தமிழகம்

தமிழகம்

இப்பொழுது தான் பாஜகவிற்கு வலிக்கத்துவங்கியிருக்கிறது..! இடைத்தேர்தலில் விழுந்த அடி அப்படி! – ஜோதிமணி எம்.பி

பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தான் பாஜகவிற்கு வலிக்கத்துவங்கியிருக்கிறது. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த விலை குறைப்பு வாகனஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தான் பாஜகவிற்கு வலிக்கத்துவங்கியிருக்கிறது. இடைத்தேர்தலில் விழுந்த அடி அப்படி!' என பதிவிட்டுள்ளார்....
தமிழகம்

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 7-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் தெரிவித்துள்ளார். இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என...
தமிழகம்

கனமழை காரணமாக சென்னை, திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, விழுப்புரம், ராணிப்பேட்டை, நாமக்கல், வேலூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஓரிரு மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவை பிறப்பித்துள்ளன. வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்,...
தமிழகம்

இலங்கை தமிழர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் திமுக: முதல்வர் ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பதில்

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நலத் திட்டங்களையும் செய்யவில்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 1980-களில் தனி ஈழத்துக்காக நடைபெற்ற போர் உச்சத்தில் இருந்தபோது, அதிமுகவும், எம்ஜிஆரும் இலங்கைத் தமிழர்களுக்கு பல வழிகளில் உறுதுணையாக இருந்தது உலகுக்குத் தெரியும். அந்த நேரத்தில், டெசோ, டெலோ போன்ற அமைப்புகளை நிறுவி, இலங்கைத் தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியது யார் என்பதையும் மக்கள் நன்கறிவார்கள். இலங்கையில் இருந்து தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தபோது, அவர்களைப் பாதுகாத்தது எம்ஜிஆர் அரசும், தொடர்ந்து ஜெயலலிதா அரசும்தான் என்பதை முதல்வர் மறைத்துவிட முடியாது. திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம், இலங்கைத் தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை. 2009-ல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, 7 மணி நேர உண்ணாவிரதம் நடத்தினார். அவர் கூறியதை நம்பி பதுங்கு குழிகளில் இருந்து...
தமிழகம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 3,640 சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு ஏதுவாக சென்னையில் இருந்து இன்று 3,640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை நாளை (04.11.2021) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் இயக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் இருந்து நேற்று முன்தினம் முதல் 10,240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. அதன்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கூடுதலாக 388 சிறப்பு பேருந்துகளும், நேற்று 1,575 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தீபாவளியன்று சொந்த ஊர்களில் இருப்பதற்கு ஏதுவாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட...
தமிழகம்

இவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.. அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான அறிவிப்பை சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான அரசாணை எப்போது வெளியிடப்படும் என்று மக்கள் அனைவரும் காத்திருந்தனர். இந்நிலையில் நகை கடன் தள்ளுபடி அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆதார் இன் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகை கடன் (5 சவரனுக்கு மேல்) பெற்றுள்ள நபர் மற்றும் அவரது குடும்பத்தினர்,...
தமிழகம்

அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டத்தில் எல்லாம் பலத்த மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு.!

தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 5ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரிக்கடல்‌ மற்றும்‌ இலங்கையை ஓட்டி நிலவும்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்க அடுத்த 48 மணி நேரத்தில்‌ தென்‌கிழக்கு அரபிக்‌ கடல்‌ பகுதிக்கு நகரக்‌ கூடும்‌. அதனை தொடர்ந்து 48 மணி நேரத்‌தில்‌ வடக்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்‌ பகுதியாக மாறக்கூடும்‌. இதன்‌ காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கனமழையும்‌, ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை, தென்காசி, ராமநாதபுரம்‌ மற்றும்‌ திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌...
தமிழகம்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கின்றன.  தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊா்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக திங்கள்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,285 சிறப்பு பேருந்து களும் இயக்கப்படுகின்றன. இதற்காக சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தத்தில் 2 முன்பதிவு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் நவ.1 முதல் 3 வரை இயக்கப்படும். சென்னையில், கே.கே. நகா் பேருந்து நிலையத்தில் இருந்து, இசிஆா் வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் வழியாக, திருவண் ணாமலை, போளூா், சேத்துபட்டு,...
தமிழகம்

நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- இடி மின்னலுடன் மிக கனமழை பெய்யும்: வானிலை மையம்

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் புவியரசன் கூறியதாவது: தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரும். இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கன, மிக கன மழை பெய்யும். புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், பெரும்பாலான...
1 499 500 501 502 503 544
Page 501 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!