தமிழகம்

ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற அரிதான ஆட்டோ இம்மியூன் (Auto Immune) நோய்க்கு இந்தியாவில் சிகிச்சையளிக்கும் முதல் மருத்துவமனை என்ற பெருமையை பெறும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை

82views
2016-ம் ஆண்டில் முதலில் வரையறை செய்யப்பட்ட GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற Auto Immune நோய், உடல் மற்றும் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிவிரைவான மாற்றங்களை விளைவிக்கக்கூடும் மூளை மற்றும் முதுகுத்தண்டில் பல்வேறு தொற்று / அழற்சி நிலைகளைப் போலவே இந்நோயின் அறிகுறிகளும் தோன்றக்கூடும் என்பதால் இதை சரியாக அடையாளம் கண்டு உறுதி செய்வது சவாலாகும்.
தென்தமிழ்நாட்டின் முன்னணி பன்முக சிறப்பு மருத்துவமனை என புகழ் பெற்றிருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மூளை மற்றும் முதுகுத்தண்டின் இயக்கங்களை பாதிக்கின்ற அரிதான மற்றும் சமீபத்தில் வரையறை செய்யப்பட்டிருக்கும் ஒரு Auto Immune நோயான ஆட்டோ இம்யூன் GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி கண்டறியப்பட்ட 31 வயதான ஒரு பெண்மணிக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. இந்தியாவில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இன்டராவீனஸ் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் சீராய்டு மருந்துகளை கொண்டு 10 நாட்கள் வழங்கப்பட்ட சிகிச்சையைத் தொடர்ந்து இந்த பெண் நோயாளி அவரது பாதிப்பிலிருந்து முழுமையாக குணம் பெற்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து நலமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உடலின் நோயெதிர்ப்பு மண்டலமானது, நரம்பு மண்டலத்திலுள்ள Glial Fibrillary Acidic Protein (GFAP) என அறியப்படும் ஒருவகை புரதத்தை தாக்கும்போது 2016-ம் ஆண்டில் முதன் முறையாக வரையறை செய்யப்பட்ட GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற நோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஸ்டீராய்டுகளைக் கொண்டு இதற்கு சிகிச்சையளிக்க முடியும் என்றாலும் கூட, வேறு வகையான நரம்பு மண்டல தொற்றுகளின் அறிகுறிகளைப் போலவே இந்நோயின் அறிகுறிகளும் இருக்கின்றன. ஆகவே, இந்நோயை சரியாக அடையாளம் கண்டு உறுதி செய்வது ஒரு சவாலாக இருக்கும். இங்கு சிகிச்சைக்கு வந்த இப்பெண் நோயாளியின் பாதிப்பும் இதிலிருந்து மாறுபட்டதல்ல. காய்ச்சல், தலைவலி, நடத்தை சார் செயல்பாட்டில் மாற்றம், 2 வார காலம் இருந்த உடலின் கீழ்ப்பகுதி பக்கவாதம் ஆகிய அறிகுறிகள் அவருக்கு இருந்தன. இந்த அறிகுறிகள் அனைத்துமே பொதுவாக ஒரு CNS தொற்றை சுட்டிக்காட்டுவதாக இருக்கும்.
எனினும், இப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட கவனமான பரிசோதனையும், சிறப்பு சோதனைகளும் இந்த அரிதான நோய், உரிய கால அளவிற்குள் துல்லியமாக கண்டறியப்படுவதற்கு வழிவகுத்தது. இன்டராவீனஸ் முறையில் ஸ்டீராய்டுகள் செலுத்தப்படுவதை உள்ளடக்கிய சரியான சிகிச்சை வழிமுறைகளை மூளை – நரம்பியல் துறை தீர்மானித்தது. இந்த சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்த இந்நோயாளி நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நோய் பாதிப்பு மீண்டும் வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உரிய நேரத்திற்குள் சரியான மருத்துவ சிகிச்சை செய்யப்படவில்லை என்றால், நரம்பு மண்டலத்தை சிதைக்கும் நோய்களுக்கும், உயிரிழப்பிற்கும் கூட இப்பாதிப்பு நிலை வழி வகுத்திருக்கும். அவசியமில்லாத பிற மருந்துகளை உட்கொள்ளாத நிலைக்கும் மற்றும் தொடர் விளைவுகள் இல்லாமல் குணமடைந்து இயல்பு நிலைக்கு மீள்வதற்கும் இந்த இந்த துல்லியமான நோயறிதல் உதவியிருக்கிறது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நரம்பியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் டி.சி.