தமிழகம்

தமிழகம்

இன்று முதல் பள்ளி,கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.பின்னர்,தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா 3-வது...
தமிழகம்

தேர்தல் பணி பயிற்சியை புறக்கணித்தால் நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

உள்ளாட்சி தேர்தல் பணி பயிற்சியில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்குமாறு பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது.வழக்கம்போல, தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு 3 கட்டமாக தேர்தல் பணி பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல்கட்ட பயிற்சி வகுப்பு இன்று (ஜன.31) நடைபெறுகிறது. பிப். 9, 18-ம் தேதிகளில் அடுத்தகட்ட பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன. இந்நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்: தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ சிகிச்சை இருந்தால், அதற்கான ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம். தவறான...
தமிழகம்

கடற்கரைகளில் நாளை முதல் மக்களுக்கு அனுமதி: கரோனா கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்

மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகளில் நாளை முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது. மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் கூட அரசு தடை விதித்திருந்தது. தற்போது தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த 28-ம் தேதி முதல் அரசு விலக்கிக் கொண்டது. குறிப்பாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்குஆகியவை விலக்கிக்கொள்ளப்பட்டது. பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளை முதல்சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகியவற்றுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, ''மெரினா, பெசன்ட்...
தமிழகம்

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 20-வது தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றுஅச்சுறுத்தி வருவதால், கரோனாதடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 20-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசியும், இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் தகுதியுள்ளோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும். தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.அதனால், தடுப்பூசி மையங்கள்நாளை செயல்படாது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்....
தமிழகம்

நாங்கள் கேட்ட இடங்களை பரிசீலிப்பதாக திமுக உறுதியளித்துள்ளது – கே.எஸ்.அழகிரி பேட்டி

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதையடுத்து தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதையடுத்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பு மனுக்களை இன்று முதல் தாக்கல் செய்யத் தொடங்கினார்கள். திமுக, அதிமுக கூட்டணியில் இன்னும் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது இடப்பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. பேச்சு வார்த்தைக்குப்பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, "தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் கேட்டு பெற வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2...
தமிழகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவினர் கலந்தாய்வில் 73 இடங்கள் நிரம்பின: 7.5% உள்ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு

மருத்துவப் படிப்புக்கான சிறப்புப்பிரிவினர் கலந்தாய்வில் 71 எம்பிபிஎஸ், 2 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 73 இடங்கள் நிரம்பின. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவகல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் இடங்கள், 1,930 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,145 எம்பிபிஎஸ் இடங்கள், 635 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு 2021-22-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 24 ஆயிரத்து 949 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 14 ஆயிரத்து 913 மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு 1,806 பேர் இடம் பெற்றுள்ளனர். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இடம்பெறாத...
தமிழகம்

ஆன்லைனில் தேர்வு நடைபெறும் – அரசு அறிவிப்பு

பிப்ரவரி 1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், பிப்ரவரி 1 முதல் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதியாண்டு மாணவர்களை தவிற மற்ற மாணவர்கள் ஆன்லைன் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுதலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் குழப்பம் ஏதுமில்லாமல் மகிழ்ச்சியுடன் தேர்வுக்கு தயாராகி வந்தனர். இந்நிலையில் நேற்று தமிழக அரசு அளித்த கூடுதல் தளர்வுகளில் பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்தது. 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1ஆம் தேதி...
தமிழகம்

பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நாளை வேட்புமனுத் தாக்கல்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட ஆயிரத்து 374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி, பிப்ரவரி 4ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவித்தார். 5ஆம் தேதி வேட்பு...
தமிழகம்

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் (MBBS) மற்றும் பி.டி.எஸ் (BDS) படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ் நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,349 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2,650 எம்.பி.பி.எஸ் இடங்கள் என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களும், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,930 பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களும் உள்ளன. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு தொடங்குகிறது. இன்று சிறப்பு பிரிவினரான, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. 7.5 சதவிகித மருத்துவக் கல்வி...
தமிழகம்

தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், நடிகை சௌகார் ஜானகி உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 107 பேர் பத்மஸ்ரீ விருது பெற உள்ளனர். அவர்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தமிழகத்தை சேர்ந்த சதிராட்டக் கலைஞரான முத்து கண்ணம்மாள், கிளாரிநெட் இசைக்கலைஞர் ஏ.கே.சி நடராஜன், எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் பழம்பெரும் நடிகை...
1 436 437 438 439 440 499
Page 438 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!