தமிழகம்

தமிழகம்

பாடகர், நடிகர் மாணிக்க விநாயகம் காலமானார்

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் நேற்று சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் காலமானார். அவருக்கு வயது 78. மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரை சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் இராமையாவின் இளைய மகன் மாணிக்கவிநாயகம். இவர், பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்களையும் பாடியுள்ளார். திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அவரின் இறுதி அஞ்சலி இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான வழுவூர் மாணிக்க விநாயகம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது...
தமிழகம்

கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கொரோனா பரவல் அச்சத்திற்கிடையே கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஏசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. ஏசு பிறந்த போது 'ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று' என்கிறது விவிலியம். அதாவது ஆளும் அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரம் அவரது வருகையால் கலங்கிப்போனது. பிறக்கும்போதே சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய குழந்தை ஏசு பிரான். தேவன் எங்கும் இருப்பவர், ஒரே நேரத்தில். தேவன் எல்லாம் அறிந்தவர். தேவன் எல்லாம் வல்லவர் என்கிறது தேவனுடைய வேத ஆகமம். மண்ணில் பிறந்த மக்களை ரட்சிக்க ஏசு மகான் பிறந்த நாள் குளிர்...
தமிழகம்

பிரசாதங்களை தயாரிக்க ஆவின் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் -அறநிலையத்துறை

திருக்கோவில்களில் பிரசாதங்களை தயாரிக்க ஆவின் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் ஜெ.குமரகுருபன் பிறப்பித்துள்ள உத்தரவில், "தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் ஆவின் நிறுவனத்தின் வெண்ணை மற்றும் நெய் பொருட்களை கொண்டு மட்டுமே தயாரிக்க வேண்டும். பிரசாதங்களின் தரத்தினை மேம்படுத்தவும், பிரகாரங்களில் தரமற்ற நெய்யை பயன்படுத்தி விளக்கு/தீபம் ஏற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தவிர்க்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்கோவில்களில் விளக்கேற்றவும், நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்யவும் பயன்படுத்தப்படும் வெண்ணை, நெய் போன்ற பொருட்களை ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும். இதற்காக ஆவின் நிறுவனத்தில் 15 மி.லி பேக்கிலிருந்து 20கி.கி வரையிலான பேக்குகள் விற்பனைக்கு தயாராக உள்ளன." என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஜனவரி...
தமிழகம்

நீலகிரியில் தொடங்கிய உறைபனி சீசன் – ஊட்டியில் கடும் பனிப்பொழிவு

நீலகிரி மாவட்டத்தில் உறை பனி சீசன் தொடங்கியது, இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் வரை உள்ளதால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உட்பட பல பகுதிகளில் பனி பொழிவால் பொது மக்களின் இயல்பு வாழக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனியின் தாக்கம் அதிகம் காணப்படும். கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் மழை காரணமாக இந்த முறை பனிப்பொழிவு தாமதமாக துவங்கியுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக உதகை நகரில் மத்திய பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், புல்வெளிகளில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. உதகையில் இன்று காலை...
தமிழகம்

திமுகவினரின் அட்டூழியத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட ஐயா எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி – சீமான்

'தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் திமுக குண்டர்களின் அட்டூழியத்தைக் கண்டித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழினிசாமிக்கு நன்றி' தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். முன்னதாக, எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் தற்போது ஒரு நூதனமான ஆட்சி தீய சக்திகளால் நடத்தப்பட்டு வருகிறது என்பதற்கு பல்வேறு சம்பவங்களை எனது அறிக்கைகளின் வாயிலாக அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு (21.12.2021), தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், பேச்சாளரை மேடையிலேயே கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஜனநாயக முறையில் நடைபெற்ற அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டத்தில், இவ்வாறு திமுக-வினர் அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினரைத் தடுக்காமல், அங்கிருந்த காவல்துறை கைகளைக் கட்டியபடி வேடிக்கை...
தமிழகம்

வல்லுநர் குழு பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

வல்லுநர் குழுவின் பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்த வேண்டும். பழமை வாய்ந்த கோயில்களில், அவற்றின் பழமை மாறாது சீரமைத்தல், புதுப்பித்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டலஅளவிலான வல்லுநர் குழு மற்றும்மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டு வருகிறது. கோயில் திருப்பணி மேற்கொள்ள இரு வல்லுநர் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட, சென்னை வடபழநி ஆண்டவர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராணிப்பேட்டை காளகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 551 கோயில்களுக்கு...
தமிழகம்

