தமிழகம்

திருமங்கலம் அருகே கருவேலம்பட்டி கிராமத்தில் , குடியிருப்பு பகுதிக்குள் பகல் நேரத்தில் திடீரென மின் கம்பம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு – அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை

189views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கருவேலம்பட்டி கிராமத்தில் உள்ள இந்திரா காலனி பகுதியில், கடந்த சில வருடங்களாகவே மின்சாரத்துக்காக மின் வயர்கள் இணைப்புக்கான காங்கிரிட் தூண்கள் சேதம் அடைந்துள்ளது குறித்து, பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் , மின்வாரியத் துறையினர் அலட்சியப்படுத்தியதால் ,  இன்று காலை திடீரென அந்த மின் கம்பம் அடியோடு சரிந்து கீழே விழுந்தது .சிறிது நேரத்திற்கு முன்பு அதன் அருகில் மூன்று பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், அதனை தொடர்ந்து மின்கம்பம் சரிந்ததால் ,பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.  மின்வாரியத்துறையின் அலட்சியப் போக்கினால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!