உலகம்

துபாயில் ஈரோடு இ.கே.எம். முஹம்மது தாஜ் முஹ்யித்தீன் எழுதிய ‘திருக்குர்ஆன் கருத்துக்கோவை’ நூல் வெளியீடு

24views
துபாய் :
துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் வளைகுடா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஈரோடு இ.கே.எம். முஹம்மது தாஜ் முஹ்யித்தீன் எழுதிய ‘திருக்குர்ஆன் கருத்துக்கோவை’ நூல் வெளியிடப்பட்டது. நூலை டிவைன் பிளாக் மஜ்லிசின் நிறுவனர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் வெளியிட முதல் பிரதியை வளைகுடா தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் முதுவை ஹிதாயத் பெற்றுக் கொண்டார்.
அப்போது பேசிய முஹிப்புல் உலமா ஏ. முஹமம்து மஃரூப், ஈரோடு இ.கே.எம். முஹம்மது தாஜ் முஹ்யித்தீன் அவர்கள் திருக்குர்ஆனின் கருத்துக்களை அழகிய முறையில் தொகுத்தி இளம் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் ‘திருக்குர்ஆன் கருத்துக்கோவை’ என்ற நூலாக வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்தம் இலக்கியப் பணிகள் சிறப்புடன் தொடர வாழ்த்துகிறேன் என்றார்.  நிகழ்ச்சியில் காயல் அவுலியா ஆலிம், ஜமால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!