தமிழகம்

திருமங்கலம் அருகே 40 ஆண்டுகளுக்கு மேலாக சமுதாயக் கூடத்தில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளி – மழைக்காலங்களில் சேதம் ஆகியுள்ள கட்டிடத்தில் மழைநீர் உள்ளே புகுவதால், மாணவ , மாணவிகள் பாதுகாப்பின்றி கல்வி பாதிப்பு – கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது , கிராம மக்கள் பலமுறை , எம்.எல்.ஏ உதயகுமார் (அதிமுக) – யிடம் முறையிட்டும் அலட்சியப்படுத்தியதாக குற்றச்சாட்டு.

115views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட புளிய கவுண்டன்பட்டியில் , 500 – க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள சமுதாயக் கூட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக அங்குள்ள மேற்கூரை ஓடுகள் பெயர்ந்து விரிசல் ஏற்பட்டு , மழை நீர் உள்ளே புகுந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி பாதிப்பு ஏற்படும் வகையில் இருப்பதுடன், அங்கு குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், பெரும் அவதியுற்றதுடன் , இதுகுறித்து கடந்த ஆட்சி காலத்தில் மாவட்ட நிர்வாகத்திடமும் /எம்எல்ஏ ஆர் .பி. உதயகுமாரிடமும் பலமுறை முறையிட்டும் , எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .  இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலினிடம் கிராம மக்கள் , பள்ளி சமுதாயக்கூடத்தில் இயங்கி வருவதை தவிர்த்து, கிராம மக்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கியுள்ள 20 சென்ட் நிலத்தில் அரசு பள்ளியை கட்டி தர கோரி , தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

மேலும் இங்கிருந்து தங்களது குழந்தைகளை 15 கிலோ மீட்டர் தொலைவில் திருமங்கலம், செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு பள்ளிக்கு அனுப்பக்கூடிய சூழ்நிலை உள்ளதால், பாதுகாப்பு இன்றி உள்ளதாகவும், கடும் கஷ்டத்தில் வாழும் தொழிலாளர் குடும்பங்கள் இங்கு வசித்து வருவதால்,  அரசு பள்ளியை இக்கிராமத்தில் அமைத்து தர வேண்டுமென தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!