ஊரக உள்ளாட்சி தேர்தலில் குறைவான இடங்கள் ஒதுக்கீடு: திமுக மீது காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தி
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு மிக குறைவான இடங்களை திமுக ஒதுக்கியுள்ளதால், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. தமிழகத்தில் விடுபட்டுப்போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6, 9-ம்தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடந்தது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய 9 கட்சிகள் உள்ளன. கூட்டணி கட்சிகளிடம் பேசி...