மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரம் அருகே மின்சாரம் தாக்கி பசு மாடு பலி
மதுரை மாநகரில் கடந்த இரண்டு வார காலமாக வட கிழக்கு பருவ மழை பெய்யாத நிலையில் நேற்று இரவு இரவு 7.30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் மாநகரில் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் தெருக்கல் தோறும் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு சித்திரை வீதியில் சுற்றி திரிந்த பசு மாடு ஒன்று அப்பகுதியில் உள்ள மின் கம்பம் அருகே நின்று கொண்டிருந்த போது பசுவின் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததுள்ளது. இதனை அடுத்த உரிமையாளர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பசு மாட்டை மீட்டு அப்புறப்படுத்தினர். தொடர்ந்து காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
