தமிழகம்

தமிழகம்

சசிகலா சிறை முறைகேடு வழக்கில் கர்நாடக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் பெங்களூரு வில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறையில் சலுகைபெற்றதாக புகார் எழுந்தது. இதை விசாரித்த சிறைத் துறை டிஐஜி ரூபா, சசிகலா சலுகைகளை பெறுவதற்காக டிஜிபி சத்திய நாராயணராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். 2019-ம் ஆண்டு இதை விசாரித்த, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு, 'சசிகலாசிறப்பு சலுகைகளை அனுபவித்தது உண்மை' என அறிக்கை அளித்தது. இதையடுத்து சத்திய நாரா யண ராவ், கிருஷ்ணகுமார் மற்றும்சசிகலாவுக்கு நெருக்கமானவர் கள் மீது ஊழல் தடுப்பு பிரிவுபோலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். அதன்பின் சத்திய நாராயணராவ், கிருஷ்ணகுமார் மீது அக்டோபர் 8-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஸ்...
தமிழகம்

சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்லும் முதியோரை குறிவைத்து நூதன முறையில் மோசடி: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல் ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி(59), நேற்று முன்தினம் காலை செம்பரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர் ராஜேஸ்வரியை அணுகி, ஏன் முகக்கவசம் அணியவில்லை எனக் கேட்டு, அவரை தனியாக அழைத்து சென்றுள்ளனர். மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் போலீஸார் அபராதம் விதிப்பார்கள் என்றும், தங்க நகைகளை கழற்றி பையில் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர். இதை நம்பிய ராஜேஸ்வரி தங்க நகைகளைக் கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். அவற்றை வாங்கி ராஜேஸ்வரியின் பைக்குள் வைப்பதுபோல ஏமாற்றி, அவரது கவனத்தை திசை திருப்பி 12 பவுன் நகைகளைத் திருடிக்கொண்டு, அங்கிருந்து தப்பியுள்ளனர். சிறிது நேரத்துக்குப் பிறகு, தனது பையில் நகைகள் இல்லை என்பதை அறிந்த ராஜேஸ்வரி, நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை காவல்...
தமிழகம்

ஆன்லைனில் கிராம வரைபடம் பெறும் வசதி துவக்கம்

கிராம வரைபடங்களை, ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி பெறுவதற்கான புதிய வசதியை, நில அளவை துறை துவக்கி உள்ளது.தமிழகத்தில் நிலம் வாங்குவோர், அது தொடர்பான உண்மை நிலவரங்களை அறிய, பட்டா, நில அளவை வரைபடம் போன்ற ஆவணங்களை ஆய்வு செய்வது அவசியம்.கணினியில் பதிவேற்றம்இந்நிலையில், சர்வே எண் வாயிலாக நில அளவை வரைபடங்களை பெறுவதும்; குறிப்பிட்ட சர்வே எண், சம்பந்தப்பட்ட கிராமத்தில் எங்கு அமைந்துள்ளது என்பதை அறிவதும் சிரமமாக உள்ளது.இதற்கு நில அளவை துறையை அணுகி, கிராம வரைபடங்களை பெற வேண்டும். இதற்காக நில அளவை துறை, 16 ஆயிரத்து 721 கிராமங்களின் வரைபடங்களை தயாரித்து உள்ளது. வரைபடங்கள் அனைத்தும், டிஜிட்டல் முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், கிராம வரைபடங்களுக்காக, நில அளவை துறை அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே பெறும் புதிய சேவையை நில அளவைத்துறை...
தமிழகம்

ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அகழாய்வு பணி..!!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876-ம் ஆண்டு முதன்முதலில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதன்பின் கடந்த 1903 மற்றும் 1904-ம் ஆண்டுகளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் சத்தியமூர்த்தி குழுவினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது 600 சதுர மீட்டர் அளவில் அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வில் 160-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று அகழாய்வு பணி துவங்கியுள்ளது. இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்துள்ளார். திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், அகழாய்வு இயக்குநருமான அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அகழாய்வு பணிகள் 3 மாதங்கள் நடைபெற உள்ளன. அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...
தமிழகம்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்..!!

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி பிறைசூடன் பிறந்தார். 1985-ல் வெளியான 'சிறை' படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த 'ராசாத்தி ரோசாப்பூ' என்னும் பாடலை எழுதியதன் மூலமாக தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக தனது பயணத்தை தொடங்கினார். தமிழில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களை இவர் எழுதியுள்ளார். பணக்காரன் திரைப்படத்தில் இவர் எழுதிய 'நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்', செம்பருத்தி திரைப்படத்தில் 'நடந்தால் இரண்டடி' உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலமானவை. திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது தனிப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவற்றையும் எழுதியுள்ள பிறைசூடன், தற்போது வரை தனது எழுத்துப்பணியை தொடர்ந்து வந்துள்ளார். சமீபத்தில் ஆஸ்கார் விருதுக்கு இந்திய படங்களை பரிந்துரைக்கும் குழுவில் அவர் இடம்பெற்ற செய்தியும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இன்று...
தமிழகம்

கோயில் இடங்களுக்கான வாடகையை இணையதளம் மூலம் செலுத்தலாம்: அறநிலையத் துறை புதிய வசதி அறிமுகம்

