தமிழகம்

தமிழகம்

சிறப்பாக பணியாற்றும் போலீஸாருக்கு நட்சத்திர காவலர் விருது: காவல் ஆணையர் அறிவிப்பு

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போலீஸாருக்கு அனுப்பிய சுற்றறிக்கை: சிறப்பாக பணியாற்றும் போலீஸாருக்கு இனி கூடுதலாக ஒவ்வொரு மாதமும் விருது வழங்கப்படும். கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) தலைமையிலான குழு, சென்னை பெருநகரகாவல் துறையில் சிறப்பான போலீஸாரை கண்டறிந்து அவர்களது பணியைமதிப்பிட்டு 'மாதத்தின் நட்சத்திர காவலர்' என்றவிருதை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 'மாதத்தின் நட்சத்திரகாவலர்' விருதை பெறதேர்ந்தெடுக்கப்படும் போலீஸாருக்கு ரூ.5ஆயிரம் பண வெகுமதியுடன், தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும். எனவே, போலீஸார்மெச்சத்தகுந்த பணியில்இருந்து அதன் விபரத்தை தங்கள் துணை ஆணையர் மூலமாக கூடுதல் காவல் ஆணையருக்கு தெரிவித்து மாதத்தின் நட்சத்திர காவலர் விருதினை பெறும் வகையில் சிறப்பாக பணி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்....
தமிழகம்

முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் விசாரணை

சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் திங்கள்கிழமை சுமாா் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதிமுக ஆட்சியில் எம்.ஆா். விஜயபாஸ்கா் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகள், உதிரி பாகங்கள் வாங்கியது, ஊழியா்கள் நியமனம் ஆகியவற்றில் முறைகேடு நடைபெற்ாக புகாா் எழுந்தது. இதன் அடிப்படையில் சொத்து குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையினா் பதிவு செய்தனா். அவா் மற்றும் குடும்பத்தாா் தொடா்புடைய 26 இடங்களில் கடந்த ஜூலை 22-இல் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கம், சொத்து, முதலீட்டு ஆவணங்கள், பண பரிவா்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செப்டம்பா் 30-இல் ஆஜராகும்படி எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. அப்போது உள்ளாட்சித் தோதலுக்காக அவா் ஆஜராகவில்லை. இதை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை...
தமிழகம்

‘தாதா சாகேப் பால்கே’ விருதை எனது குருவான கே.பாலச்சந்தருக்கு சமர்பிக்கிறேன்: நடிகர் ரஜினிகாந்த்

இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக கருதப்படும் 'தாதா சாகேப் பால்கே' விருது. இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகேப் பால்கே பெயரிலான இந்த விருது, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பிரபல நடிகர் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள். இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. சிவாஜிகணேசனுக்கு பிறகு தமிழ் திரைப்படத்துறையில் இந்த விருதை ரஜினிகாந்த் பெறுகிறார். கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த விருதை அவருக்கு வழங்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அவருக்கு இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். விருது வழங்கும் விழாவில் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக்...
தமிழகம்

தமிழகத்தில் முதல்முறையாக டீசல் விலை ரூ.100-ஐ கடந்ததால் சரக்கு லாரி வாடகைக் கட்டணம் 20% உயர்வு: அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம்

தமிழகத்தில் முதல்முறையாக டீசல் விலை ரூ.100-ஐக் கடந்துள்ளதால், சரக்கு லாரிகளின் வாடகைக்கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கலால் வரிஉயர்வு, மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்பு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலை மேலும், உயர்ந்து வருகிறது. இதனால், டீசல் விலை தமிழகத்தில் முதல்முறையாக ரூ.100.59-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, லாரி உரிமையாளர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, காய்கறிகள், மணல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்லும் சரக்கு லாரிகளின் வாடகைக் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளனர். இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்...
தமிழகம்

“வாரிசு அரசியல்” வைகோ செய்தது தவறில்லை.. ஏற்பதும் ஏற்காததும் மக்கள் கையில் – காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு

