தமிழகம்

தமிழகம்

சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய உதவியாளர் சரவணன் வீடு, நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், மற்றொரு உதவியாளர் முருகன் வீடு உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அந்த இடங்களில் கடந்த 18-ம்தேதி சீல் வைக்கப்பட்டது. அன்று சோதனையின் போது ஒத்துழைப்பு இல்லாததாலும் அலுவலகம், வீடு பூட்டப்பட்டிருந்ததாலும் லஞ்ச ஒழிப்புத்துறை சீல் வைத்து சென்றது. இந்நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவை பெற்று பூட்டை உடைத்து சோதனை நடத்தி வருகின்றனர். சி. விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் கடந்த 17ஆம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது....
தமிழகம்

மீனவர்கள் பிரச்சனை : வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தபோது, காணாமல் போன மீனவரை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவக் கப்பலை விரட்டிப் பிடிக்க முயற்சித்த போது மூழ்கிப்போன கப்பலில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 18.10.2021 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியது. அதிலிருந்த மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு மீனவரை தேடும் பணி...
தமிழகம்

மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி விரைவில் தொடங்கும்

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மாதவரம் - சிறுசேரி தடத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி - விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. மற்ற தடங்களைக் காட்டிலும் மாதவரம் - சிறுசேரி தடத்தில்தான் மொத்தமுள்ள 45 கி.மீ தூரத்தில் அதிகபட்சமாக 26 கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைகிறது. இப்பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் - சிறுசேரி இடையே புரசைவாக்கம், அயனாவரம், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி வழியாக இந்த தடம் அமைக்கிறது. மற்ற தடங்களைக் காட்டிலும் இந்த தடத்தில் குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள்...
தமிழகம்

வாடிக்கையாளர்களிடம் மாநில மொழிகளில் பேசுவதை ‘சொமாட்டோ’ போன்ற நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும்: திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

வாடிக்கையாளர்களிடம் மாநில மொழிகளில் பேசுவதை 'சொமாட்டோ' போன்ற நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும் என்று திமுக மகளிரணிச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழுதுணைத் தலைவருமான கனிமொழி வலியுறுத்தியுள்ளார். 'சொமாட்டோ' செயலி மூலம் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று முன்தினம் உணவு ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு வந்த உணவு முழுமையாக இல்லாமல் குறைவாக இருந்ததால், அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் இணைய தளத்தின் குறைகளைச் சொல்லும் பகுதியில் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு 'சொமாட்டோ' நிறுவன ஊழியர் இந்தி மொழியில் பதிலளித்துள்ளார். அதற்கு தமிழகவாடிக்கையாளர் எதிர்ப்பு தெரிவிக்க, 'இந்தி நமது தேசிய மொழி. எனவே அனைவரும் அதைச் சிறிதளவு தெரிந்துகொள்ள வேண்டும்' என்று அந்நிறுவன ஊழியர் பதில் அனுப்பியுள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக தமிழில் விளக்கம் அளித்துள்ள 'சொமாட்டோ' நிறுவனம், "எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை...
தமிழகம்

மன்னார் வளைகுடாவில் அத்துமீறும் இலங்கை கடற்படைக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும்: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

மன்னார் வளைகுடாவில் அத்துமீறும் இலங்கை கடற்படைக்கு இந்திய கடற்படை பதிலடி கொடுக்கவேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியா - இலங்கைக்கு இடையே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி முழுவதும் தனக்குமட்டுமே சொந்தமானது போல கருதிக்கொண்டு தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. 1980-களின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்வதும், படுகாயம்படுத்துவதும், சிறைப்பிடிப்பதும் அவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றைச் சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கை அரசின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்துக் குரல் எழுப்பியவுடன், அதை திசைத் திருப்பும் வகையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாக ஒரு நாடகத்தை ராஜபக்சே அரசு அரங்கேற்றியிருக்கிறது. இதைநான் வன்மையாகக்...
தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்பட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதவிப் பிரமாணம் எடுத்துக்...
தமிழகம்

சென்னையில் 100 மின்சார பேருந்துகளை ஜனவரியில் இயக்க பணிகள் தீவிரம்: 6 இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைகிறது

சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் 100 மின்சார பேருந்துகளை வரும் ஜனவரியில் இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும், 6 இடங்களில் சார்ஜிங் மையங்களும் அமைக்கப்பட உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசுப் போக்குவரத்து கழகங்கள் மூலம் முதல்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, ஜனவரியில் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படும். இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 500 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில், முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் 100 மின்சார பேருந்துகளை இயக்க உள்ளோம். இதற்காக பயணிகள் அதிகமாக செல்லும் வழித்தடங்களை தேர்வு செய்துள்ளோம். அதேபோல், சென்னை...
தமிழகம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்!’

தமிழகத்தில், 21ம் தேதி ஆறு மாவட்டங்களுக்கும்; 22ம் தேதி நான்கு மாவட்டங்களுக்கும், மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடப்பட்டு உள்ளது.வாய்ப்புசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு:இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், பல மாவட்டங்களில் மிக கன மழைக்கும்; மேலும் பல மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புஉள்ளது.புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கடலுார் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், நாளை இடி மின்னலுடன் கன மழை பெய்யும். நாளை மறுநாள் 21ம் தேதி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும். எச்சரிக்கைசேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும்...
தமிழகம்

சங்ககால பெண்பாற் புலவர் இளவெயினிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் – சீமான்

சங்ககாலப் பெண்பாற்புலவர் குறவர்மகள் இளவெயினியின் தமிழ்த் தொண்டினை நினைவுகூரும் வகையில், இளவெயினிக்கு மதுரை மண்ணில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில், குறிஞ்சி நிலத் தமிழ்த்தொல்குடி மரபினைச் சேர்ந்த சங்ககாலப் பெண்பாற்புலவர் குறவர்மகள் இளவெயினியின் தமிழ்த் தொண்டினை நினைவுகூரும் வகையில் யாதொரு நினைவுச் சின்னமும் தமிழ்நாட்டில் இதுவரை அமைக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. தமிழ்த்தொண்டு புரிந்த அயல்நாட்டவருக்கும் சிலை, மணிமண்டபம் உள்ளிட்டவை அமைத்து போற்றும் தமிழ்நாட்டில், தமிழ் வளர்த்த ஆதிப்பழங்குடி மண்ணின் மைந்தர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதும், அவர்களது சிறப்புமிக்கப் பணிகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும் வருவது திராவிட ஆட்சியாளர்களால் நிகழ்த்தபட்ட வரலாற்றுப் பேரவலமாகும். ஐந்திணை நிலங்களில் முதல் திணையான குறிஞ்சி நில மக்கள் குறவர் என்றும், எயினர்...
தமிழகம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் “இல்லம் தேடி கல்வி” என்ற புதிய திட்டம் தொடக்கம்…!

"இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் துவக்கி வைத்தார். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்க, இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டம் இன்று செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், 1-8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடைப் போக்க, அவர்களின் இல்லங்களுக்கே சென்று பாடம் நடத்தும் "இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் துவக்கி வைத்தார்.  ...
1 502 503 504 505 506 544
Page 504 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!