ரூ.150 கோடியில் காசிமேடு மீன்பிடி துறைமுகம்…புதிய வசதிகளுடன், கூடுதல் படகுகள் நிறுத்த ஏற்பாடு
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை, 150 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இதில், நாகூரார் தோட்டத்தில், 500 படகுகளை நிறுத்தும் வகையில் படகு அணையும் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. மீனவர்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், பாதாள சாக்கடை திட்டமும் அமல்படுத்தப்படுவதால் மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம், 1984 முதல் செயல்பட்டு வருகிறது. இது, 23 மீனவ கிராமங்களைச் சேர்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், 1,200 விசைப்படகுகள், 2,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் வாயிலாக, மீன்பிடி தொழில் நடக்கிறது. இதன் மூலம், தினமும், 1,000 டன் மீன் வகைகள் கையாளப்படுகின்றன. இங்கிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும்; துபாய், சிங்கப்பூர், ஜப்பான், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மீன்...