தமிழகம்

பாலமேடு அருகே சாத்தியார் அணையின் கொள்ளளவை உயர்த்த வெங்கடேசன் எம் எல் ஏ விடம் விவசாயிகள் கோரிக்கை.

47views
மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் பாலமேடு சாத்தியார் அணைபாசன விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட சோழவந்தான்தொகுதியின் எம்.எல்.ஏ வெங்கடேசன் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுகொண்டார்.
அப்போது பேசிய விவசாயிகள் ;- சாத்தியார் அணை 1965 ம் ஆண்டு கட்டபட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே அணை இதுவாகும். ஆனால் 26 அடி உயரம் கொண்ட சாத்தியார் அணையை இதுவரை தூர்வாராமல் இருப்பதால் அணைக்குள் 15 அடிக்கு வண்டல் மண் நிரம்பியுள்ளது. இதனால் முழுமையாக தண்ணீரை தேக்க முடியவில்லை. மழை அதிகமாக பொழியும் காலங்களில் 10 பாசன கணமாய்கள் நிரம்பிய நிலையிலும், உபரிநீரை தேக்கமுடியாமல் வீட்டடி நிலங்களில் தண்ணீர் பாய்ந்து வீணாகிறது.
இதனை தடுக்க அணையின் நீர்பிடிப்பு பகுதியை அதிகரித்து கொள்ளளவை உயர்த்த வேண்டும். இதற்கு அணையின் அருகே உள்ள சிறிய குன்றை அகற்றி முறையாக, முழுமையாக தூர்வாரவேண்டும்.
மேலும் பருவ மழை பொய்க்கும் காலங்களில் வைகைபெரியாறு பாசன கால்வாயிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சாத்தியார் அணையில் தண்ணீர் தேக்க நிரந்தரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் அனைவரும் கோரிக்கை வைத்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!