தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயக்கம் – தொமுச அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று காலை முதல் 60% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தொமுச தெரிவித்துள்ளது. விலைவாசி உயர்வு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும்,இன்றும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தன.அதன்படி, நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை போராட்டம் நடத்தி வருகின்றன.இதன்காரணமாக, தமிழகத்தில் நேற்று காலை 11 மணி நிலவரப்படி 68% பேருந்துகள் ஓடவில்லை என்றும் 32% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும் தமிழக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்தது.இதனால்,மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் என பொதுமக்கள் பலர் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த...
