கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருந்த தாய்க்காக அவரது மகன் செல்போனில் வீடியோ கால் மூலம் பாட்டு பாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த கொரோனா காலத்தில் இறந்தவரின் முகத்தை கூட உறவினர்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வைரஸ் என்று பேராபத்தால் இறுதி சடங்குகளை கூட செய்ய முடியவில்லை. அந்தவகையில் தான் இறக்கும் தருவாயில் இருந்த தனது தாயை செல்போன் வீடியோ கால் மூலம் பார்த்துள்ளார் அவரது மகன்.
தெற்கு டெல்லியைச் சேர்ந்த சங்கமித்ரா சாட்டர்ஜி (70) என்பவர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வாரத்துக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த போதிலும் , அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வந்தது .
ஒருகட்டத்தில் , அவர் இறந்துவிடுவார் என்பதை அறிந்த மருத்துவர்கள் , யாருடனாவது பேச விருப்பமா எனக் கேட்டுள்ளனர் . அதற்கு , தனது மகன் சோஹம் சாட்டர்ஜியுடன் பேச விரும்புவதாக அவர் கூறினார் .
இதையடுத்து , சோஹம் சாட்டர்ஜியை வீடியோ அழைப்பு மூலமாக தொடர்பு கொண்ட மருத்துவர்கள் , அவரது தாயாரின் நிலையை எடுத்துக்கூறி , மகிழ்ச்சியாக ஏதேனும் பேசுங்கள் எனக் கூறினர் . பின்னர் தாயும் , மகனும் சில நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர் .
செல்போனில் மகனை பார்த்த மகிழ்ச்சியில் பேசிய சங்கமித்ரா , தனக்காக ஒரு பாடல் பாடுமாறு கேட்டுள்ளார் . இதனைத் தொடர்ந்து , அவரது மகனும் பழைய இந்தி பாடல் ஒன்றை பாடினார் . அதனை உணர்ச்சி ததும்ப கேட்டுக் கொண்டிருந்த சங்கமித்ரா , சிறிது நேரத்தில் உயிரிழந்தார் .
இந்த வீடியோ காட்சியை அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதற்கு லட்சக்கணக்கானோர் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர் .
188views
You Might Also Like
வேலூர் சாய்நாதபுரம் பகுதியில் காணாற்றில் தூர்வாரப்பட்டது.
வேலூர் மாநகராட்சி ஆணையர் கேத்ரீன்சரண்யா உத்தரவுப்படி வடகிழக்கு பருவமழை எச்சரிக்கையாக வேலூர் சாய்நாதபுரம் ஆர்.வி.நகர் பகுதி காணாற்றில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் தூர்வாரப்பட்டது. படங்கள்:தூர்வாரும்...
வேலூரில் பணியாளர் சங்கத்தில் ஆயுதபூஜை
வேலூர்சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆயுத பூசை மாநில கவுரவ தலைவர் சி.ராஜவேலு தலைமையில் நடந்தது. இதில் அலுவலக...
ஆவடி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்
சென்னை ஆவடி மாநகராட்சியில் மழை தேங்கும் பகுதிகளில் நீரை அகற்றுதல், மழைநீர் வடிகால்களை தூர்வாரும் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பு அலுவலர் தர்பக ராஜ், ஆவடி மாநகராட்சி...
காட்பாடியில் புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலசங்க அலுவலகத்தில் ஆயுதபூஜை
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை உள்ள புதிய பாரதம் அமைப்புசாராமற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில அலுவகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூசை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கி நிறுவனத்...
வேலூரில் LION GLUBOF SARAL WOMEN -ல் நலத்திட்ட உதவிகள்
வேலூர் ஹோட்டல் கண்ணா அரங்கில் லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் LionGlub of Saral Women சங்கத்தின் 12ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. வேலூர் Golden Temple...




