தமிழகம்

தமிழகம்

“தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம்” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த பல்வேறு மாவட்டங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு முடிவெடுத்தது. 2013 , 2014, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப உத்தரவிட்டது. தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 4989, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும் 5154 ஆசிரியர் பணியிடங்கள், 10,000 தொகுப்பு புதிய...
தமிழகம்

ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டம். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினரான சண்முகம், உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ' கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை பொதுக்குழு மூலமாக நீக்க முடியாது. இவர்கள் இருவரும் சேர்ந்து விதிகளை திருத்தினால் மட்டுமே சாத்தியமாகும். கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் உயர் நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும் எனக்தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை...
தமிழகம்

தமிழக மக்களே உஷார்.. உடனே App- ஐ டெலிட் செய்யுங்க… காவல்துறை திடீர் எச்சரிக்கை

சமீபகாலமாக ஆன்லைன் கடன் செயலிகள் அராஜகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் ஏராளமான ஆன்லைன் கடன் செயலிகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அதில் சிறு கடன்கள் வழங்கப்படுகின்றன. அதிலும் பெரிய பங்கை கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதிக வட்டியும் விதிக்கப்படுகிறது. ஒருவேளை கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் கடன் வாங்கியோரை துன்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. எனவே இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதனைப்போலவே ஆன்லைன் கடன் செயலிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடன் செயலிகளில் பொதுமக்கள் யாரும் கடன் பெற வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை வீடியோ...
தமிழகம்

2 ஆண்டுகளுக்கு பிறகு…வெகு சிறப்பாக தொடங்கிய மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்!

மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது மதுரை மல்லி மற்றும் மீனாட்சி அம்மன் கோவில்தான்.அந்த வகையில்,ஆண்டு தோறும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை நிகழ்வையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலத்தில் காணப்படும். இந்நிலையில்,சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்வை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேரோட்டம் வெகு சிறப்பாக சற்று முன்னர் தொடங்கியுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் தேர் திருவிழாவானது பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக,இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,இத்தேர் பவனியைக் காண மதுரை மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம் குவிந்துள்ளது.இதனிடையே,கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனும் எழுந்தருளினர். அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது....
தமிழகம்

மீன்பிடி தடை காலம்:நள்ளிரவு முதல் அமல்-61 நாள்கள் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை!

பொதுவாக வங்கக்கடலில் கடல்வாழ் உயிரினம் மற்றும் மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு, தமிழகத்தின் திருவள்ளூர்,சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவானது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.அதைப்போல,புதுச்சேரியிலும் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீன்களின் விலை பன்மடங்கு உயரும் என்று கூறப்படுகிறது. மேலும்,இந்த மீன்பிடி தடைக்காலத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்கான உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....
தமிழகம்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தந்ததாக வழக்கு – அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் ஆஜர்

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆஜரானார். இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகரை, 2017 ஏப்.16-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அமலாக்கத் துறையினர் தினகரனிடம் விசாரணை நடத்தியபோது, ''சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது. அவரிடம் நான் பேசியதும் கிடையாது'' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், தற்போது ஜாமீனில் இருக்கிறார். இதற்கிடையே, சுகேஷிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில், தினகரன் முன்பணமாக ரூ.2...
தமிழகம்

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2,300 கோடியில் 750 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ரூ.2,300 கோடி செலவில் 750 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசியபோது அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 150 கி.மீ. சாலைகள் 4 வழித் தடமாகவும், 600 கி.மீ. சாலைகள் 2 வழித்தடமாகவும் ரூ.2,300 கோடிமதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும். சென்னை அண்ணா சாலையில் 5 குறுக்கு சாலைகளில் ரூ.485 கோடி செலவில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் குன்றத்தூர் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி ரூ.322 கோடி செலவிலும், பாடி...
தமிழகம்

மத்திய பல்கலை.களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தீர்மானம் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று இதுகுறித்து அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு என்று அறிவித்து, அதை2022-23 கல்வியாண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள்கூட இளங்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஓர் அறிவிப்பை...
தமிழகம்

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம்செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29 வயது மாணவி ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அதே துறையில் ஆராய்ச்சிப் படிப்பு படித்த மாணவர்கள், துறையின் Co-Guides மற்றும் பேராசிரியர் என 9 பேர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைகளை செய்ததாக மாணவி அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் 2 பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்....
தமிழகம்

தூத்துக்குடிக்கு 4,000 டன் நிலக்கரி வருகை; மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வந்ததை அடுத்து மின் உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்த உள்ள 5 யூனிட்டுகளில் ஒன்றில் மட்டும் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாததால் தூத்துக்குடி அனல் மின் நிலையம் முடங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வந்துள்ளது. இதையடுத்து அனைத்து யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது.  ...
1 488 489 490 491 492 563
Page 490 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!