக இருந்தாலும் முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும்… எல்லாம் கொஞ்ச நாள் பழக்கம் ஆயிட்டாங்க சரியாயிடும்.. இன்னும் கொஞ்சம் பார்மாலிட்டிஸ் எல்லாம் இருக்கு.. எப்படியும் பத்து நாளைக்குள்ள முடிச்சிட்டுவோம். தகவல் சொன்னதும் பிள்ளைகள் அழைச்சிட்டு வந்துடுங்க..என்று வெறும் தரையில் எங்களுக்கு சரி சமமாக உட்கார்ந்து பேசினார் காப்பி வாங்கி வர எழுந்தபோது மறுத்துவிட்டு எங்கள் வீட்டு பழைய நிறைந்த பிளாஸ்டிக் குளத்தில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு அன்பாக பேசி கிளம்பினார்.
அவர் சொன்னதுபோலவே ஒன்பதாவது நாளில் தகவல் வந்தது அவரிடம் சென்று சில விண்ணப்பங்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு சற்று தயங்கி நின்றேன்.
என்ன சொல்லுங்க.
புள்ளைகளை பாக்கணும்னு தோணுச்சுன்னா…
இங்கே இல்லை ..இது ஆபீஸ். அதுக்குன்னு தனி வீடு இருக்கு. அங்க தான் பார்க்கணும் .லீவு எல்லாம் தர மாட்டாங்க. உங்க குடும்பத்தில நல்லது கெட்டது எல்லாம் நீங்க தான் பார்த்துக்கனும் .பிள்ளைகளை அலைய வைக்க கூடாது.
இது போதும் ஐயா நான் கிளம்பறேன்… என்று என் மகள்களிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருக்கும்போது மினி வேன் வந்தது .பிள்ளைகளையும் உடமைகளையும் ஏற்றிக் கொண்டு பறந்தது .பிள்ளைகளின் பிரிவை தாங்க முடியாமல் அழுதபடியே நடந்தேன் .எப்படியாவது பசங்க நல்ல நிலைமைக்கு வந்தா போதும் என்று சமாளித்து பஸ்ஸில் ஏறினேன்.பிறகு அவர்களை அந்த இல்லத்தில் அடிக்கடி சந்தித்து பேசிவிட்டு வருவதுண்டு. இன்று அவர்களை சந்தித்த போது கட்டி அணைத்து அழுதனர்.
என்னவென்று விசாரித்தபோது *ஐயா இருசக்கர வாகனத்தில் செல்லும்போது லாரி மோதி விட்டதுதாம். முதலில் சிராய்ப்பு என்றனர். இப்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமாம்* என்றனர் .என் மனம் கலங்கியது. பிள்ளைகளிடம் ஆறுதல் சொல்லிவிட்டு அங்கு இருந்தவர்களிடம் விசாரித்து மிகப்பெரிய தனியார் மருத்துவமனைக்கு செல்வதாலும் அவரது உடல் நலம் சரி இல்லாததால் வெறும் கையோடு செல்லக்கூடாது என்று ஆப்பிளை விலைகேட்டேன்.
இருநூறு என்றனர். அரை கிலோ நூறு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றேன். பெரிய மருத்துவமனை தனியார் காவலாளிகள் சுற்றிலும் இருந்தனர். அவர்களிடம் கேட்டுக் கொண்டே விசாரித்து பல மிகப்பெரிய அடுக்கு மாடிகளை தாண்டி சரியான அடுக்கு மாடியின் நுழைவாயிலுக்கு சென்றேன்.
அங்கிருந்த பாதுகாவலரிடம் அனுமதி கேட்டேன். என்னை மேலும் கீழுமாக பார்த்தார் .பழைய கைலி.. அழுக்கடைந்த சட்டையை பார்த்து அனுமதிக்கவில்லை .எவ்வளவு கெஞ்சியும் அனுமதி இல்லை .ஆனால் பேண்ட் ஷர்ட்டுடன் வந்தவர்களை சல்யூட் அடித்து அனுமதி தந்தனர். எனக்கு மனம் தாங்க முடியவில்லை. வாங்கி வந்த ஆப்பிள்ளை அந்த பாதுகாவலர்களும் கொடுத்து விட்டு கிளம்பினேன் .அங்கு ஒரு அம்மன் சிலை இருந்தது. பலர் மெழுகுவர்த்தி ஏற்றி முட்டிபோட்டு பிரார்த்தனை செய்தனர். எனக்குள் ஒரு சிறிய ஆசை நாம் சூடம் ஏற்றினால் என்ன என்று தோன்றியது.அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்தேன் .ஒன்றும் தேவையில்லை உன் மனசார வேண்டிக்கோ ..நல்லதே நடக்கும் .என்றார்.
அங்கே இருந்த முக்காடு போட்ட அம்மனை கையேந்தி ..ஐயா நன்கு குணமாகி வரவேண்டுமென்று பிச்சையாக கேட்டுவிட்டு ஊருக்கு வந்துவிட்டேன்.
பத்து நாள் கழித்து ஒருவர் வீட்டிற்கு வந்தார். வந்தவர்* ஐயா உங்களை பாக்கணுமுன்னு சொன்னாரு* என்றதும் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன் .
இரண்டு மாடிக் கொண்ட வீட்டிற்குள் நுழைந்தேன் .என்னை பார்த்ததும் அன்பாக நாற்காலி மீது அமர சொன்னார். நான் மறுத்தாலும் விடாப்பிடியாக அமரவைத்தார். உடம்புக்கு ஒன்னும் இல்ல.. சும்மா எல்லாம் பயம் காட்டுகிறாங்க.. நீங்க அன்னிக்கே ஆஸ்பத்திரிக்கு வந்தீங்களமே… ஆப்பிள்ளை வாங்கிட்டு …இது எல்லாம் எதுக்கு? என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை .கண்களில் கண்ணீர் வந்தது.
அவரின் மனைவியை அழைத்து சாப்பாடு போடச் சொன்னார். இதுவரை நான் சாப்பிடாத ருசியுடன் கூடிய உணவு சாப்பிட்டேன் .மனது நிறைந்தது.
என்னைப் பார்த்தார்*பசங்கள நானே நல்ல கவனிச்சிட்டு வர்றேன். நிலைமைக்கு வருவாங்க.. என்றார். சிரித்தபடியே *அவங்க நல்லா இருந்தா போதும் .என்ன மாதிரி கஷ்டப்படக்கூடாது .அவங்களுக்கு எது மனம் திருப்தி தருதோ அதுவே போதும் ஐயா *.என்றதும் சிரித்தார்.
நானும் சந்தோஷமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
சிந்து சீனு

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!