இன்று தமிழக ஆளுநராக ஆர் என் ரவி பதவியேற்பு.!!
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர் என் ரவி தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆர் என் ரவி 1976 ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்துள்ளர். இதையடுத்து, மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பிறகு நாகலாந்து மாநில ஆளுநராக 2019ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். தற்போது தமிழகத்தில் 15வது ஆளுநராக ஆர் என் ரவி இன்று பதவி ஏற்க உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளது. ஆர் என் ரவிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி பதவி பிரமாணம்...