கூட்டுறவு சங்க இயக்குநர்களின் பதவிக்காலம் 3 ஆண்டாக குறைப்பு; பேரவையில் மசோதா நிறைவேற்றம்: எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு
கூட்டுறவு சங்க இயக்குநர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வகை செய்யும் சட்டமுன்வடிவு பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் கூட்டுறவுச் சங்க இயக்குநர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வகை செய்யும் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று அறிமுகம் செய்தார். இந்தசட்ட முன்வடிவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு இந்த சட்ட முன்வடிவு பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட முன்வடிவில் கூறப்பட்டிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களிடம்...
