தமிழகம்

தமிழகம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்:ஓபிஎஸ்,ஈபிஎஸ் இன்று வேட்புமனு தாக்கல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனுவை ஓபிஎஸ்,ஈபிஎஸ் இன்று தாக்கல் செய்கின்றனர். அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த டிச.1 ஆம் தேதி நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதி 20(அ) பிரிவு திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதன்படி,அதிமுக ஒருங்கிணைப் பாளர்களை கட்சியின் தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் விதமாக சட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளது.மேலும்,பொதுச்செயலாளர் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப் பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி நடைபெற்றது.ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் அவர்கள் முன்னிலையில்...
தமிழகம்

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு தமிழ்நாடு சட்டபேரவையில் சட்டமன்றப் பேரவை விதி 110-ன்...
தமிழகம்

அ.தி.மு.க., கூட்டணி தொடரும்: அண்ணாமலை அறிவிப்பு

'அ.தி.மு.க.,வுடன் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும் கொள்கை அடிப்படையில் ஒன்றாக உள்ளோம். கூட்டணி தொடரும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தி.மு.க., அரசு திட்டமிட்டு அ.தி.மு.க.,-- பா.ஜ., நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்ய முயற்சிக்கிறது, சமீபத்தில் பா.ஜ.,வை சேர்ந்த அகோரம் என்பவரை கைது செய்ய, 250 போலீசாரை அனுப்பி மிரட்டல் விடுத்தது.குற்றச்சாட்டுகளை கண்டு தி.மு.க., அஞ்சுகிறது. தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறி விட்டு, தற்போது தி.மு.க., ஏமாற்றுகிறது. பொய் சொல்லி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த தி.மு.க., வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. வேளாண் சட்டங்கள் குறித்து காங்., உள்ளிட்ட சில கட்சிகள் தவறாக பிரசாரம் செய்து, விவசாயிகளை நம்ப வைத்து விட்டன. ஒரு காலம் வரும். அப்போது, 'வேளாண் சட்டம் வேண்டும்'...
தமிழகம்

ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு அதிக அதிகாரம்; அதிமுக அமைப்பு விதியில் முக்கிய திருத்தம்

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தநிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் 2-வது முறையாக இன்று கூடியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் அதிமுக தற்காலிக...
தமிழகம்

திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல்லில் அறநிலையத் துறை சார்பில் 3 கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல் மாவட்டங்களில் அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, துறையின் சார்பில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் பி.காம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய நான்கு பாடப் பிரிவுகளுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க உயர் கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. சென்னை கொளத்தூரில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி தொடங்க திட்டமிடப்பட்டது. நடப்பு...
தமிழகம்

டிச.15 வரை கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு; கேரளாவுக்கு இன்று முதல் அரசு பேருந்துகள் இயக்கம்: பொதுப் போக்குவரத்துக்கு முதல்வர் அனுமதி

கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் டிச.15-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவுக்கு பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள தைத் தொடர்ந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, தொடர் மழை பொழிந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிச.15 வரை நீட்டித்து உத்தர விடப்படுகிறது. ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போல கேரள மாநிலத்துக்கும் பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. ஏற் கெனவே செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற...
தமிழகம்

இனிமேல் வாரம் ஒரு காற்றழுத்தம்: ஜனவரி 24 வரை தமிழகத்தில் மழை பெய்யும்

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. இது அடுத்த 48மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இலங்கை அருகே தற்போது நீடித்து வரும் காற்று சுழற்சி இன்று காலையில் வலுவிழந்து, மெலிந்த காற்று சுழற்சியாக மாறியுள்ளது. இது இன்று மாலைக்குள் முற்றிலுமாக செயலிழந்து விலகும். இது தவிர, கேரளா அருகே நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து சென்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி வடக்கு நோக்கி சென்று, குஜராத் பகுதிக்கு சென்று கரையைக் கடக்கும். இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் நேற்று இரவு தாய்லாந்து வளைகுடாப் பகுதிக்கு நுழைந்து,...
தமிழகம்

ஒமிக்ரான் வைரஸ்: 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவித்த தமிழ்நாடு அரசு

பின் வரும் நாடுகளில் ஒமிக்ரான் கோவிட் பரவல் இருக்கலாம் என்பதால் அங்கிருந்து தமிழகம் வரும் பயணிகள் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. High risk நாடுகள் என்றும் இவற்றை வரையறுத்துள்ளது. 1.பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் 2. தென் ஆப்பிரிக்கா 3. பிரேசில் 4. வங்கதேசம் 5. போட்ஸ்வானா 6. சீனா 7. மொரிசியஸ் 8. நியூசிலாந்து 9. சிம்பாப்வே 10. சிங்கபூர் 11. ஹாங்காங் 12.இஸ்ரேல் தமிழகத்தின் சர்வதேச விமான நிலையங்கள் சென்னை, கோவை, மதுரை திருச்சி, என நான்கு நிலையங்களிலும் தலா ஒரு சுகாதார திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தொடர்பு எண்கள் மருத்துவத்துறையால் வழங்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள். 1.Rt pcr நெகடிவ் சான்றிதழுடன் தான் விமானத்தில் வந்திருக்க வேண்டும். 2....
தமிழகம்

உறுப்பினர்கள் வாக்களித்து ஒற்றை தலைமையை தேர்வு செய்ய வேண்டும் அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்படுவதால் பாதகமே அதிகம்: அன்வர்ராஜா மீண்டும் போர்க் கொடி

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த வாரம் புதன்கிழமை சென்னையில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் எம்பி அன்வர் ராஜா பேசும்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவரை ஒருமையில் பேசியதுடன், அவரை அடிக்கவும் சென்றதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பற்றி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அன்வர் ராஜா கூறினார். அன்று நடந்த கூட்டத்தில் பலரும், அதிமுக கட்சியின் தலைமைக்கு எதிராக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீண்டும் கட்சி தலைமையை விமர்சித்து வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அன்வர்ராஜா நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 2021 மே மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக...
தமிழகம்

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! எங்கெல்லாம் மழை பெய்யும்?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் , கன்னியாகுமரி , நெல்லையில் இன்று கனமழை பெய்யும் என , சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று வானிலை மைதயம் கணித்துள்ளது . இதனால் , கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று இடி , மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பான்மையான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தெற்கு அந்தமான்...
1 493 494 495 496 497 545
Page 495 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!