என்னை தொட முடியாததால் என்னுடன் இருப்பவர்களை கைது செய்கிறார்கள் – சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில், நாம் தமிழர் கட்சியினரை சங்கி என சொல்லப்படுவது குறித்து பேசுகையில், தன்னுடைய காலணியை எடுத்து மேடையிலேயே காண்பித்தார். கட்சியின் தலைமையில் இருந்துகொண்டு பொதுவெளியில் சீமான் இப்படி நடந்துகொண்டது பலரை முகம் சுளிக்க வைத்தது. இதுவரை வாயில் மட்டுமே அநாகரீகத்தை கொண்டிருந்த சீமான் தற்போது தன்னுடைய செயலிலும் அதை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார் என்ற விமர்சனமும் வைத்தனர். இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஹிம்லர் என்பவர் இஸ்லாமியர்களுக்கு திமுக துரோகி எனவும், திமுகவை கருவறுக்க வேண்டுமெனவும் மேடையில் பேசினார். அப்போது அங்கிருந்த திமுகவினர் உடனடியாக மேடையில் ஏறி மேடையில் இருந்தவர்களை தாக்க முயன்றனர். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாகவும், பெரிய கட்சியாகவும் இருக்கும் திமுகவினர் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கக்கூடாது என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். திமுகவினரின்...
தமிழகம்

‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் 4 நாட்களில் 456 பேர் பயன் பெற்றனர்: தமிழக சுகாதாரத் துறை தகவல்

'இன்னுயிர் காப்போம்' திட்டத்தின் மூலம் 4 நாட்களில் 456 பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக ரூ.40 லட்சத்து 93,800 செலவிடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள் ளது. சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கவும், விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்துக்கு கட்டணமில்லாத அவசரசிகிச்சை அளிக்கும் வகையிலும்,'இன்னுயிர் காப்போம்' என்றதிட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 18-ம் தேதி மேல்மருவத்தூரில் தொடங்கி வைத்தார். 609 மருத்துவமனைகள் இத்திட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணிநேரத்துக்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை அரசேஏற்றுக் கொள்கிறது. இத்திட்டத்தில் 609 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. முதல்வர் காப்பீடு அட்டை பயனாளிகள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் என்ற வேறுபாடின்றி தமிழக எல்லைகளில் விபத்தில் சிக்கும்அனைவருக்கும் 48 மணி நேரஇலவச...
தமிழகம்

சட்டப்பூர்வ ஒப்பந்தம் இல்லாமல், வாடகை தராமல் கோயில் சொத்து ஆக்கிரமிப்போர் மீது போலீஸில் புகார்: அலுவலர்களுக்கு அறநிலையத் துறை அறிவுறுத்தல்

சட்டப்பூர்வ வாடகை ஒப்பந்தம் இல்லாமல், வாடகை செலுத்தாமல் கோயில் இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபு பல்வேறுகோயில்களில் ஆய்வு நடத்தி,கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுவரை ரூ.1,600 கோடிமதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு, அந்த நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, எல்லைக்குள் கம்பி வேலிஅமைக்கும் பணி நடந்துவருகிறது. சட்டப்பூர்வ வாடகை ஒப்பந்தம் இல்லாமலும், உரிய வாடகை செலுத்தாமலும் கோயில்களுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வரும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க ஆணையரது எழுத்து மூலமான புகாரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆக்கிரமிப்பாளர் மீது எந்த ஒரு தனிநபரும் எழுத்துப்பூர்வமான புகாரை...
தமிழகம்

இன்று உண்ணாவிரதப் போராட்டம் – மீனவர்கள் சங்கம் அறிவிப்பு!

இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த டிச.18 ஆம் தேதியன்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களைச் சிறைபிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு,அவர்கள் டிச.31-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து,சில மணி நேரங்களே ஆன நிலையில்,மேலும் 12 மீனவர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,55 மீனவர்களை...
1 507 508 509 510 511 563
Page 509 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!