உலகம்

துபாய் பொது நூலகத்துக்கு திருக்குறளின் அரபி மொழி பெயர்ப்பு உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

25views
துபாய் :
துபாய் அரசின் சார்பில் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் பொது நூலகம் செயல்பட்டு வருகிறது.  இந்த நூலகத்தில் அரபு மற்றும் ஆங்கில நூல்கள் உள்ளன. மேலும் இங்கு இலக்கிய நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வகையில் பிரத்யேக அறைகளும், மாணவர்களுக்கான சிறப்பு நூலகமும் செயல்பட்டு வருகிறது.  இதனால் இந்த நூலகத்துக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.  இந்த நூலகத்துக்கு இந்திய அரசின், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நூல்களை நூலக மேலாளர் சுமையாவிடம் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகில் உள்ள வரவணி என்ற கிராமத்தை சேர்ந்த பேராசிரியர் முனைவர் பஷீர் அஹமது ஜமாலி. இவர் திருக்குறளை அரபி மொழியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார். மேலும் தொல்காப்பியத்தையும் அரபி மொழியில் மொழி பெயர்த்துள்ளார். மேலும் இந்திய சிறுகதைகளும் அரபி மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.  திருக்குறளின் அரபி மொழி பெயர்ப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்பட்டது.  இந்த நூல்கள் நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  பேராசிரியர் பஷீர் அஹமது ஜமாலி புதுடெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் அரபி மொழி பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  இவர் திருக்குறளை அரபி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள முதல் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நூல்களை பெற்றுக் கொண்ட நூலக மேலாளர் இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் ஆர். சந்திரசேகரனுக்கும்,  பேராசிரியர் பஷீர் அஹமது ஜமாலிக்கும் நன்றி தெரிவித்தார். இந்திய இலக்கியங்கள் அரபி மொழியில் மொழிபெயர்க்கப்படுவதன் மூலம் அரபி மொழி வாசகர்களை அதிகம் சென்றடைய உதவியாக இருக்கும் என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!