தமிழகம்

தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் சார்பாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

104views
தேனி மாவட்டம் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்இன்று டாட்டா எலக்ட்ரானிக்ஸ் சார்பாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் 18 வயது முதல் 26 வயதில் வரை உள்ள பெண்களுக்கு 16 ஆயிரத்து 577 வருடத்திற்கு ஒரு லட்சத்து 97 ஆயிரம் சம்பளத்தில் டாடா நிறுவனம் சார்பாக ஆட்களை தேர்வு செய்தார்கள்.
இந்த தேர்வில் மூன்று விதமாகநடைபெறுகிறது தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு உத்தரவை உடனே வழங்குகிறார்கள். ஆகவே பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென தேனி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் அவர்கள் தலைமையிலும் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயண மூர்த்தி அவர்கள் முன்னிலையும் தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து டாட்டா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றவரை வேலை வாய்ப்பு உத்தரவு உத்தரவு எப்படி என்ன விவரம் என்ற அனைத்து விவரங்களும் சேகரித்து பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா என்ற கோணத்திலும் தேர்வு செய்து தொடங்கி வைத்தார்.

இதில் ஏராளமான 12 ஆம் வகுப்பு முடித்த பெண்கள் கலந்து கொண்டனர் இதில் தேனி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் முதல்வர் சேகரன் அலுவலர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!