தமிழகம்

தமிழகம்

மணக்குள விநாயகர் கோயில் யானை ‘லட்சுமி’ நடைபயிற்சியில் மயங்கி விழுந்து திடீர் மரணம்: மீளா துயரில் பக்தர்கள்

ஓய்வில் இருந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து இன்று காலை உயிரிழந்ததால் பக்தர்கள் சோகமடைந்துள்ளனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை. தமிழகத்தில் கோவில் யானைகளுக்கு ஆண்டுதோறும். 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். கரோனா காலத்தில் கோவில் யானைகளுக்கான இந்த புத்துணர்வு முகாம் நிறுத்தப்பட்டது. இந்த முகாமில் ஆண்டுதோறும் புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியும் பங்கேற்று திரும்பும். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக புத்துணர்வு முகாம் இல்லாததால் இந்த ஆண்டு கோவில்...
தமிழகம்

வேலூர் அருகே நெடுஞ்சாலையில் பைப் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து

வேலூர் மாவட்டம் பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து அடர்த்தி குறைந்த இரும்பு பைப்புகளை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி செல்லும்போது பொய்கை என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனில் மோதி எதிர் திசையில் பெங்களூரில் சாலையில் பைப்புகள் சிதறின. இந்த விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வந்து விபத்தில் கவிழ்ந்த லாரியை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

ஈஷாவின் வழிகாட்டுதலால் ரூ.17.7 கோடி Turn over செய்த விவசாயிகள் – வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் புது சாதனை

ஈஷாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் கோவை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் 2021-2022-ம் நிதியாண்டில் ரூ.17.7 கோடி மொத்த வருவாய் ஈட்டி (Annual Turn over) புது சாதனை படைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட ரூ.3.7 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் சத்குருவின் ஆலோசனையின் படி, கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1063 விவசாய உறுப்பினர்களை கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 404 பேர் பெண் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டம் கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று (நவம்பர் 30) நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான விவசாய உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட தகவலின்படி, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் மொத்தம் 5,859 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிறுவனம்...
தமிழகம்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சிறந்த ஆய்வு கட்டுரை சமர்ப்பித்த மாணாக்கருக்கு பரிசு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது என்ற மைய கருப்பொருளில் நூறு பள்ளிகளை சேர்ந்த 300 மாணவர்கள் சமர்ப்பித்த 150 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை ஆட்சியர் பார்வையிட்டார். தனியார் பள்ளிகளில் சீனியர் பிரிவில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, ராமநாதபுரம் ஷிபான் நூருல் மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, பரமக்குடி வ.உ.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி, ஜூனியர் பிரிவில் முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் பள்ளி, உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, அரசு...
தமிழகம்

திமுக.விவசாய அணி மாநில இணைச் செயலாளராக திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் நியமனம் கட்சியினர் வாழ்த்து

திமுகவில் கட்சியினருக்கு சமீபத்தில் புதிதாக பொறுப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது அதில்.திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கத்திற்கு மாநில விவசாய அணி இணைச் செயலாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தது இதனை ஒட்டி மதுரை மாநகர் மற்றும் புறநகர் வடக்கு தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுகவினர் ஏராளமானோர் அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தங்கச்சிமடம் பள்ளியில் கூடுதல் வகுப்பறை பூமிபூஜை

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் புனித யாகப்பர் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.24 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டுமான பூமிபூஜை நடந்தது. நவாஸ் கனி எம்பி துவங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முஹமது, மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலர் நிலோபர் கான், கத்தோலிக்க பங்கு தந்தையர் ஜீவன், மெக்கன்ரே, பள்ளி நிர்வாகி பிரபு, பரதவ சமுதாய தலைவர்கள் சாம்சன், சகாயம் விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள் சேசுராஜா, ஆல்வின், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி உள்பட பலர் கலந்துகொண்டனர். நவாஸ் கனி கூறுகையில் 1 மத்திய அரசு 1முதல் 8 வகுப்பு சிறுபான்மையின குழந்தைகளுக்கான கல்வி உயவித்தெகையை நிறுத்தியது...
தமிழகம்

சோழவந்தான்.தொகுதி.சமயநல்லூரில்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட குழு சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் சமயநல்லூரில் நடைபெற்றது. இந்த பேரவை கூட்டத்திற்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் மத்திய மாநில குழு முடிவுகளை விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் மாவட்டக் குழு முடிவுகளை பேசினார். இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா.ரவி, த.செல்லக்கண்ணு, வி.பி.முருகன், வி.உமாமகேஸ்வரன் பி.ஜீவானந்தம், செ.முத்துராணி, , மாவட்ட குழு உறுப்பினர்கள் இடைகமிட்டிச் செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டததின் நிறைவாக புறநகர் மாவட்டததில் தீக்கதிர் நாளிதழ்களுக்கான 140ஆண்டு சந்தா, 26 அரையாண்டு சந்தா என மொத்தம் 166 சந்தாவிற்கான தொகை...
தமிழகம்

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் ஆராட்டு விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் ஐயப்ப பக்தர்கள் கடந்த கார்த்திகை மாதம்1ம் தேதி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். தொடர்ந்து தினந்தோறும் மாலை ஐயப்பன் கோவிலில் பஜனை பாடல்களை பாடி தங்களது வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆராட்டு விழாவில் தென்கரை.பாலம் அருகே வைகை ஆற்றில் ஐயப்பன் நீராடி சிறப்பு அலங்காரத்தில் கஜமுக வாகனத்துடன் தென்கரை பிரதான சாலை வழியாக செண்டை மேளம் அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாக வந்து திருக்கோவிலிலை அடைந்து ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஐயப்பன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில், வானவில் மன்றம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர், இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள “வானவில் மன்றம்” திட்டத்தினை, சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திடும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “வானவில் மன்றம்” துவக்க நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர், இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள “வானவில் மன்றம்” திட்டத்தினை, சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திடும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “வானவில் மன்றம்” துவக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித் துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, மாணாக்கர்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள். அதில், தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணாக்கர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், அறிவியல் கண்ணோட்டத்துடன் பயில வேண்டும் என்பதற்காகவும், சிறந்த சிந்தனையாளர்களாக உருவாக்கிடும் பொருட்டும், “வானவில்...
தமிழகம்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியா ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி துவக்கி வைத்தார்.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி துவக்கி வைத்தார்.  மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் உடன் பங்கெடுத்து பணிகளை துவக்கி வைத்தார்.  இப்பணிகளுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனிஸ்சேகர் இ.ஆ.ப, கூடுதல் ஆட்சியர் எஸ். சரவணன் இ.ஆ.ப, இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சூரியகலா கலாநிதி, மேற்கு ஒன்றிய சேர்மன் மணிமேகலை, யா. ஒத்தக்கடை ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநில...
1 419 420 421 422 423 563
Page 421 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!