archiveசிறுகதை

இலக்கியம்சிறுகதை

டாய்புண்

அந்தி சாய்ந்த நேரம். கதிரவன் படுக்கைக்கு செல்ல சந்திரன் காவலுக்கு பொறுப்பேற்றான். மூன்று வயதான செல்ல பிள்ளை பிபுவோடு அப்பா ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தார். பிபுவுக்கு எல்லா குழந்தைகளை போல பல நிறங்களான பந்துகளோடு விளையாடுவது மிகவும் அதிகமாக பிடிக்கும் ஒன்று. அப்பா மஞ்சள் நிற பந்தை எடுத்து பிபுவிடம் உருட்டி விடுவார். பிபு பிடித்த அந்த பந்தை மீண்டும் அப்பாவை நோக்கி உருட்டி அல்லது தூக்கி எறிவான். ஒருமுறை...
இலக்கியம்சிறுகதை

புதுசா ஒரு பிறந்த நாள்…

கார் பொறுமையாக சென்று கொண்டிருந்தது . காரை ஓட்டிக் கொண்டிருந்த முருகேசன் திரும்பி மனைவியை பார்த்தார் ..அவளது முகத்தில் ஏகப்பட்ட சலணம். வழக்கத்திற்கு மாறாக வாய்மூடி வரும் கௌசல்யாவின் மௌனம் அவர் அவரை கலவரப்படுத்த “என்ன கௌசல்யா !என்ன ஆச்சு ?உடம்பு சரியில்லையா ?” அவரது கேள்வியில் சற்று நிதானப்பட்டவள்,  “இன்று கோர்ட்ல ஒரு கேசுங்க... ரெண்டு பேரும்  காதல் திருமணம் செய்து இரண்டு வருஷம் ஆகுது .அதுக்குள்ள டைவர்ஸ்...
இலக்கியம்சிறுகதை

காக்கை குருவி எங்கள் ஜாதி…

விடியல் காலை ஐந்து மணி.. ஏர்க்கலப்பையை தோளில் சுமந்தபடி கிளம்பினார் சின்னையா. பெரிய லோட்டா நிறைய நீராகாரத்தை நீட்டி இதைக் குடிச்சிட்டு கிளம்புங்க.. நெற்றியில் திருநீறு பூசியபடி வந்தவர் திண்ணையில் அமர்ந்து நீராகாரத்தை பருகியவர் பன்னண்டு மணிக்கு சாப்பாடு எடுத்து வந்துடு புள்ள.. இப்பல்லாம் பசி தாங்க முடியல.வெளவெளன்னு வருது. சரிங்க மாமா.. பத்து மணிக்கு அந்த வேலுப்பயலை கொஞ்சம் அனுப்பி வைங்க.. நான் கேப்பைக்கஞ்சி கொடுத்து அனுப்பறேன்.அலுப்பு பாக்காம...
இலக்கியம்சிறுகதை

உப்புக்கண்டம்

அன்றைக்கு மாரியம்மன் கோவில் திருவிழாவின் மூன்றாம் நாள் விடையாத்தி நிகழ்ச்சி! ஒவ்வொரு குடும்ப வகையறாவும் ஓர் ஆடு பிடித்து அறுத்து அதன் இறைச்சியைக் கூறு போட்டுப் பிரித்துக் கொண்டார்கள். அப்பொழுதெல்லாம் கள் குடிக்கும் வழக்கம் உண்டு. சாராயமும் கூட. கோவில் திருவிழா என்றால் வீட்டின் முன் மாவிலை, தென்னங்குருத்தில் செய்த தோரணம், குலை ஈன்று இருக்கும் வாழைமரம்,ஈச்சங்குலை ஆகியன வாயிலின் இருபுறமும் கட்டித்தொங்கவிட்டிருப்பர். சீரியல் மின்விளக்கும் ஒளிரும்.அதைப்பார்த்தாலே திருவிழா களைகட்டி...
சிறுகதை

போய் வா கணவா பொழுதோட…

சிறுகதை : "வாடி ஒரு எட்டு போயிட்டு வருவோம் அப்படியே கல்லு மாதிரி நீயும் உட்கார்ந்து மாவு அரைச்சுக்கிட்டு இருக்க. என்னதான் இருந்தாலும் உறவும் உரிமையும் இல்லாம போகுமா." ஆட்டுக்கல்லில் மாவரைத்து கொண்டு இருந்த ரேணுகாதேவி, மாலதி அக்காவின் பேச்சை கேட்காது போல இன்னும் கவனமாக வேகமாக மாவரைத்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் ஒளிர்ந்தன. விட்டு விட்டு கேட்கும் குயிலின் ஓசை போல அவள் மனதும் விட்டுவிட்டு மூச்சு வாங்கியது. நேரம்...
சிறுகதை