"வாரிசு அரசியல்" வைகோ செய்தது தவறில்லை..மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அக்கட்சியினர் அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்கியதில் எவ்வித வாரிசு அரசியலும் இல்லை. வாரிசு அரசியல் என்பது ஒருவரை திணிப்பது ஆகும். துரை வையாபுரிக்கு பதவி வழங்கப்பட்டது தொண்டர்களின் விருப்பப்படியே நடந்தது ஆகும் என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் மதிமுக கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.தற்பொழுது மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் இதனையடுத்து கோவை மாவட்ட சேர்ந்த மேலும் இரண்டு நிர்வாகிகளும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ நீதி கேட்டு பயணம் மேற்கொண்டிருந்தார்....
தமிழகம்

அரசு பேருந்தில் ஏறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; பொதுமக்கள் நெகிழ்ச்சி!

சென்னை கண்ணகி நகர் பகுதியில் தியாகராய நகர் - கண்ணகி நகர் வழித்தடத்தில் செல்லும் M19B பேருந்தில் எறிய, முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகளிடம் பேருந்துகள் சரியான நேரத்தில் வருகிறதா, போதுமான வசதி உள்ளதா, கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு உள்ளது, இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். மேலும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பயணிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். முன்னதாக சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகரில் உள்ள தடுப்பூசி முகாமிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்து ஆய்வு செய்தார். பின்னர் சென்னை எழில் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மெகா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்டார். தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம்...
தமிழகம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (அக். 24) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் முக்கியமாக திகழும் ராகு பகவான் தனது இரு மனைவிகளுடன் மங்கள ராகுவாக இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் ராகு தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மேலும், ராகு கால பூஜையின்போது ராகுபகவானின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யும்போது, அந்த பால் நீலநிறமாக மாறி வருவது இன்றளவும் காணப்படுகிறது. இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, உபயதாரர்கள் உதவியுடன் ரூ.5 கோடி செலவில் 7 ராஜகோபுரங்கள், 13 பரிவார தெய்வ விமானங்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கோயில் குடமுழுக்கு விழா கடந்த 18-ம்...
தமிழகம்

அலர்ட்! இந்த 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது . இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , வேலூர் , ராணிப்பேட்டை , திருவள்ளூர் , கிருஷ்ணகிரி , ஈரோடு , சேலம் , தர்மபுரி , திருச்சிராப்பள்ளி , கரூர் , நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது...
தமிழகம்

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புபவர் மீது நடவடிக்கை: நடிகை காயத்ரி ரகுராம் போலீஸில் மனு

திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம், தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநிலத் தலைவராக உள்ளார். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். இந்நிலையில் எப்போதோ நடந்த நிகழ்ச்சியில் இருந்து எனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட சில மோசமான புகைப்படங்களை, மர்ம நபர் ஒருவர் அவரது ட்விட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்து, மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார். இது எனது நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்து, அவரது பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலி யுறுத்தியுள்ளார். புகார் அளித்த பின்னர் நடிகை காயத்ரி ரகுராம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``திமுக எம்.பி.க்கள் கனிமொழி, செந்தில்குமார் ஆகியோர்,...
தமிழகம்

கொரோனா குறைந்தால் சென்னை சங்கமம் நடத்தப்படும் – கனிமொழி எம்பி

கொரோனா அச்சுறுத்தல் குறைந்தால் முதல்வரின் அனுமதி பெற்று நிச்சயம் சென்னை சங்கமம் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக மகளிர் அணிச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்நிலையில் இந்தாண்டு சென்னை சங்கமம் நிகழுமா என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கொரோனா அச்சுறுத்தல் நீங்கி சாதகமான சூழல் அமைந்தால் நிச்சயமாக நடத்தப்படும் என கனிமொழி பதில் அளித்தார்....
1 501 502 503 504 505 544
Page 503 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!