இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயம்.. எதற்கெல்லாம் அனுமதி..? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..? வெளியான முழு விவரம்..!
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பயணம் செய்வதற்கு இ-பதிவு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத ஊடங்ககும், மற்ற நாட்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது. ஆனாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போது ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் வெளியில் பயணம் செய்வோர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் இ-பதிவு செய்வது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த இ-பதிவு முறை இன்று (17.05.2021) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய பணிகளான மருத்துவ சிகிச்சை, திருமணம், இறப்பு...