தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் ரயில்வே பாதையில் சர்வீஸ் ரோடு அமைக்க காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சுரங்கபாதை அல்லது இணைப்பு சாலை அமைக்க பொதுமக்கள் 2000 பேர் கையெழுத்து.

140views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் செல்லும் வழியில் ரயில்வே பாதை உள்ளது தற்பொழுது மேம்பாலம் கட்டப்பட்டு மேம்பாலத்தில் போக்குவரத்து நடைபெற்று வந்தாலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ரயில்வே பாதையை கடந்து சென்று வர பாதிப்பு ஏற்படுகிறது இதனை தவிர்க்க மத்திய அரசு (சர்வீஸ் ரோடு ) இணைப்பு சாலை அல்லது சுரங்க பாலம் அடைத்து தர கோரிக்கை வலியுறுத்தி பெரிய ரதவீதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்க போராட்டத்தில மாநில செயலாளர் பழனிகுமார், நகரத் தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட தலைவர் சுப்பிரமணி, வட்டாரா தலைவர் காசிநாதன் ஆகியோர் பேருந்து நிலையம் அருகே பொது மக்களிடம் இரயில் சுரங்கபாதை, அல்லது இணைப்பு சாலை அமைத்து கையெழுத்து பெற்றனர். 2000க்கும் மேற்பட்ட பொது மக்கள் கையெழுத்துட்டனர்.
பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து களை மதுரை ரயில்வே மண்டல மேலாளாரிடம் அளிக்க உள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!