உயர்ந்தவர்

சிரித்துக்கொண்டே எப்போதும் ஓடிவரும் என் மூன்று மகள்களும் இன்று முகவாட்டத்துடன் வந்தபோது என் முகமும் வாடி போனது. மூன்று வருடங்களுக்கு முன்பு என் மனைவி வேலை செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து அவளை மருத்துவமனையில் சமமாக காண நேர்ந்தது . மாரடைப்பாம்.முதலிலேயே கவனித்து இருக்க வேண்டும். லாஸ்ட் டைம் இல்ல வந்தால் இப்படித்தான் ஆகும் என்றனர் மருத்துவர்கள். நானும் என் மனைவியும் பீடி சுற்றி அதிலிருந்து வரும் வருமானத்தை...
இலக்கியம்நிகழ்வு

“ஆதிராவின் மொழி ” நூல் வெளியீடு

ஷார்ஜாவில் நடைபெற்ற 41 வது சர்வதேச புத்தக கண்காட்சியில் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் ஒருங்கிணைத்த கேலக்ஸி பதிப்பகத்தின் வெளியீடாக ஆதிராவின் மொழி என்ற நூல் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 4:25 வரை வெளியிடப்பட்டது. எழுத்தாளர் சிவமணி அவர்களின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்து இருக்கிறது ஆதிராவின் மொழி. Booktopia நிறுவனர் திருமதி. மலர்விழி அவர்கள் வெளியிட, அமீரக எழுத்தாளர்/சமூக...
சிறுகதை

சூரி

“என் உசுரு கிரிக்கெட் ஆடிட்டு இருக்கும் போதே போகணும் மச்சான்” கையில் கிரிக்கெட் பேட்டை சுழற்றியவாறு சூரி சொன்னபோது அங்கிருந்த எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம் . சூரியின் உண்மையான பெயர் சூர்யா. ஆனால் எனக்கு நினைவு தெரிந்து அவன் அம்மா அப்பா உட்பட ஊரில் யாரும் அவனை சூர்யா என அழைத்ததில்லை.அதைப்பற்றி அவனும் பெரிதாய் கவலை கொண்டதில்லை. எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு ஏறாதவர்களின் பட்டியலை சேர்ந்தவன்.மீசை தாடி...
இலக்கியம்சிறுகதை

மனம் நனைத்துப் போனவள்

இரு பத்து ஆண்டுகளாக அவள் பரிச்ச யம். பார்வைப் பரிச்சயம். பேசிய சொல் ஒன்று கூட இல்லை. முறைத்தபடிதான் பார்ப்பாள். அல்லது பார்த்தால் முறைப் பாள். அவளிடம் பேசும் எண்ணமென எதுவும் இருந்ததில்லை. அவள் தேவதை .. என்றெல்லாம் புரூடா விடத் தயாரில்லை. சாதாரண ஒரு இல்லத்தரசியின் தோற்றச் செழுமை. திடமான உடல். மாநிறம். சிறுகடை ஒன்றில் இருப்பாள். சென்ற மாதம் எதோ வாங்கின போது சடசட வென நிறுத்தி...
சிறுகதை

கடைசியாக ஒரு கவிதை

ததும்பிக் கொண்டிருந்தது சந்தோஷம். எக்கணமும் வழியத் தயாராகி விட்டதைப் போலவும்கூட. கடகடவென பறந்து வந்து அமரும் புறாக்களாக, மனதில் முகிழ்த்த கவிதைக்கான வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன. பூக்களின் பின்னணியில், வண்ணத்துப் பூச்சிகளின் சிறகடிப்புகளைப் போல உணர்வுகள் நுரைத்துக் கொண்டிருக்க ஜோவிற்கு சிறகுகள் முளைத்திருந்தன. மனதுள் பதிந்து கொண்டிருந்த காட்சிகள், இன்றைக்கென்று அப்படியானதொரு லயத்தில் ஒரு ஸிம்பனிக்கான காட்சிக் கோப்புகளைப் போல அமைந்திருந்தன. அது மழையென்று சொல்ல முடியாத ஊட்டிக்கே உரித்தானதொரு...
1 2 3 5
Page 1 of 5

Right Click & View Source is disabled.

error: Content is protected !!