தமிழகம்

தமிழகம்

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆண்களுக்கான கருத்தடை – வாசக்டெமி விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆண்களுக்கான கருத்தடை - வாசக்டெமி விழிப்புணர்வு வாகனத்தைமாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் மருத்துவர் அன்பு செழியன் குடும்பநல மருத்துவர் கலந்து கொண்டு சிகிச்சை முறையின் சிறப்பு அம்சங்களை கூறினார். எளிய பாதுகாப்பான வாசக்டமி கத்தியின்றி தையல் இன்றி செய்யப்படுகிறது. ஆனந்த வாழ்க்கை பெற தடை இல்லை. மேலும் பக்க விளைவுகள் எதுவும் இல்லை, கடின உழைப்பினை மேற்கொள்ளலாம். மயக்க மருந்து அவசியமில்லை. மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. அளவான குடும்பத்தை அமைக்கலாம். இச் சிகிச்சையின் முறைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். இந்த நிகழ்வில் மருத்துவர் அன்புச் செழியனோடு மருத்துவ ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே தொடர் மழை காரணமாக குளம் போல் காட்சியளித்த அரசு பள்ளி உடனடியாக சீரமைத்து கொடுத்த எம் எல் ஏ

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கழுங்குபட்டியில் இயங்கி வரும் ஆரம்ப அரசு பள்ளியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக பள்ளியில் குளம் போல் தண்ணீர் தேங்கி காட்சியளித்தது மேலும் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு படிக்கச் செல்ல முடியாமல் தவித்து வந்து மேலும் படிப்பை கைவிடாமல் தெருவோரத்தில் இருக்கும் திண்ணையில் அமர்ந்து மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்று தந்து வந்தனர். இதனை அறிந்த எம்எல்ஏ ஐயப்பன் விரைந்து சென்று கழுங்குபட்டியில் உள்ள பள்ளியில் தேங்கி இருக்கும் தண்ணீரை உடனடியாக அகற்றுவதற்கு ஏற்பாடு செய்து சொந்த செலவில் சீரமைத்து கொடுத்தார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு வழக்கம்போல் சென்றனர். ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளியில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றி கொடுத்த எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் ஆசிரியர்கள் பள்ளி...
தமிழகம்

ஆரம்பப் பள்ளி மாணவ மாணவிகள் வாழ்க்கையில் விளையாடுகிறது மாநகராட்சி சுற்றுச்சுவர் இடிந்து ஓராண்டு கடந்தும் சரி செய்யாத அவல நிலை உயிர்பலி ஆகும் நடவடிக்கை எடுக்குமா

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு பழங்காநத்தம் உழவர் சந்தை அருகே செயல்பட்டு வருகிறது ஜெயகோபால் கரடியா பள்ளி இது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது இதன் கழிவறை அருகே சுற்று சுவர் இடிந்து விழுந்து ஓர் ஆண்டை கடந்தும் பேரளவிற்கு வெறும் கருப்பு பலகை வைத்து அடைத்து வைத்துள்ளார்கள்.  மேலும் அறிய உள்ள சுற்றுச் சுவர்கள் எந்த நேரத்திலும் கீழே நிலையில் உள்ளது இது குறித்து அப்பொழுது மாநகராட்சி அதிகாரியிடம் கேட்ட பொழுது உடனடியாக சரி செய்து விடுவோம் என சொன்னார்கள்.  ஆனால் ஓராண்டு கடந்தும் அதே நிலை நீடிப்பதால் பள்ளி மாணவ மாணவிகள் கழிவறை அருகே செல்வதற்கு அச்சத்துடன் சென்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மழை காலம் என்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்த சுற்றுச்சூழல் பாதி மீண்டும் விழுந்துவிடுமோ என ஐயாத்திலேயே...
தமிழகம்

சிவகாசி பகுதிகளில், இன்று அதிகாலை பலத்த மழை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக முற்றிலும் மழை இல்லாத நிலையில், கோடை காலத்தைப் போல வெயில் கடுமையாக இருந்து வந்தது. கடந்த 2 நாட்களாக மேகமூட்டமாக இருந்தாலும் மழை பெய்யவில்லை. இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று பலத்த மழை பெய்தது. திடீர் மழை காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீர் வாறுகால்கள் நிரம்பி, மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றது. சிவகாசி புறநகர் பகுதிகள், நாரணாபுரம் சாலை, ஓம் சேர்மா நகர், அம்மன் நகர், செல்லையநாயக்கன்பட்டி, மீனம்பட்டி, பாறைப்பட்டி, பேராபட்டி, அனுப்பங்குளம், மேட்டமலை, சித்துராஜபுரம், சசிநகர், பேர்நாயக்கன்பட்டி, மடத்துப்பட்டி, உப்புபட்டி,...
தமிழகம்

காட்பாடி அருகே அமைச்சர் விழாவிற்கு பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மார்கபந்து (54). இவர் வடுகந்தாங்கல் முன்னாள் திமுக பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தற்போது திமுக ஊராட்சி செயலாளராக உள்ளார்.  இந்த நிலையில் நேற்று 28-ம் தேதி திமுக இளைஞர் அணிசெயலாளர் உதயநிதி பிறந்தநாள் விழா பழைய கிருஷ்ணாவரத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொள்வதாக இருந்தது.  இதற்காக மார்கபந்து அமைச்சரை வரவேற்க வடுகந்தாங்கல் பஸ் நிலையத்தில் பிளாக்ஸ் பேனர் கட்டும் பணியில் ஈடுப்பட்டு இருந்தார். அப்பேரது மேலே இருந்த மின்கம்பியில் பேனரின் இரும்பு சட்டம் உரசியது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயேஉயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பேனர் கட்டும் போது அவருக்கு உதவியாக இருந்த வடுகந்தாங்கல்...
தமிழகம்

சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் “வானவில் மன்றம்” திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மாணவ மாணவியர்கள் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் சிறந்து விளங்குவதற்காக "வானவில் மன்றம்" என்ற திட்டத்தினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து, இத்திட்டம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினார். அறிவியல் மற்றும் கணித பாடப்பிரிவுகளில் மாணவர்களின் தரத்தை மேம்படுத்த அப்பாட பிரிவுகளின் மிகச் சிறந்த கருத்தாளர்களைக் கொண்டு கற்பித்து, அதில் தலைசிறந்த மாணவர்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள்,கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : சந்தோஷ் சிவம்...
தமிழகம்

காட்பாடி அடுத்த அரும்பருதியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அரும்பருதிகிராமத்தில் காங்கிரஸ் கமிட்டின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் வேலூர் மாவட்ட துணைத்தலைவர் டி. திருமால், ஒன்றியதலைவர் இளங்கோ,வேலூர் மாநகர் 1-வது மண்டல தலைவர் பி.பாலகுமார், காட்பாடி ஒன்றிய துணைத்தலைவர் கோரந்தாங்கல் சேகர், அரும்பருத்தி வெங்கடேசன், சேவூர் சரவணன், பாலா, லோகமூர்த்தி, காந்தி, ராகவன் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். இறுதியில் அரும்பருத்தி வெங்கடேசன் நன்றி கூறினார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

தமிழக ஆளுநர் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது. பாஜக பாலியல் ஜனதா கட்சியாக உள்ளது.சூர்யா சிவா மீது தமிழக காவல்துறை வழக்காக பதிவு செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

மதுரை திருநகர் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 37 வதுதேசியப் புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கண்காட்சியை திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்: ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செயல்பாடு குறித்த கேள்விக்கு, தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது. இது மிகப்பெரிய ஐயத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது.  பல மக்கள் தங்களின் சேமிப்புகளையும், கடன் வாங்கி பணங்களையும் இழந்து தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆளுநர் தாமதப்படுத்துவது அவரின் நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.  ஆளுநர் ஏன், எதற்காக இதை ஆதரிக்கிறார் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இதைப்...
தமிழகம்

விசிக நிர்வாகியால் மிரட்டப்பட்ட இராஜபாளையம் ராணுவீரரின் குடும்பத்திற்கு பாஜகவினர் 200 பேர் ஊர்வலமாக சென்று ஆதரவு – குடும்பத்தினருடன் செல்போனில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதி சேர்ந்த  விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக சமூக வலையதளத்தில் கருத்து தெரிவித்ததற்காக அக்கட்சி நிர்வாகியால் மிரட்டப்பட்ட இராஜபாளையம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் குருமூர்த்தியின் வீட்டிற்கு சென்று பாஜகவினர் ஆதரவு தெரிவித்தனர். இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி. சி.ஆர்.பி.எப் இவர் மேகலயாவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரியில் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில் தமிழ்நாட்டை தனி நாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இலக்கு என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதை கண்டித்து ராணுவ வீரர் குருமூர்த்தி சமூக வலையதளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் குருமூர்த்தியை விசிக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பலர் குருமூர்த்திக்கு மிரட்டல் வீடியோ வெளியிட்டனர்.  இதையெடுத்து ராணுவ வீரர் குருமூர்த்தியை...
தமிழகம்

மதுரையில் இன்று சிக்கி நிறுவன ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் திடீரென மொத்த விடுப்பு – உணவு விநியோகம் சேவை பாதிப்புஸ்வீகி

ஸ்வீகி நிறுவனத்தின் உணவு டெலிவரியின் போது ஊழியர்களுக்கு டெலிவரி ஒன்றுக்கு 5கிலோ மீட்டருக்கு 25ரூபாய் பணம் அளிக்கப்பட்ட நிலையில், 7கிலோ மீட்டருக்கு 25ரூபாய் என ஊதிய தொகை குறைக்கப்பட்டதாகவும், மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஸ்வீகி  ஊழியர்கள் இன்று மொத்த விடுப்பு எடுத்ததனர். மேலும் திடீரென புதிய ஊதிய நடைமுறைகளால் ஊதியம் குறையும் நிலை உள்ளதாகவும், ஏற்கனவே பெட்ரோல் விலைவாசி உயர்வால் நாள்தோறும் செலவு அதிகரிக்கும் நிலை உள்ளதால் பழைய ஊதிய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும், புதிய ஊதிய நடைமுறைகள் குறித்து உரிய விளக்கம் அளிக்காமலேயே நடைமுறைப்படுத்தியதால் நாள்தோறும் ஊழியர்களின் ஊதியம் குறையும் நிலை உள்ளது. இது குறித்து ஸ்வீகி ஊழியர்கள் வென்டார் அலுவலக மேலாளரிடம் விளக்கம் கேட்டால் பணியில் இருந்து நீக்கி விடுவேன் என கூறுவதாக கூறி...
1 422 423 424 425 426 563
Page 424 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!