தமிழகம்

தமிழகம்

கீழக்கரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு பணி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வாக்குச்சாவடி களில் புதிய வாக்காளர் சேர்ப்பு பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. வாக்காளர் சேர்ப்பு பணியை, ராமநாதபுரம் நகர் அதிமுக துணை செயலர் ஏ.ஆரிபு ராஜா, கீழக்கரை நகர் செயலர் ஜாகுபர் உசேன், நகர் அவை தலைவர் வி வி சரவண பாலாஜி துணை செயலர் குமரன், முன்னாள் நகர் செயலர் இம்பாலா உசேன் மற்றும் சுரேஷ். உள்ளிட்ட அதிமுகவினர் பார்வையிட்டனர். செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

மோதிரம் பரிசு வழங்கிய கீழக்கரை நகர மன்ற துணைத் தலைவர்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கீழக்கரையில் 27.11.22 அன்று பிறந்த குழந்தைகளுக்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளரும், நகர் மன்ற துணைதலைவருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான் அவர்களின் ஏற்பாட்டில் நகர் கழக செயலாளர் பசீர் அகமது, முன்னிலையில் தங்க மோதிரம் மற்றும் பல பரிசு பொருட்களை வழங்கினார்கள். இதில் நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எபன், சுபியான், அல்லாபக்ஸ்,பயாஸ்,நயீம் அக்தர் மற்றும் கெஜி, முகேஷ், மீரான் அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் முகமது ஹனிபா மற்றும் நகர் கழக நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர். செய்தியாளர் : சந்தோஷ் சிவம்...
தமிழகம்

ராஜபாளையத்தில் தொடங்கி உள்ள மாநில அளவிலான சதுரங்க போட்டியில் 12 மாவட்டங்களில் இருந்து 237 பேர் பங்கேற்றுள்ளனர். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இரண்டு நாட்கள் இப் போட்டிகள் நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்படும் சதுரங்க கழகம் சார்பில், காமராஜர் நகலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் இன்று பிற்பகலில் தொடங்கியது. இந்த போட்டிகளில் விருதுநகர், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இருந்து 237 பேர் பங்கேற்றுள்ளனர். ஓப்பன் டோர்னமென்ட் முறையில் 8 சுற்றுக்களாக போட்டிகள் நடைபெறுகிறது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் ஸ்விஸ் லீக் முறையில் நடைபெறும் போட்டிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று ஒற்றையர் போட்டிகளும், நாளை இரட்டையர் போட்டிகளும் நடைபெறுகிறது. மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பையுடன் ரூ. 36 ஆயிரம் மதிப்பிலான ரொக்க பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் 9, 12 மற்றும் 15 வயதுடைய மாணவ,...
தமிழகம்

பொது சுகாதாரம் நூற்றாண்டு முன்னிட்டு மாரத்தான் போட்டி – கொடி அசைத்த வேலூர் ஆட்சியர்.

வேலூர் கோட்டையிலிருந்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்து துறையின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்பந்தையத்தை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். அருகில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பானுமதி, உள்ளிட்ட பலர் உள்ளனர் செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

ராஜபாளையத்தில் மஜக நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்

மனிதநேய ஜனநாயக கட்சி விருதுநகர் மாவட்டம் மற்றும் சாஜர் அறக்கட்டளை, மதுரை ராக்ஸ் மருத்துவமனை & சம்மந்தபுரம் தேவர் திருமகனார் கலையரங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கே.வீரபுத்திரன் மற்றும் ஆர்.எஸ்.மோகன் ஆகியோர் முகாமை துவங்கி வைத்தனர். மாவட்ட துணை செயலாளர் ஹாபிழ் மகபூப்ஜான் அவர் தலைமையில், மாவட்ட செயலாளர் கண்மணி காதர் முன்னிலையில், மாவட்ட துணை செயலாளர் முத்துவேல் வரவேற்புரை ஆற்றினார். இந்த மருத்துவ முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இறுதியாக மருத்துவ அணி மாவட்ட செயலாளர் நூர் முகம்மது நன்றியுரையுடன் நிறைவடைந்து. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

கெங்கவல்லி வாக்காளர் சிறப்பு முகாம்

சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் S.R. சிவலிங்கம் Ex.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் இன்று கெங்கவல்லி பேரூராட்சி 15 வது வார்டு கணேசபுரம் ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர். செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி வட்டம்...
தமிழகம்

ராஜபாளையத்தில் குளிர்சாதனப்பெட்டி பழுது நீக்கும் பணியின் போது இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையம் அருகே ஆசிரியர் காலனி சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு சரவணகுமார் மற்றும் கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சரவணக்குமார் சென்னையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் கார்த்திக் ராஜபாளையம் பூபால் பட்டி தெருவில் உள்ள கடையில் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இன்று மாலை அவர் கடையில் உள்ள குளிர்சாதன பெட்டியை பழுது நீக்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கார்த்திக் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் அங்கேயே மூர்ச்சையானார். இதனை அடுத்து சக ஊழியர்கள் அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த தெற்கு காவல்...
தமிழகம்

திருமங்கலம் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் – பிரமாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி திமுகவினர் குதூகலம் .

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் சார்பில் , திமுகவினர் அரசு மருத்துவமனை அருகில், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ- வும் , திமுகவின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி , திருமங்கலம் அரசு மருத்துவமனை அருகே திருமங்கலம் திமுக நகரச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில், பிரம்மாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கும் , மருத்துவமனை நோயாளிகளுக்கும் கேக் மற்றும் லட்டுகள் வழங்கி உற்சாகத்தில் ஈடுபட்டனர். இவ்விழாவில் நகராட்சி தலைவர் ரம்யா , துணைத் தலைவர் ஆதவன், மற்றும் கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் 45.வது பிறந்த நாளை முன்னிட்டு தேனிவடக்கு மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கொண்டாட்டம்

இன்று (27-11-2022) தேனி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் 45.வது பிறந்த நாளை முன்னிட்டு தேனிவடக்கு மாவட்டம் பெரியகுளம் நகர் கழக செயலாளர் கே எம்.முகமதுஇலியாஸ் பிஏ. அவர்களின் தலைமையில் 16 மற்றும் 15 வார்டு கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியபோது உடன் ஏ.அப்பாஸ்கான் முன்னாள் நகர துணைசெயலாளர் சிவா.எஸ்வி.மணி சேக்தாவூத்.ஜீவா ஆட்டோசித்திக்.சாகுல் பழனிவேல்.டீ கடைராஜா, முகமது ரியாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

திருமங்கலம் அருகே 850 கிலோ ஆட்டுக்கறியுடன் அசைவ விருந்து – 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முனியாண்டி சாமி கோவிலில் நடைபெற்ற மண்டல அபிஷேக விழா.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லணை கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியாண்டி சுவாமி திருக்கோயிலில் மண்டல அபிஷேக விழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றதால், கும்பாபிஷேகம் முடிந்து 48 நாளில் இவ்விழாவை வைக்க வேண்டும் என்பதால் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான அசைவ உணவு விருந்து படைக்கும் நிகழ்ச்சி திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது . இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் திருக்கோயிலை குலதெய்வமாக வழிபடும் குடும்பத்தினர், ஒன்று கூடி சாமியை வழிபட்டனர் . இதனை தொடர்ந்து விழா குழுவினர் சார்பாக , 850 கிலோ ஆடுகளை வெட்டி அசைவு உணவு தயாரித்து , குடல் கறி,...
1 409 410 411 412 413 545
Page 411 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!