தமிழகம்

சிவகாசியில், மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு ஏராளமான முருக பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கம்

116views
மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூர், பழனி முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி கோவிலில், இன்று மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. இன்று மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை செல்வதற்காக மாலையணிந்து விரதம் துவக்கினர்.
இன்று மாலையணிந்த பக்தர்களில் பெரும்பாலானவர்கள் திருச்செந்தூருக்கு தைப் பொங்கல் அன்றும், பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம் அன்றும் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். இன்று சிவகாசி பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கியுள்ளனர். மேலும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில், பஜனைக் குழுக்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சிவகாசியில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் பஜனைப் பாடல்களை பாடிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருவார்கள்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!