கோயில் இடங்களுக்கான வாடகையை இணைய வழியில் செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். கோயில் இடங்களுக்கான வாடகையை இணைய வழியில்செலுத்தும் வசதியை இந்து சமயஅறநிலையத் துறை தொடங்கியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த புதிய வசதியை துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோயில் நிலங்களின் வாடகைதாரர்கள், குத்தகைதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை,குத்தகை தொகையை இணையதளம் மூலமாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணைய வழியில் செலுத்த முடியாதவர்கள் கோயிலுக்கு நேரில் சென்றும் கட்டலாம். வாடகை, குத்தகை செலுத்த மாதம்தோறும் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இது தற்போது 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோயில் இடங்களுக்கு நியாயமான வாடகை...
தமிழகம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

10-ந் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்... இதையடுத்து, தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது... கடந்த வாரம் முழுவதும் மழை பொழிவு இருந்த நிலையில், இந்த வாரமும் மழை பெய்து வருகிறது. தற்போது தொடர்ந்து 3 நாளைக்கு மழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தம் - தமிழகத்தில் 5 நாட்களுக்கு அடி வெளுக்கப்போகும் மழை தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும், நாளையும் வட...
தமிழகம்

கோவில்களை திறக்காவிட்டால் அரசை ஸ்தம்பிக்க செய்வோம்: அண்ணாமலை

'பத்து நாட்களில் கோவில்களை திறக்காவிட்டால், அரசை ஸ்தம்பிக்கச் செய்வோம்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.தமிழகத்தில், வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமை உட்பட வாரத்தின் ஏழு நாட்களும் கோவில்களை திறக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில், நேற்று மாநிலம் முழுதும் உள்ள முக்கிய கோவில்கள் முன் போராட்டம் நடந்தது.சென்னை, மண்ணடி காளிகாம்பாள் கோவில் அருகே நடந்த போராட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் உட்பட, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அதில், பா.ஜ.,வினர் தீச்சட்டி ஏந்தியும், தேங்காய் உடைத்தும், கோவில்களை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.பின், அண்ணாமலை அளித்த பேட்டி:ஆளுங்கட்சியின் நல்ல விஷயங்களுக்கு, எதிர்க்கட்சியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.அவர்கள் சித்தாந்தத்தை, கோவில் மற்றும் பூஜை அறைகளில் திணிக்க முயலும் போது; இல்லாத கொரோனாவை காரணம் காட்டி, நம் உரிமையை...
தமிழகம்

தேர்தல் பணி செய்யவிடாமல் அதிமுகவினருக்கு மிரட்டல்: ஓபிஎஸ் – இபிஎஸ் கண்டனம்

உள்ளாட்சித் தோதல் பணிகளைச் சரிவர செய்யவிடாமல் அதிமுகவினரை காவல்துறையினா் மூலம் திமுக மிரட்டுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் குற்றம் சாட்டியுள்ளனா். இது தொடா்பாக வியாழக்கிழமை அவா்கள் வெளியிட்ட கூட்டறிக்கை: ஊரக உள்ளாட்சித் தோதலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜனநாயகப் படுகொலைகள் நடைபெற்று வருகின்றன. காவல்துறையையும், அரசு ஊழியா்களையும் தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டு அதிமுகவினரை மிரட்டி தோதல் பணிகளைச் செய்யவிடாமல் திமுக அரசு தடுத்து வருகிறது. அதிமுகவினா் மீது பொய்யான வழக்குகளையும் பதிவு செய்து அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது. பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் எப்போதுமே அதிமுகவின் கோட்டை. அந்தப் பகுதியில் அதிமுகவைச் சோந்த பெரும்பாக்கம் ராஜசேகரும் அவரது குடும்பத்தினரும் தொடா்ந்து வெற்றிபெறுவது வழக்கம். அவா்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறை தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. இதுபோல பல்வேறு இடங்களிலும் அதிமுகவினருக்கு...
தமிழகம்

மாலத்தீவுக்கு சரக்கு ஏற்றிச் சென்றபோது தோணி மூழ்கியது- நடுக்கடலில் தத்தளித்த 9 தொழிலாளர் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்றதோணி நடுக்கடலில் மூழ்கியது. கடலில் தத்தளித்த 9 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடி காந்தி நகரைச்சேர்ந்த வெலிங்டன் என்பவருக்குசொந்தமான 'அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய வெண்ணிலா' என்ற தோணி, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து சிமென்ட், காய்கறிகள் உள்ளிட்ட 287 டன் எடையுள்ள சரக்குகளை ஏற்றிக்கொண்டு மாலத்தீவுக்கு புறப்பட்டது. இந்த தோணியின் மாஸ்டராக தூத்துக்குடியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (40) என்பவர் இருந்தார். தொழிலாளர்களாக மரிய அந்தோணி (23), சிரான் (26), சீலன் (25), மில்டன் (50), நாராயணன் (61), அடைக்கலம் (63), வெசேந்தி (61), தொம்மை (63) ஆகிய 8 பேரும் சென்றனர். இந்த தோணி நேற்று முன்தினம் காலை மாலத்தீவு அருகே சுமார் 250 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் பலத்த காற்று வீசியதால், தோணியை...
1 504 505 506 507 508 544
Page 506 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!