தமிழகம்

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைப்பந்து (வாலிபால்) போட்டியில் சாம்பியன்

49views
மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் அண்ணாபல்கலைக்கழக 16 வது மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கிடையிலான கைபபந்து போட்டியில் மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 அணிகள் நாக்அவுட் முறையில் விளையாடின.
இதில் முதல் அரை இறுதிப்போட்டியில் மதுரை அண்ணாபல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அணியும், கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணியும் மோதியதில் கீழக்கரை, முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரை இறுதிப்போட்டியில் காரைக்குடி, அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி அணியும், இராஜ இராஜன் பொறியியல் கல்லூரி அணியும், மோதியதில் காரைக்குடி, இராஜ இராஜன் பொறியியல் கல்லூரி அணிவெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது.
இறுதிப்போட்டியில் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணியும், இராஜ இராஜன் பொறியியல் கல்லூரி அணியும் காரைக்குடி, இராஜ இராஜன் பொறியியல் கல்லூரி அணியும் மோதியதில் கீழக்கரை, முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
அண்ணா பல்கலைக்கழக 16 வது மண்டல அளவிலான வாலிபால் போட்டியில் தொடர்ந்து 9 முறை சாம்பியன் பட்டம் வென்ற கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரி அணி விளையாட்டு வீர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் ஆகியோரை முஹம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் SM முஹம்மது யூசுப், செயலாளர் SMH சர்மிளா, நிர்வாக இயக்குனர் PRL ஹமீது இப்ராஹிம், இயக்குனர் SMAJ ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் இரா செந்தில்குமார் மற்றும் கல்லூரியின் திட்டமிடல் அதிகாரி முனைவர் திராவிடச்செல்வி, கல்லூரியின் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டினார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!