மருத்துவம்

உடலில் தொந்தரவுகள் ஏற்பட காரணம் என்ன?

294views
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று வாழ்ந்தனர் நம் முன்னோர்கள் ஆனால் இன்றோ சாதாரண சளித் தொந்தரவுகளையும் நோய்களாக  பார்த்து பயம் கொள்கிறது இன்றைய சமூகம். இந்த அவலநிலைக்கு காரணம் மனிதர்கள் இயல்பான இயற்கை வாழ்வியலை மறந்து விட்டார்கள் என்பதே அன்றி வேறில்லை.
உடலில் தொந்தரவுகள் ஏற்பட காரணம் என்ன? அவை தீர்க்க முடியாத நோய்களாக இக்கால மனிதர்கள் நினைப்பதேன்?உணவே மருந்து என வாழ்ந்தனர் நம் முன்னோர்கள் இன்றோ மருந்தில்லாமல் மனிதர்கள் வாழ முடியாது என்ற அவலநிலைக்கு காரணம் என்ன?மருந்தில்லா வாழ்வு அனைவருக்கும் சாத்தியமா? இக்கேள்விகளுக்கான விடை நம் ஒவ்வொருவரின் வாழ்வியலிலும் ஒளிந்துள்ளது.

வாழ்வியல் என்றால் இயல்பாக வாழ்வது என்று கூறலாம்.இயல்பு என்பது தனித்துவமானது.ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மையுடையவர்கள்.இத்தனித்தன்மையை உணர்ந்து செயல்பட்டால் எல்லோராலும் ஆரோக்கியமாக வாழ முடியும்.
இத்தனித்தன்மையை உணர வைக்கிறது மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் மருத்துவம்.அக்குபங்சர் மருத்துவமானது இயல்பான வாழ்க்கை அறிவியலை அடித்தளமாக முன்வைக்கிறது.இவ்வாழ்க்கை அறிவியலை பின்பற்ற துவங்கிவிட்டால் உடலும் மனமும் ஆரோக்கியத்தை நோக்கி நகரத்துவங்கும்.வாங்க வாழ்க்கை அறிவியலை அறிந்து கொண்டு நாமும் நம் எதிர்கால சந்ததியும் ஆரோக்கிய வாழ்வினை வாழ்ந்திடலாம்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் விடியல் என்பது சுகமாக இருக்க வேண்டுமெனில் இரவு தூக்கமானது சரியாக இருக்க வேண்டும். இரவு உணவானது மிக மிக எளிமையானதாக இருக்க வேண்டும். 9 லிருந்து 10 மணிக்குள் தூங்கி விட வேண்டும்.இவ்வாறு செய்யத் துவங்கும் போது உடலின் கழிவுகள் எளிமையாக பிரித்தெடுக்கப்பட்டு காலை விடியலானது புத்துணர்வுடன் இருக்கும். நம் உடல் அன்றாடம் வெளியேற வேண்டிய கழிவுகளை மிக மிக எளிமையாக சுகமாக வெளியேற்றி நாள் முழுதும் ஆற்றலுடன் இயங்க செய்யும்.
இவ்வாறு கழிவுகள் வெளியேறிய பிறகு உடல் பசி எனக் கேட்கும் போது அவரவர் தேவைக்கு உணவு உண்ண வேண்டும்.மூன்று வேளை உண்ண வேண்டியதில்லை.பசிக்கும் போது அவரவருக்கு பிடித்த உணவுகளை உண்ண வேண்டும்.பசியில்லாமல் நாம் எடுக்கும் ஒரு பருக்கை உணவும் கழிவாகதான் மாறுகிறது.

அது போல் தான் தண்ணீரும் தாகம் எடுக்கும் போது தான் தண்ணீரும் குடிக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் லிட்டர் கணக்கில் நீர் அருந்த தேவையில்லை.அவரவர் தேவைக்கு குடித்தால் அந்த நீரானது உடலுக்கு ஆற்றலை தரும்.தேவையில்லாமல் குடிக்கும் நீரும் நம் உடலில் கழிவுகளாகத் தான் மாற்றமடையும்.
உடல் ஓய்வை வலிகள் மூலமாகவே நமக்கு உணர்த்துகிறது.கால் வலி என்றால் கால்களுக்கு அதிகமாக வேலை கொடுத்து விட்டாய் அதற்கு ஓய்வு கொடு என உடல் தன் மொழியில் கெஞ்சுகிறது.நாமோ என்னுடைய வேலை தான் முக்கியம் என உடலின் உணர்வுகளை மதிப்பதில்லை.   அந்த வேலையை சிறப்பாக செய்ய உடல் சரியாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம்.உடலிற்கு தேவையான பொழுது ஓய்வைக் கொடுக்கவில்லை என்றால் உடலில் தொந்தரவுகள் ஏற்படும்.உடலிற்கு வேலையே கொடுக்காமல் இருந்தாலும் தொந்தரவு ஏற்படும்.
தூக்கம்,பசி,தாகம்,ஓய்வு இவை அனைத்தும் உடலின் அறிவிப்புகள் ஆகும்.உடலின் அறிவிப்புகளை புறக்கணிக்கும் போது அவை கழிவுகளாக தேக்கமடையத் துவங்குகிறது.இவ்வாறு தேக்கமடைந்த கழிவுகளை உடலானது சளியாகவும்,காய்ச்சலாகவும்,வாந்தியாகவும்,பேதியாகவும்,கட்டிகளாகவும்,அரிப்புகளாகவும் வெளியேற்ற துவங்குகிறது.

நம்முடைய புரிதல் இன்மையால் இக்கழிவு வெளியேற்றத்தை மருந்துகள் கொண்டு அடக்கி வாழ்நாள் தொந்தரவுகளாக மாற்றி நோய்களை நாம் தான் உருவாக்குகிறோம்.இக்கழிவுகளை வெளியேற்ற போதிய ஆற்றல் இல்லாமல் உடலானது சிரமப்படத் துவங்குகிறது.
மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் சிகிச்சையால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. அக்குபங்சர் புள்ளிகளை விரலால் அல்லது ஊசி மூலம் தூண்டும் போது தேக்கமடைந்த கழிவுகள் உடலிலிருந்து எளிமையாக வெளியேறி உடலும் மனமும் ஆரோக்கியத்திற்கு திரும்புகிறது.அக்குபங்சர் வாழ்வியலை பின்பற்ற துவங்கியவுடன் கழிவுகள் தேக்கமடைவது குறைகிறது.இதனால் ஆரோக்கிய வாழ்வானது கிடைக்கிறது.ஆரோக்கிய உடலும் மனமும் இணைந்து மகிழ்வான வாழ்க்கையை நமக்கு அளிக்கிறது.இப்பேரிடர் காலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட நிகழ்காலத்திலிருந்தே வாழ்வியலை கடைப்பிடிக்க துவங்கிடுங்க…
அக்கு ஹீலர் K.B. முகமது அலி, Bsc.,D.A.Sc 
Mobile:  9790764704

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!