அண்ணல் அம்பேத்கரின் வெண்கல சிலை வைக்க அனுமதி வேண்டி ஆர்ப்பாட்டம்
உத்தமபாளையம் கிராமச் சாவடியில் ஏற்கனவே சேதமடைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையை பராமரித்து, வெண்கலச் சிலை வைக்க அனுமதி வேண்டி விசிக, கட்சியின் தேனி மேற்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிலை அமைப்புக் குழுத் தலைவர் திரு, சோ.சு.சுருளி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் அண்ணாத்துரை வரவேற்புரையாற்றினார். விசிக மாவட்ட பொருளாளர் பெர்க்மான்ஸ், மாவட்ட து, செயலாளா ஆரோக்கியசாமி, அப்பாவுபறையனார், மாவட்ட அமைப்பாளர் அந்தோணி, ஆலோசகர் ஜெயச்சந்திரன், ஆரோக்கியராஜ் ExMC ஆகியோர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விசிக.முதன்மைச் செயலாளர், ஏ.சி. பாவரசு அவர்களும், துணை பொதுச் செயலாளர் வெ. கனியமுதன் , தேனி பாராளுமன்ற தொகுதிச் செயலாளர் இரா.தமிழ்வாணன், தொழிலாளர் விடுதலை முன்னணி க.தமிழன் , தமிழ்புலிகள் கட்சியின் மாவட்டஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், ஆதித்தமிழர் பேரவை அதியர்மணி எஸ்டிபிஐ கட்சி கலில் ரஹ்மான், தமு மு க.முபாரக்...

