தமிழகம்

தமிழகம்

ஸ்ரீமுஷ்ணத்தில் தியாகி கக்கன் ஜி அவர்களின் 44-வது நினைவு நாள் கொண்டாட்டம். அரசு பள்ளியில் படித்த குத்து சண்டை வீரர்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தியாகி கக்கன்ஜி அவர்களின் 44-வது நினைவு நாள் நிகழ்வில் தலைவர் ரவி, மாரிமுத்து, தமிழ்வாணன், கண்ணன், ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கக்கன் ஜி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் டெல்லி பாம்பே போட்டியில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி வென்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு கேடயம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ பூவராகப் பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இனி வரும் ஆண்டுகளில் கக்கன் ஜி பிறந்தநாள் அன்று இது போன்ற சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதோடு கக்கன் ஜி அவர்களு கரை படாத கை எனவும், அவர்...
தமிழகம்

மாயா குளம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை என ராமநாதபுரம் வருகை தந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவரிடம் புகார்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாயாகுளம் ஊராட்சியில் சின்ன மாயாகுளம் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நாலு கோடியே 65 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிதியிலிருந்து எந்த வேலையும் முழுமையாக நடைபெறவில்லை என ராமநாதபுரம் வருகை தந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் எஸ் ஆர் ராஜா மற்றும் உறுப்பினர்கள் நாகை மாலி மானாமதுரை தமிழரசி ரவிக்குமார் திருப்போரூர் பாலாஜி ஆகியோரிடம் ராமநாதபுரம் சட்டமன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அற்புதகுமார் புகார் மனு அளித்துள்ளார். மேலும் அவருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் விடுதலை சேகரன் மாவட்ட துணை செயலாளர் நைனா அசாருதீன் சமூக நல்லிணக்க பேரவையின் மாநில துணைச் செயலாளர் இஸ்மாயில் உடன் இருந்தனர். செய்தியாளர்...
தமிழகம்

பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்

பாம்பன் பாலத்தில் தொழில் நுட்ப கோளாறால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனால், மண்டபம்-ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டு, மண்டபத்தில் இருந்து சென்னை ரயில்கள் இயக்கப்படுகின்றன. மதுரை, திருச்சி பாசஞ்சர் ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.   செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

கள்ளச் சாராயம் விற்றவர் கைது

கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதை அடுத்து எஸ்ஐ மணிமாறன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கெங்கவல்லி அருகே நடுவலூர் ஏரிக்கரையில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர் அப்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது இதை அடுத்து கெங்கவல்லி மீனவர் தெருவை சேர்ந்த சுரேஷ் 42 என்பவரை கைது செய்தனர் அவனிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர் பின்னர் சுரேஷ் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செய்தியாளர் : மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
தமிழகம்

கேஒய்சி பதிவேற்றிய கல்லூரி மாணவிகள்

கெங்கவல்லி வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா வேளாண்மை அலுவலர் கல்பனா சந்திரசேகர் தலைமையில் விவசாயிகளுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் பிரதமரின் மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வீதம் முன்று சம தவணைகளில் ஆண்டுக்கு 6000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவியை பெற விவசாயிகள் இ-கேஒய்சி பதிவேற்றம் செயப்பட வேண்டும் கேஒய்சி செய்த விவசாயிகள் நிதி உதவி தொடர்ந்து வழங்கப்படவும் முகாமில் முசிறி எம் ஐ டி வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளால் இ-கேஒய்சி பதிவேற்றம் செய்து தரப்பட்டது இது குறித்து மேலும் தகவல் பெற விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அணுகி பயன்பெறலாம் . செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
தமிழகம்

வேலூர் இரவு நேரத்தில் 6 வழிச்சாலையில் ஜொலிப்பு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை (6 & 8) யில் வேலூர் மாநகரம் அமைந்துள்ளது. இன்று 22-ம் தேதி வியாழக்கிழமை இரவு இந்த காட்சி பதிவு செய்யப்பட்டது. இந்த ரம்மியமான காட்சிதான் நம்ம ஊரு வேலூர் என்கின்றனர் வேலூர் வாசிகள். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு

மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதெமி ஆண்டுதோறும் 22 இந்திய மொழிகளில் வெளியாகும் நூல்களுக்கு சாகித்திய அகாதெமி விருதினை வழங்கி வருகிறது. 2022-ஆம் ஆண்டிற்கு விருது தமிழில் வெளியான டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ எனும் நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள மு.ராஜேந்திரன், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வடகரையில் பிறந்தவர். மதுரை உயர்நீதிமன்றத்தில் மூன்றாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், பின்னர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர், தமிழக வேளாண்மைத் துறை ஆணையர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். வேளாண்மைத் துறை ஆணையராக இருந்தபோது தமிழகத்தின் மிக அதிகமான உணவு உற்பத்திக்கான பாரதப் பிரதமர் வழங்கிய விருதினை (ரூ.9 கோடி) மூன்றாண்டுகள் தொடர்ந்து பெற்றிருக்கிறார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து ‘கிரிஷி கர்மான்...
தமிழகம்

ஜெகோவா நிசி பவுண்டேஷன் மூலம் குடிசைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவி

தென்காசி மாவட்டம் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பின்புறம் குடிசைப்பகுதியில் வாழும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஜெகோவா நிசி பவுண்டேசன் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  ஏழை மாணவர்களுக்கு  கல்வி உபகரணங்கள், விதவைப்பெண்களுக்கு புதிய ஆடை, மற்றும் அவர்களுக்கு தேவையான‌ சமையல் மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியை ஜெகோவா நிசி பவுன்டேஷன் நிறுவனர் இம்மானுவேல் பிரசாத் அவர்கள் துவங்கி வைத்தார்.  தென்காசி நகர் மன்ற தலைவர் R.சாதிர் மற்றும் தென்காசி நகர்மன்ற துணை தலைவர் KNL சுப்பையா, 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் M.செய்யது சுலைமான் ரஃபீக், 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கல்பனா கங்காதரன், பசியில்லா தமிழகம் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தென்காசி நகர் மன்ற தலைவர் திரு R.சாதிக் அவர்கள் அந்த பகுதியில் உள்ள இரண்டு...
தமிழகம்

பாலமேடு அருகே சாத்தியார் அணையின் கொள்ளளவை உயர்த்த வெங்கடேசன் எம் எல் ஏ விடம் விவசாயிகள் கோரிக்கை.

மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் பாலமேடு சாத்தியார் அணைபாசன விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட சோழவந்தான்தொகுதியின் எம்.எல்.ஏ வெங்கடேசன் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுகொண்டார். அப்போது பேசிய விவசாயிகள் ;- சாத்தியார் அணை 1965 ம் ஆண்டு கட்டபட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே அணை இதுவாகும். ஆனால் 26 அடி உயரம் கொண்ட சாத்தியார் அணையை இதுவரை தூர்வாராமல் இருப்பதால் அணைக்குள் 15 அடிக்கு வண்டல் மண் நிரம்பியுள்ளது. இதனால் முழுமையாக தண்ணீரை தேக்க முடியவில்லை. மழை அதிகமாக பொழியும் காலங்களில் 10 பாசன கணமாய்கள் நிரம்பிய நிலையிலும், உபரிநீரை தேக்கமுடியாமல் வீட்டடி நிலங்களில் தண்ணீர் பாய்ந்து வீணாகிறது. இதனை தடுக்க அணையின் நீர்பிடிப்பு பகுதியை அதிகரித்து கொள்ளளவை உயர்த்த வேண்டும். இதற்கு அணையின் அருகே உள்ள சிறிய...
தமிழகம்

சோழவந்தானில் பேரூர் திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழக திமுக அமைப்பாளர்கள் அணி அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம்சோழவந்தானில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரூர் கழகச் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பசும்பொன் மாறன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகள் பெரியகருப்பன் ராஜா, நீலமேகம், பேரூர் துணைச் செயலாளர்கள் கொத்தாளம் செந்தில், ஸ்டாலின், செல்வராணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் நிஷா கௌதம ராஜா, முத்துச்செல்வி சதீஷ், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், முன்னாள் துணைச் சேர்மன் அண்ணாதுரை, மில்லர், தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன் மற்றும் சங்ககோட்டை சந்திரன் உள்பட நிர்வாகிகள்...
1 367 368 369 370 371 563
Page 369 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!