தமிழகம்

தமிழகம்

தமிழ்நாட்டில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு!

தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கிடைத்து வருகிறது. கடைசியாக கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி டாஸ்மாக் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் டாஸ்மாக் மதுபானங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானங்களில் விலை இன்று உயர்த்தப்படுகிறது. பகல் 12 மணிக்கு கடை திறந்த உடன் இந்த விலை உயர்வு அமலாகுகிறது. அதன்படி, டாஸ்மாக் மதுபானக்கடைகளில் குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுகிறது. மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 20 ரூபாய் உயர்த்தப்படுகிறது. ஆப் பாட்டிலுக்கு சாதாரண மதுபான ரகங்களுக்கு 20 ரூபாய் உயர்த்தப்படுகிறது. மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 40 ரூபாய் உயர்த்தப்படுகிறது. புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு...
தமிழகம்

கோவை திமுக மகளிர் அணி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்: செயற்குழுவில் வெளிப்படை பேச்சு காரணமா?

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் மீனா ஜெயக்குமார். திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலராகப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கோவை மாநகராட்சி 57-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முயற்சித்து வந்தார். வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பே, தனதுவார்டில் தேர்தல் அலுவலகம் திறந்துவைத்து, வாக்கு சேகரித்தார். இவர்தான் மேயர் வேட்பாளர் என கருத்துகள் பரவின. இந்நிலையில், வேட்பாளர் பட்டியலில் அவர் இடம்பெறாததால், ஏமாற்றத்துக்குள்ளானார். இந்நிலையில். உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் திமுக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த கோவை திமுக செயற்குழுக் கூட்டம்கடந்த பிப்ரவரி 26-ல் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய மீனா ஜெயக்குமார், 'மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக் என் அரசியல் வளர்ச்சியை தடுத்தார். தலைமைக்கு தவறான தகவல்களை அளித்து எனக்கு கவுன்சிலர் சீட் கிடைக்காமல் செய்தார். உங்கள்...
தமிழகம்

மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்டும் முயற்சியை தடுப்போம்.. துரைமுருகன்

மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்டும் முயற்சியை தடுப்போம் என தமிழக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக அதன் 2022-2023 பட்ஜெட்டில் ரூ 1000 கோடி நிகி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளன. மேகதாது அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே இந்த மாதிரி அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது. கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் மதிக்காமல் தன்னிச்சையாக காவிரி பன்மாநில நதியின் குறுக்கே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும் எந்தவித...
தமிழகம்

நாட்டிலேயே முதல்முறையாக சிவகாசியில் சூரிய மின்சக்தியில் இயங்கும் சிறுதானிய சுத்திகரிப்பு நிலையம்

நாட்டிலேயே முதல்முறையாக முற்றிலும் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் சிறுதானிய சுத்திகரிப்பு நிலையம் சிவகாசி அருகே அமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சிறுகுறு நிறுவனங் களை ஒருங்கிணைத்தல் திட்டத்தின் கீழ் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் (ஓடிஓபி) என்ற அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்துக்கு சிறுதானியங்கள் (குதிரைவாலி, தினை, சாமை, வரகு, கம்பு, வெள்ளை சோளம்) ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றை விவசாயிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக முதல் நிலை சுத்திகரிப்பு மற்றும் மதிப்புக்கூட்டு நிலையத்தை அமைக்க 35 சதவீத மானியத்தை (அதிகபட்சமாக ரூ.10 லட்சம்) மத்திய அரசு வழங்குகிறது. இதன் மூலம் விவசாயிகள் சிறுதா னியங்களை விளைவிக்கும் அதே இடத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்ய முடியும். இதற்காக வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையால் பயிற்சி பெற்ற அல்லது தமிழ் நாடு ஊரக...
தமிழகம்

3 மணி நேர காத்திருப்பு.. 20 நிமிடங்கள் ஆலோசனை – சசிகலா ஓபிஎஸ் தம்பி சந்திப்பால் பரபரப்பில் அதிமுக

ஆன்மீக சுற்றுப்பயணமாக திருச்செந்தூர் வந்த சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜா தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டாா். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்தது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சசிகலா இரண்டு நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுப்பயணமாக நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து அதிமுக கட்சி கொடி கட்டிய கார் மூலம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதியில் உள்ள விசுவாமித்திரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து கார் மூலம் திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூர் ரயில் நிலையம்...
தமிழகம்

சென்னை மேயராக ஆர்.பிரியா பதவியேற்பு: துணை மேயராக மு.மகேஷ்குமார் போட்டியின்றி தேர்வு

சென்னை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்ட ஆர்.பிரியா, நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். துணை மேயராக மு.மகேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவிலேயே பழமையானது சென்னை மாநகராட்சி. இது 334 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. கடந்த மாதம் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் 200 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக 153 இடங்களிலும், அதிமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 4 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அமமுக ஆகியவை தலா 1 இடத்திலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2-ம் தேதி ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை மாநகராட்சி மேயர்...
தமிழகம்

28 ஆண்டுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு; வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தகவல்

வங்கக் கடலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர்எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். காலநிலை மாற்றம் காரணமாகதமிழகப் பகுதியில் பருவத்தே நடக்கக்கூடிய அனைத்தும் அண்மை காலமாக மாற்றமடைந்து வருகிறது. ஜனவரியிலும், பிப்ரவரியிலும் கனமழை பெய்கிறது. கடும்வறட்சி ஏற்படுகிறது. திடீர் வெள்ளம்ஏற்படுகிறது. ஓராண்டில் மழை பெய்யும் நாட்கள் குறைந்துவிட்டன. ஆனால் ஓராண்டில் பெய்ய வேண்டிய அளவு மழை குறுகிய நாட் களில் பெய்துவிடுகிறது. பருவம் தவறிய மழையால்டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர்கள் அறுவடை நேரத்தில் மழையால் அழுகி வீணாகின்றன. இவ்வாறு பருவம் தவறி மழை பெய்வது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், 'இந்து தமிழ் திசை'யிடம் கூறும்போது, ''மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவது அரிதானது தான்....
தமிழகம்

சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தால் சர்ச்சை: முக்கிய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே தீவிர ஆலோசனை

சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற தேனி மாவட்ட நிர்வாகிகளின் தீர்மானத்தால் கட்சியில் மீண்டும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்களுடன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்ஸும் தனித்தனியே தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2019 மக்களவை தேர்தல், அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் தோல்வியை தழுவியது. திமுக ஆட்சியில், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. ஒவ்வொரு தேர்தல் முடிவு வெளியான பிறகும், 'ஒற்றை தலைமை வேண்டும். நீக்கப்பட்ட சசிகலா, தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும்' என்ற கோரிக்கைகள் அதிமுகவுக்குள் எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 'சசிகலாவை எக்காரணம் கொண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது'...
தமிழகம்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் புரட்டி எடுக்க போகும் கனமழை

தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை,...
தமிழகம்

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரையில் பள்ளி வேலை நாட்களாகும். மேலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரையில் செய்முறைத்தேர்வு நடத்தப்படும். அதே போல 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் தேர்வு நடத்தப்படும். மேலும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே...
1 430 431 432 433 434 499
Page 432 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!