விஜய் ஆனந்த், இன்று நடத்தப்பட்ட ஊடகத்துறை சந்திப்பு நிகழ்வில் இந்த அரிதான நோய் குறித்து கூறியதாவது: “GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற Auto Immune நோய், உடல் மற்றும் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிவிரைவான மாற்றங்களை விளைவிக்கக்கூடும். இந்நோய் பாதிப்பு நிலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உறுதி செய்வது தான் சவாலான விஷயம். மூளையை மூடியிருக்கின்ற திசுக்களின் தொற்று பாதிப்பு நிலைகளான meningitis, மூளைக்காய்ச்சல், மூளையின் அழற்சி நிலைகள் அல்லது மூளை மற்றும் தண்டுவடம் ஆகிய இரண்டிலும் காணப்படும் அழற்சி பாதிப்பான மூளை தண்டுவட அழற்சி போன்ற மாறுபட்ட நோய் பாதிப்பு நிலைகளை நோயாளிகள் கொண்டிருக்கக்கூடும். வழக்கமான மைக்ரோபயாலஜிக்கல் (நுண்ணுயிர்) சோதனைகளுக்கும் கூடுதலாக, இந்த அரிதான நோய் நிலைக்கான சான்றை கண்டறிவதற்கு தனிச்சிறப்பான பரிசோதனைகள் தேவைப்படுகின்றன எனவே துல்லியமான காரணத்தை கண்டறிந்து உறுதி செய்வதற்கு முன்னதாகவே நோயாளிகளுக்கு பட்டறிவு / அனுபவம் சார்ந்த சிகிச்சை வழங்கப்படுகிறது; மைய நரம்பு மண்டலத்தின் பாதிப்பு நிலைகள் இன்னும் மோசமாகாமல் தடுப்பதற்காக அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சிகிச்சையே இது. வழக்கமாக இன்டராவீனஸ் வழியாக செலுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகளுக்கு GFAP ஆஸ்ட்ரோபதி நோயானது குணமடைதலுக்கான பதில் வினையாற்றும்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நரம்பியல் துறையின் மருத்துவர் நரேந்திரன் இந்நோயாளிக்கு செய்யப்பட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விளக்கும்போது, “இந்த பெண் நோயாளிக்கு காய்ச்சல், தலைவலி பிரச்சனைகள் இருந்தன. சிறுநீர் பை நிரம்பிய உணர்வு இருந்தபோதிலும் கூட, சிறுநீர் கழிப்பது சிரமமானதாக இவருக்கு இருந்தது. உடலின் இரு பக்கங்களிலும் கீழ்ப்புற உறுப்புகளில் (இடுப்பிற்கு கீழே) பலவீனமும் மற்றும் அவரது உணர்திறன் கண்ணோட்டங்கள் மாற்றமடைய தொடங்கிய நிலையில் எமது மருத்துவமனைக்கு இப்பெண்மணி அழைத்து வரப்பட்டார். கழுத்தில் விரைப்புத்தன்மையும், மார்பிற்கு கீழே உணர்திறன் இழப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார். அனுபவத்தின் அடிப்படையில் சிரை வழியாக செலுத்தப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை கொண்டு தொடக்கத்தில் இவருக்கு நாங்கள் சிகிச்சை அளித்தோம்.” என்று கூறினார்.
அவர் மேலும் பேசுகையில்: “அதன்பிறகு Auto Immune நோயான GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி உட்பட தொற்றுக்கான சான்றை கண்டறிவதற்கு பல்வேறு சிறப்பு பரிசோதனைகளை நாங்கள் மேற்கொண்டோம். பிற தொற்றுகள் மற்றும் அழற்சி பாதிப்பு நிலைகள் இல்லை என்று உறுதி செய்து விலக்குவதற்காக AFS, TB-PCR, மான்டெக்ஸ் மற்றும் பிற சோதனைகளை நாங்கள் இவருக்கு செய்தோம். இப்பெண்ணின் மூளை மீது செய்யப்பட்ட PET-CT பரிசோதனை, உரிய நேரத்திற்குள் துல்லியமான நோயறிதல் முடிவை எட்டுவதில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. இறுதியாக, முதுகுத்தண்டு மற்றும் மூளை காயத்திலிருந்து பாதுகாக்கின்ற ஒரு தெளிவான திரவமான செர்பிரோ ஸ்பைனல் ஃபுளூயிட் என்பதில் செய்யப்பட்ட GFAP-இம்யுனோகுளோபுளின் G (IgG) பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு அறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிகிச்சைகளை சீராக்கி வழங்கினோம். 10 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு முன்பிருந்த பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டதாலும், அப்பாதிப்பு நிலை திரும்ப வருவதற்கான அறிகுறிகள் ஏதும் வெளிப்படாததாலும் நலமுடன் மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.” என்று குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது, *மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிர்வாகி டாக்டர். கண்ணன் அவர்களும் உடனிருந்தார். “தமிழ்நாட்டில் நரம்பியல் தொடர்பான நிலைகளுக்கு சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவமனைகளுள் நேர்த்தியானதாக மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் புகழ் பெற்றிருக்கிறது. மூளை, முதுகுத்தண்டு, நரம்பு வேர்கள், தசை நரம்பு சந்திப்பு அமைவிடங்கள், தசைகள் மற்றும் நரம்புகளின் பின்னல் தொடர்பான நோய்களுக்கு மூளை நரம்பியல் துறை சிகிச்சையளிக்கிறது. வெவ்வேறு துறைகளுக்கிடையே செயல்படும் ரெஃபரல் என்ற நவீன அமைப்பு முறையைக் கொண்டு மிக நவீன மூளைக்காய்ச்சலுடன், நுரையீரல்களில் காசநோய் போன்ற அரிதான நோய் பாதிப்புகளையும், சிக்கல்களையும் இது கண்டறிந்து உரிய சிகிச்சையை வழங்கி வருகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!