தமிழகம்

தமிழகம்

வல்லுநர் குழு பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

வல்லுநர் குழுவின் பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்த வேண்டும். பழமை வாய்ந்த கோயில்களில், அவற்றின் பழமை மாறாது சீரமைத்தல், புதுப்பித்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டலஅளவிலான வல்லுநர் குழு மற்றும்மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டு வருகிறது. கோயில் திருப்பணி மேற்கொள்ள இரு வல்லுநர் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட, சென்னை வடபழநி ஆண்டவர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராணிப்பேட்டை காளகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 551 கோயில்களுக்கு...
தமிழகம்

என்னை தொட முடியாததால் என்னுடன் இருப்பவர்களை கைது செய்கிறார்கள் – சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில், நாம் தமிழர் கட்சியினரை சங்கி என சொல்லப்படுவது குறித்து பேசுகையில், தன்னுடைய காலணியை எடுத்து மேடையிலேயே காண்பித்தார். கட்சியின் தலைமையில் இருந்துகொண்டு பொதுவெளியில் சீமான் இப்படி நடந்துகொண்டது பலரை முகம் சுளிக்க வைத்தது. இதுவரை வாயில் மட்டுமே அநாகரீகத்தை கொண்டிருந்த சீமான் தற்போது தன்னுடைய செயலிலும் அதை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார் என்ற விமர்சனமும் வைத்தனர். இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஹிம்லர் என்பவர் இஸ்லாமியர்களுக்கு திமுக துரோகி எனவும், திமுகவை கருவறுக்க வேண்டுமெனவும் மேடையில் பேசினார். அப்போது அங்கிருந்த திமுகவினர் உடனடியாக மேடையில் ஏறி மேடையில் இருந்தவர்களை தாக்க முயன்றனர். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாகவும், பெரிய கட்சியாகவும் இருக்கும் திமுகவினர் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கக்கூடாது என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். திமுகவினரின்...
தமிழகம்

‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் 4 நாட்களில் 456 பேர் பயன் பெற்றனர்: தமிழக சுகாதாரத் துறை தகவல்

'இன்னுயிர் காப்போம்' திட்டத்தின் மூலம் 4 நாட்களில் 456 பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக ரூ.40 லட்சத்து 93,800 செலவிடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள் ளது. சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கவும், விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்துக்கு கட்டணமில்லாத அவசரசிகிச்சை அளிக்கும் வகையிலும்,'இன்னுயிர் காப்போம்' என்றதிட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 18-ம் தேதி மேல்மருவத்தூரில் தொடங்கி வைத்தார். 609 மருத்துவமனைகள் இத்திட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணிநேரத்துக்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை அரசேஏற்றுக் கொள்கிறது. இத்திட்டத்தில் 609 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. முதல்வர் காப்பீடு அட்டை பயனாளிகள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் என்ற வேறுபாடின்றி தமிழக எல்லைகளில் விபத்தில் சிக்கும்அனைவருக்கும் 48 மணி நேரஇலவச...
தமிழகம்

சட்டப்பூர்வ ஒப்பந்தம் இல்லாமல், வாடகை தராமல் கோயில் சொத்து ஆக்கிரமிப்போர் மீது போலீஸில் புகார்: அலுவலர்களுக்கு அறநிலையத் துறை அறிவுறுத்தல்

சட்டப்பூர்வ வாடகை ஒப்பந்தம் இல்லாமல், வாடகை செலுத்தாமல் கோயில் இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபு பல்வேறுகோயில்களில் ஆய்வு நடத்தி,கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுவரை ரூ.1,600 கோடிமதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு, அந்த நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, எல்லைக்குள் கம்பி வேலிஅமைக்கும் பணி நடந்துவருகிறது. சட்டப்பூர்வ வாடகை ஒப்பந்தம் இல்லாமலும், உரிய வாடகை செலுத்தாமலும் கோயில்களுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வரும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க ஆணையரது எழுத்து மூலமான புகாரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆக்கிரமிப்பாளர் மீது எந்த ஒரு தனிநபரும் எழுத்துப்பூர்வமான புகாரை...
தமிழகம்

இன்று உண்ணாவிரதப் போராட்டம் – மீனவர்கள் சங்கம் அறிவிப்பு!

இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த டிச.18 ஆம் தேதியன்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களைச் சிறைபிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு,அவர்கள் டிச.31-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து,சில மணி நேரங்களே ஆன நிலையில்,மேலும் 12 மீனவர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,55 மீனவர்களை...
தமிழகம்

‘வேதா நிலையம்’ தொடர்பாக தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு

வேதா நிலையம் இல்லம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பைஉயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. ஜெயலலிதா வசித்த போயஸ்தோட்டம் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் அதைகையகப்படுத்தியும், அரசுடமையாக்கியும் கடந்த அதிமுக அரசுஉத்தரவிட்டது. வேதா நிலையம் இல்லத்துக்கான இழப்பீட்டுத் தொகையும் நீதிமன்றத்தில் அரசு சார்பில் செலுத்தப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களான ஜெ.தீபா,ஜெ.தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என்றும், இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்தும்கடந்த நவ.24-ல் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக தரப்பிலும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பிலும் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள்...
தமிழகம்

திடக்கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பம் மூலம் புதுமையான தீர்வு வழங்கினால் ரூ.5 லட்சம் பரிசு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

திடக்கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பம் மூலம் புதுமையான தீர்வுகளை வழங்குவோருக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் தினமும் சுமார் 5 ஆயிரத்து 100 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பைகளை வீடு வீடாக வரும் தூய்மைப் பணியாளரிடம், மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து மட்டுமே வழங்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குப்பைகளை சாலையில் வீசி எறிவோர், தீயிட்டு கொளுத்துவோர் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இருப்பினும் குப்பைகளை வகை பிரித்து பெறுவதிலும், வீடு வீடாக குப்பைகளை சேகரிப்பதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையை தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துவதற்கு புதுமையான தீர்வுகளை வழங்குவோருக்கு தூய்மை...
தமிழகம்

ஒரே நாளில் 55 மீனவர்கள் கைது! இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 43 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் . ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர் . நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை , வழிமறித்த இலங்கை கடற்படையினர் , எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 43 மீனவர்களுடன் , 6 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்துச் சென்றனர் . அவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தினர் . அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. கைதுக்கு மீனவ சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. இந்தநிலையில் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்குவந்த இலங்கை கடற்படையினர் அவர்களை...
தமிழகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் 10 ஆயிரம் பேர் முன்பதிவு: சிறப்பு பேருந்துகள் குறித்து இன்று அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல அரசு விரைவு, சொகுசுபேருந்துகளில் இதுவரை 10 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022 ஜன.14-ம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பலரும் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். 30 நாட்களுக்கு முன்பு அரசுவிரைவு பேருந்துகளில் டிக்கெட்முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், தற்போது ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுபற்றி கேட்டபோது போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதிஇருப்பதால், பொங்கலுக்கு முன்கூட்டியே செல்ல விரும்புவோர்தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு, சொகுசு பேருந்துகளில் இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 10 ஆயிரம் டிக்கெட்கள்பதிவு செய்யப்பட்டுள்ளன. பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் சென்னையில் 20-ம்...
தமிழகம்

கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா பரவலை முன்னிட்டு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு எஸ் வகை திரிபு கண்டறியப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், கிறிஸ்மஸ் மற்றும் புது வருட பிறப்பு கொண்டாட்டங்கள் அடுத்தடுத்து வர இருக்கின்றன. இதனால், பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூடாமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை, நீர்வீழ்ச்சி பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, வருகிற 31-ந் தேதி முதல் ஜனவரி 2-ந் தேதி வரை பொதுமக்களுக்கு...
1 489 490 491 492 493 545
Page 491 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!