இலங்கை ஐஸ் போதைப்பொருள் – ஒரே வாரத்தில் ரூ. 128 கோடி மதிப்புள்ள பாக்கெட்டுகள் பறிமுதல்
இலங்கையில் கடந்த காலங்களில் ஐஸ் போதைப்பொருள் அதிகளவில் பறிமுதல் செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த ஒரு வார காலமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக 128 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள சுமார் 128 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் இரண்டு பெண்கள் உள்பட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர்...