தமிழகம்

தமிழகம்

காட்பாடி கிறிஸ்தியான்பேட்டைசோதனை சாவடியில் 7 கிலோ கஞ்சா சிக்கியது 2 பேர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை ஆந்திர மாநில சோதனை சாவடியில் மதுவிலக்கு மற்றும் உள்ளூர் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நேற்றுஇரவு காட்பாடி காவல் துறையினர்வேலூரை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பஸ்ஸை நிறுத்தி சோதனை செய்தபோது இந்த தேசத்திற்கு இடமாக இருந்த பையை சோதனை செய்ததில் அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த பையை வைத்திருந்த வேலூர் மாவட்டம் வாலாஜா சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நந்தகுமார்(25)மற்றொரு நந்தகுமார்(22)ஆக இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது அவர்களிடம் இருந்த7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

ராஜபாளையம் மயூராநாத சுவாமி கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட பெண் கணக்கர் மீது வழக்குப் பதிவு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு பத்தியப்பட்ட இந்த கோயிலில் செயல் அலுவலராக ராஜா செயல்பட்டு வருக்கிறார். இங்கு தட்டச்சராக பணியாற்றும் சாந்தி என்பவர் . கூடுதலாக கணக்கர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சந்தோஷ்குமார் என்பவர் வாடகை செலுத்திய ரசீது அடிக்கட்டு புத்தகத்தில் திருத்தம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த செயல் அலுவலர் ராஜா குத்தகைதாரர் சந்தோஷ் குமாரிடம் விசாரித்ததில் ரூ.1 லட்சம் வாடகை செலுத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அளித்தார்.  மேலும் கணக்கர் சாந்தி முக்கிய நாட்களில் நடைபெறும் திருவிளக்கு பூஜை உள்ளிட்ட விழாக்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளுக்கு உரிய ரசீது வழங்காதது மேலும் அரசால் வழங்கப்படும்...
தமிழகம்

மதுரையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் குதிரை பலி

மதுரை புது ஜெயில் ரோடு, மஹபூப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையில் சில குதிரை மற்றும் கோவேரி கழுதைகள் கேட்பாடற்ற முறையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிதிரிந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு காளவாசல் பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் சாலையில் குறுக்கே வந்த குதிரை மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் குதிரை பலியான நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு படுக்காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குதிரைகள் மற்றும் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரையில் வீடுகளில் கொள்ளை அடித்த பணத்தில் விவசாய நிலம் வாங்கி செட்டில் ஆன திருடனை பிடித்த தனிப்படை போலீசார்

மதுரை மாநகரில், நீண்ட காலம் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி இரவு மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட துரைசாமி நகரில் வசித்து வரும் ரவீந்திரன் என்பவரின் வீட்டிலிருந்து 58 பவுன் தங்க நகைகள், 9.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் DBBL இரட்டைக்குழல் துப்பாக்கி ஆகியவைகளை திருடிச் சென்றவழக்கில் தொடர்புடைய, மதுரை சக்கிமங்கலம் முனியாண்டிபுரத்தை சேர்ந்த பெஞ்சமின், (வயது 33) என்பவரை கைது செய்து விசாரித்த போது, பெஞ்சமின் மீது மதுரை நகர், மதுரை மாவட்டம், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 20 திருட்டு வழக்குகள் இருப்பது...
தமிழகம்

ராஜபாளையம் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

ராஜபாளையம் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது அஷ்ட வரத ஆஞ்சநேயருக்கு அதிகாலை கும்ப ஜெபம் கணபதி ஹோமம் ஆஞ்சநேயர் ஹோமம் அபிஷேகம் தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. காலை வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மதியம் 3 மணியளவில் கும்ப ஜபம் அஷ்டவர்கள் ஆஞ்சநேயருக்கு 108 திவ்ய ஹோமம் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அஷ்டவரத ஆஞ்சநேயரே தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு மூன்று வேலையும் அன்னதானம் சிறப்பாக நடந்தது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நற்பணி மன்ற நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

ஈஷாவில் சப்தரிஷி ஆரத்தி – காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் நடத்தினர்

ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி நேற்று (டிச. 22) சிறப்பாக நடைபெற்றது. இந்த சப்தரிஷி ஆரத்தி, சிவ பெருமான் தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள், அவரது அருளைப் பெறுவதற்காக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறை. இது வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் தான், கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக , காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து செயல்முறையை துவக்கினர். படிப்படியாக மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய அந்த செயல்முறை சக்திநிலையில் பிரம்மாண்ட தன்மையை...
தமிழகம்

JEE தேர்வு : தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் பிரச்சினை உடனடியாக தீர்வுகாணப்படும் என சு. வெங்கடேசன் எம்.பி யிடம் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாக்குறுதி.

