தமிழகம்

தமிழகம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு பெரம்பலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கலையரசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் தாலுகா, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, பள்ளியை அரசுடைமையாக்க வேண்டும். இந்த சம்பவத்தில்...
தமிழகம்

அதிமுக தலைமை அலுவலகம் போலீஸ் பாதுகாப்புடன் திறப்பு: சேதம், காணாமல் போன பொருட்களை மதிப்பிடும் பணி தொடக்கம்

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அதிமுக தலைமைஅலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திறக்கப்பட்டது. அதிமுகவில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடும் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு பழனிசாமி தலைமையில் கடந்த 11-ம்தேதி சென்னை வானகரத்தில் அதிமுக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் வேளையில், பிரச்சார வாகனத்தில் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு திடீரென வந்தார். அப்போது அங்கிருந்த பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு பல்வேறு அறைகளை சேதப்படுத்தி, ஆவணங்கள் மற்றும் விலைமதிப்புள்ள ஜெயலலிதாவின் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அவர்கள்...
தமிழகம்

சென்னையின் 75% மக்களுக்கு பாதிப்பு! அலட்சியம் காட்டுவதா? மாநகராட்சிக்கு அன்புமணி கண்டனம்!

சென்னையில் மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக ஏற்படும் புழுதி மக்களுக்கு நோயை ஏற்படுத்தும் என்பதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளால் வரலாறு காணாத புழுதி உருவாகி சென்னை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. புழுதியையும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் கட்டுப்படுத்துவது இந்த வளர்ச்சித் திட்டங்களின் ஓர் அங்கமாக சேர்க்கப்பட்டிருக்கும் போதிலும், அது பின்பற்றப்படாதது கண்டிக்கத்தக்கது. சென்னையில் மாதவரம் - சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் & பூவிருந்தவல்லி என மூன்று வழித்தடங்களில் 121 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளும், சென்னையில்...
தமிழகம்

ஓ.பி.ரவீந்திரநாத்தின் அதிமுக எம்.பி. அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்: மக்களவைத் தலைவருக்கு இபிஎஸ் கடிதம்

ஓபிஎஸ் மகனும், தேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரதுஅதிமுக எம்.பி. அந்தஸ்தை ரத்துசெய்யுமாறு மக்களவை தலைவருக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி தலைமைஅலுவலகத்தையும் சட்டப் போராட்டத்தின் மூலமாக பழனிசாமி கைப்பற்றியுள்ளார். இதற்கிடையே கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது இரு மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கட்சியின் பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசனை பழனிசாமி நியமித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக...
தமிழகம்

மின் கட்டண உயர்வை கண்டித்து 23-ந்தேதி பா.ஜ.க. போராட்டம் -அண்ணாமலை அறிவிப்பு

தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அடுக்கடுக்காக பல சாக்கு போக்குகளை சொல்லி அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால் 2 மாதங்களுக்கு 1,000 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை பயன்பெறுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. குறிப்பிட்டிருந்தது. ஆனால் இன்று தி.மு.க. அரசு, தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. அதேவேளை தி.மு.க. அரசு தனது திறனற்ற செயல்பாடுகளை மறைக்க மத்திய அரசை குறை கூறுவதை தமிழக பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவோம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ள பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவது நமது கடமையாகும். மாநில மின் பகிர்மான மையங்களில் சீர்திருத்தங்களை கொண்டு வர ரூ.3.03 லட்சம்...
தமிழகம்

அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம்..?: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் போது, தலைமை அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை. வழக்கு நிலுவையில் இருந்தாலும் சீல் வைக்க முடியாது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்சனை ஏற்படாது...
தமிழகம்

13,495 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. தற்போது இந்த மாணவ மாணவிகள் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, தற்போது வேலூர் மாவட்டத்திற்கு இலவச சைக்கிள்கள் வந்துள்ளன. மேலும் விரைவில் அம்மாவட்டத்தில் உள்ள 84 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 13,495 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
தமிழகம்

பள்ளி மாணவி மரணம்: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல் ஹக் தலைமையில் ஏடிஎஸ்பி கோமதி உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ஸ்ரீமதியின் உடல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று மறுபிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனை...
தமிழகம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: பல உயிர்களை இழந்த பின்னர் தான் தமிழக அரசு கொண்டுவருமா ? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பல உயிர்களை இழந்த பின்னர் தான் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருமா? என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியாளர்களின் பண பசிக்கு பல உயிர்கள் பலியிடப்பட்டு வருகின்றன. கொலை, கொள்ளை, ஆயுதங்கள், போதை மருந்து கடத்தல் மற்றும் 'ஆன்லைன்' சூதாட்டங்களால் கடந்த ஓராண்டில் நாடும், நாட்டு மக்களும் சீரழிந்து, சீர்குலைந்துபோய் இருக்கிறார்கள். 'ஆன்லைன்' ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதை கண்டு, அந்த சூதாட்டத்தையே தடை செய்து அ.தி.மு.க. அரசு சட்டம் இயற்றியது. ஆன்லைன் ரம்மி தடை தி.மு.க. அரசு நீதிமன்றத்தில் முறையாக, மூத்த வக்கீல்களை வைத்து வாதாடாமல் இருந்ததால், 'ஆன்லைன்' சூதாட்டம் நடத்தும் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான...
தமிழகம்

‘எம்.பி. செந்தில் குமாரின் நடவடிக்கை தேவையற்றது’ – கார்த்தி சிதம்பரம் கருத்தால் பரபரப்பு

திமுகவை சேர்ந்த ட்விட்டர் பயனாளிகள், அரசு நிகழ்ச்சிகளும், வீட்டில் நடைபெறும் சடங்குகளும் ஒன்றாகுமா என்று கார்த்தி சிதம்பரத்திடம் எதிர்க்கேள்வி கேட்டுள்ளார்கள். அரசு விழாவின்போது பூஜை நிகழ்ச்சியை தர்மபுரி எம்.பி. செந்தில் குமார் தடுத்து நிறுத்திய நிலையில், அவரது இந்த நடவடிக்கை தேவையற்றது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரத்தில், ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதையொட்டி, துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்குவதற்காக பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார், பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடுமையாக திட்டினார். கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: உறவினர்கள் கல்வீச்சு... போலீசார் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு அரசு விழாவில் இந்து...
1 421 422 423 424 425 499
Page 423 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!