Uncategorizedதமிழகம்

காட்பாடி சன்பீம் பள்ளி ஆண்டு விழா : சி.எம்.சி. மருத்துவமனை இணை இயக்குநர் பரிசுகள் வழங்கி – பாராட்டு

37views
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, மெட்டுக்குளம் பகுதியில் உள்ள சன்பீம் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா “சன்பீம் டே–2026” சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சன்பீம் பள்ளிகளின் தாளாளர் முனைவர் தங்க பிரகாஷ் மற்றும் துணைத்தலைவர் ஜார்ஜ் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளஸ்–2 மாணவர் மோனிஷ் வரவேற்புரை வழங்கினார். மாணவி கேசில்டா ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். மாணவி எல்லோசியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சன்பீம் பள்ளிகளின் தலைவர் அரிகோபாலன் தலைமை வகித்து பேசுகையில், “ஆசிரியர்கள் வகுப்பறைக்குச் செல்லும் முன் தங்களை தினந்தோறும் புதுப்பித்துக் கொண்டு, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும். அதேபோல், தினசரி நிகழ்வுகள் மற்றும் சமகால தகவல்களையும் தொடர்ந்து அறிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நல்ல பாலமாக இருந்து உறுதுணையாக செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதில் சிறப்பு விருந்தினராக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை இணை இயக்குநர் உதய் ஜார்ஜ் ஷகாரியா கலந்து கொண்டு பேசுகையில், “சன்பீம் பள்ளிகளின் கல்வி, ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவத்தை வளர்க்கும் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை. மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தங்களைப் பற்றி பிறர் கூறும் விமர்சனங்களை பொருட்படுத்தாமல், தங்களது குறிக்கோளை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 395-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. சிறந்த கல்வி செயல்பாட்டிற்காக பட்டேல் அணிக்கும், இல்லப் போட்டிகளில் ஒட்டுமொத்த முதலிடம் பெற்ற நேரு அணிக்கும் விருதுகள் மற்றும் சுழற்கேடயம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சன்பீம் பள்ளிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!