JEE 2023 விண்ணப்பம் செய்யும் நடைமுறை துவங்கப்பட்டுள்ளது. இதில் 2020- 21 இல் 10 ஆம் வகுப்பு முடித்த தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பம் செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளது. லட்சக் கணக்கான மாணவர்கள் இதனால் தவிப்பிற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்கள். 2020 - 21 கல்வியாண்டில் கோவிட் காரணமாக பொதுத் தேர்வுகளை நடத்த இயலாததால் "எல்லோரும் தேர்வு" (All Pass) என்ற முடிவு தமிழக அரசால் எடுக்கப்பட்டது. ஆகவே மதிப்பெண் அட்டையில் "தேர்வு" (Pass) என்று மட்டுமே பதிவாகி இருக்கும். தற்போது JEE 2023 விண்ணப்பிக்கும் போது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்களை சம்பந்தப்பட்ட இணைய தள படிவத்தில் கேட்கப்பட்டுள்ளது. மதிப்பெண் குறிப்பிடப் படவில்லையென்றால் விண்ணப்பம் பதிவாக மறுக்கிறது. இதனால் லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது. உடனடியாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தலையிட்டு...
தமிழகம்

பக்தர்களை கொலை செய்ய தயாராக இருக்கும் ஷேர் ஆட்டோக்கள் உயிர் பலி ஆகும் முன் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை மாநகரில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது இவர்கள் நினைத்த இடத்தில் வாகனத்தில் திருப்புவதும் பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமல் திடீரென பிரேக் அடிப்பது இவர்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.  தற்பொழுது ஐயப்பன் கோவில் சீசன் மதுரை எல்லீஸ் நகர் மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகத்தில் இருந்து தினசரி தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தற்பொழுது ஐயப்ப பக்தர்கள் அதிக அளவு வந்து செல்கின்றார்கள். தற்பொழுது அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோவில் செல்வதற்கு அரசு பேருந்தும் நீக்கப்படுகிறது மேலும் ஷேர் ஆட்டோக்கள் குறிப்பிட்ட அளவு 3 பேரை தவிர ஆட்கள் ஏற்ற கூடாது என காவல்துறை அறிவுறுத்தியும் சுமார் 15 முதல் 20 நபர்கள் வரை பஸ்ஸில் பொட்கோடில் தொங்குவது போல் ஆட்களை ஏற்றி விபத்தை ஏற்படுத்தும் வகையில்...
தமிழகம்

மதுரையில் நீர் வரத்து கால்வாய்களில் மீண்டும் சாயக்கழிவுகள் – வெள்ளை நிறமாக மாறும் கால்வாய்கள் – தொற்று நோய் பரவும் அபாயம்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வண்டியூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மற்றும் பெயிண்ட் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது, இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியே வரும் கழிவுநீர்களை அந்த பகுதியில் இருக்கக்கூடிய நீர்வரத்து வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்துள்ளது இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாய்க்காலில் பெயிண்ட் நிறுவனம் ஒன்று சாயக்கழிவுகளை கலந்ததால் வாய்க்கால் முழுவதும் சிவப்பு நிறமாக மாறி தொடர்பாக நியூஸ்7 தமிழ் ஆனது செய்தி வெளியிட்டு இருந்தது,  அதன் எதிரொலியாக அந்த நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கால்வாய்கள் வெள்ளை நிறமாக மாறி உள்ளது.  நீர் வரத்து வாய்க்கால்களில் கழிவுநீர்களை கலக்கக்கூடாது என அந்த பகுதி உள்ள நிறுவனங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் எச்சரிக்கை மீறி...
தமிழகம்

இராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் சொத்துவரி குடிநீர் வரியை குறைக்க அதிமுக காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்றது . நடைபெற்ற கூட்டத்தில் 1 முதல் 53 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக கவுன்சிலர் சோலைமலை மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் சங்கர் கணேஷ் ஆகிய இருவரும் இராஜபாளையம் நகராட்சியில் குடிநீர் வரியும் சொத்து வரியும் அதிக அளவில் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர் அதேபோல் இராஜபாளையம் நகர பகுதியில் நாய்கள் தொந்தரவு அதிகமாக இருப்பதால் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதை எடுத்து பேசிய நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் சொத்து வரி குடிநீர்...
1 365 366 367 368 369 563
Page 367 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!