தமிழகம்

தமிழகம்

மதுரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள செவ்வியல் பேக்கரியில் திடீர் தீ விபத்து

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த செவ்வேல் பேக்கரியில் இன்று சிலிண்டர் பற்ற வைக்கும் போது திடீரென தீ பற்றி உள்ளது இந்த தீயானது சற்று நேரத்தில் கேக் செய்யும் சமையல் அறையில் உள்ளே மலவென பற்றி எரிய தொடங்கியது இதனால் பதறிப் போன ஊழியர்கள் பேக்கரியை விட்டு வெளியே வந்தனர். இது குறித்து மதுரை டவுன் தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை ஊற்றி பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்ததால் அப்பகுதியில் நடைபெற இருந்த மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு படையினரை சுப்பிரமணியபுரம் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர் சம்பவம் குறித்து ஜெயந்திபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்தியாளர் : வி...
தமிழகம்

மதுரை நகரில் நடந்த குற்ற சம்பவங்கள்

தபால்தந்தி நகரில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர்மீது தாக்குதல் பேக்குடன் செல்போன்கள் பறிப்பு. தபால் தந்தி நகரில் மெடிக்கல் ஷாப் உரிமையாளரை தாக்கி பேக்குடன் செல்போன்கள் பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். தபால் தந்தி நகர் வாசுகி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பெரிய கருப்பன் 67. இவர் நரிமேட்டில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம்போல் வியாபாரம் முடித்து இரவு மெடிக்கல் ஷாப்பை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் .அப்போது மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்தனர்.அவர்கள் அவரை தாக்கி அவரிடம் இருந்த பேக்கை பறித்துச் சென்று விட்டனர். அந்த பேக்கில் இரண்டு செல்போன்கள் இருந்தன. இந்த சம்பவம் குறித்து பெரியகருப்பன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழி ப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களையும் தேடி வருகின்றனர்....
தமிழகம்

நவீன செயற்கை கால்: நிதி அமைச்சர்

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மஹபூப்பாளையம் ஜின்னா திடல், அன்சாரி நகரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கால் வழங்க, நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாற்றுதிறனாளியின் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் உடன் உள்ளனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

வேலூரில் காவலர் எழுத்து தேர்வு ஆய்வு செய்த எஸ்.பி.ராஜேஷ்கண்ணன்.

வேலூர் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காவலர் எழுத்து தேர்வு 15 மையங்களில் நடைபெற்றது. இதில் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு நடந்தது. மையங்களில் வேலூர் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். 1200 போலீசார் காவல் பணியில் ஈடுப்பட்டனர்.  தேர்வில் 12,577 பேர் பங்கேற்றனர். 2414 பேர் தேர்வு எழுதவில்லை. செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லி பேரூர் திமுக சார்பில் விழா நடைபெற்றது

மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லி பேரூர் திமுக சார்பில் கெங்கவல்லியில் அமைந்திருக்கும் பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், சேலம் கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் திரு சின்னதுரை Ex.MLA அவர்களும், ஒன்றிய கழக செயலாளர் திரு. சித்தார்த்தன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு. பிரகாஷ், கெங்கவல்லி பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி. லோகாம்பாள், துணைத் தலைவர் திருமதி. மருதம்பாள் நாகராஜ், கவுன்சிலர்கள் முருகேசன், தங்கபாண்டியன், அருண்குமார், சையது,ஹம்சவர்தினி...
தமிழகம்

உசிலம்பட்டியில் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் 2180 ஆயுதடைப்படை காலர்கள் 1191 சிறப்பு காவல்படை காவலர்கள் 161 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் 120 தீயணைப்புவீரர்கள் என 3552 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகின்றது.இந்த பணியிடங்களுக்கு 2லட்சத்து 99ஆயிரத்து 887 ஆண்கள் 660811 பெண்கள் 59 திருநங்கைகள் தேர்வு எழுதுகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 700 பேர் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு எழுதுகின்றனர்.இதற்காக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் 35 தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறப்புக்கண்காணிப்பு குழு துணைக்கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையில் 60க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தேர்வு மையத்திற்குள் பேனா மற்றும் நுழைவுச்சீட்டு மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.மொபைல் போன் பர்ஸ் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வெளியிலுள்ள அட்டைபெட்டியில் வைக்கப்பட்டன.தேர்வு எழுதும் அனைவரும் பலத்த பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். செய்தியாளர் : உசிலை சிந்தனியா...
தமிழகம்

விருதுநகர் புத்தகக் கண்காட்சியில், பார்வையில்லாத ஆசிரியை எழுதிய 2 நூல்கள் வெளியீடு

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில், முதலாவது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவு, கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. புத்தகக் கண்காட்சியில், பார்வையற்ற ஆசிரியை எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் அருகேயுள்ள சூலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரியா. பார்வை இழந்த இவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் விருதுநகரில் உள்ள தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். பார்வை குறைபாடு இருந்தாலும் கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம் உள்ள இவர் எழுதுவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். இவர் எழுதிய 'சங்க மாந்தரின் அகம்சார் ஆளுமை', 'மறம் எனும் மானம்' ஆகிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா, புத்தகக் கண்காட்சியில் நடைபெற்றது. நூல்களை, மாவட்ட...
தமிழகம்

மதுரை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேர் கைது

மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, மதுரை ரயில்வே இருப்புப்பாதை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த நிலையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை 2-வது பிளாட்பாரத்துக்கு புறப்பட்டு வந்தது. அப்போது அங்கு 2 பேர் 7 சாக்குகளுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தனர். எனவே அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து ரயில்வே போலீசார், அன்னாரின் உடமைகளை சோதனை செய்து பார்த்தனர். இதில் தடை செய்யப்பட்ட 248 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 2 பேரையும் போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று...
தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்; பள்ளி மாணவிகள் பங்கேற்பு

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் முன்னீர் பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவிகள் வரலாற்று சிறப்புமிக்க நெல்லை அரசு அருங்காட்சியக வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். அப்போது பள்ளி மாணவிகளிடம் அருங்காட்சியகம் குறித்தும், இங்கு உள்ள அரும்பொருள்கள் பற்றியும், பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதின் அவசியம் பற்றியும் அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி விரிவாக எடுத்துரைத்தார். இந்த நாட்டு நலப்பணி திட்டத்தில் முன்னீர் பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை மரிய செல்வி, திட்ட அலுவலர் சார்லஸ் நீல், உதவி திட்ட அலுவலர் ஞானசெல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி...
தமிழகம்

சாயல்குடியில் செல்போன் கடை உடைப்பு: தூத்துக்குடி வாலிபர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் இரவு வேலைகளில் பூட்டி இருந்த மொபைல் கடையில் திருடு போனது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அறிவுறுத்தல் படி, கீழக்கரை டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் கீழக்கரை குற்றப்பிரிவு தடுப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த 4 மாதத்திற்கு மேல் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் மொபைல் போனின் ரகசிய எண் மூலம் விற்பனை செய்த கடைக்காரரிடம் விசாரித்தனர். தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த முனீஸ்வரனை (24) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மொபைல் போனை திருடி விற்றதை ஒப்புக்கொண்டார், இதை தொடர்ந்து மொபைல் போன் விற்பனை செய்த பணம் கைப்பற்றப்பட்டது. செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
1 410 411 412 413 414 545
Page 412 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!