தமிழகம்

மதுரை சோலை அழகு புறத்தில் உள்ள சத்திய விநாயகர் ஆலயத்தில் இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

61views
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்து இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
9ஆம் தேதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜை ஆரம்பித்தது.
10 -ம் தேதி சனிக்கிழமை இரண்டாம் கால யாக வேள்வி துவங்கி கோபுர கலச பிரதிஷ்டை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ருத்ரஜெபம், வேத பாராயணம் நடைபெற்றது அதோடு பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் கால யாக வேள்வி துவங்கியது.
11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று காலை நான்காம் கால யாக வேல்வியுடன் பூஜை ஆரம்பித்தது. அதோடு கோ பூஜை, சுமங்கலி பூஜை கன்னியா பூஜை, வடுக பூஜையை தொடர்ந்து உயிர் ஊட்டுதல் என பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
காலை 10.45 மணி அளவில் சுப லக்னத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து விநாயகர் மற்றும் ஸ் அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர்,தேன், விபூதி, மஞ்சள் என பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, மகா தீபாரணையும் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!