தமிழகம்

தமிழகம்

சிவகாசியில், 37வது தேசிய புத்தகக் கண்காட்சியை, மேயர் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஆண்டு தோறும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை சிறப்பாக நடைபெறும். நேசனல் புக் டிரஸ்ட் இந்தியா, விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 37வது புத்தகக் கண்காட்சியை, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் துவக்கி வைத்தார். புத்தகக் கண்காட்சி திறப்பு விழா நிகழ்ச்சி தொழிலதிபர் கணேஷ்குமார் தலைமையில், பிரபல மருத்துவர் ஞானகுருசாமி முன்னிலையில் நடைபெற்றது. நேசனல் புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். புத்தக விற்பனையை மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா துவக்கி வைத்தார். முதல் விற்பனையை அரசு கலைக் கல்லூரி முதல்வர் காந்திமதி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் காளீஸ்வரி கல்லூரி முதல்வர் பாலமுருகன், இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணசாமி, அச்சுப்பணியாளர் சூரியநாராயணன் உட்பட பலர் கலந்து...
தமிழகம்

ராஜபாளையம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இனாம் கோவில்பட்டி இந்திரா காலனி பகுதியில் சுமார் 30 குடும்பங்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஐந்து வருடங்களாக பழனிச்சாமி என்பவர் கோழி பண்ணை நடத்தி வருகிறார்.  அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோழிப்பண்ணை அமைப்பதற்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் கோழி பண்ணை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவது கோழி கழிவுகளை சுகாதாரத்திற்க்கு கேடு விளைவிக்கும் விதமாக சாலைகளில் வீசுவது போன்ற செயல்பாட்டினால் பல்வேறு விதமான நோய் தொற்று ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு இறக்கும் கோழிகளை நாய்கள் இழுத்துக் கொண்டு வந்து குடியிருப்பு பகுதியில் வீசி செல்வதால் ஈக்கள் மற்றும் கொசு தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு நோய் தாக்கம்...
தமிழகம்

திருச்சியில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற ராஜபாளையத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

38 வது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள், திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 8ம் தேதி முதல் 10 ம் தேதி வரை நடைபெற்றது. போட்டிகளில் திருப்பூர், தென்காசி, சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 40 அணியினர் கலந்து கொண்டனர். இப் போட்டியில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. தனியார் பள்ளி கலையங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், பள்ளி தாளாளர், நிர்வாகிகள், ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில அளவில்...
தமிழகம்

மதுரை மன்னர் கல்லூரியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜம் பிறந்த தினத்தை முன்னிட்டு 1729 மாணவர்கள் கலந்து கொண்ட கலாம் புக் ஆப் ரெகார்டு கணித சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை மன்னர் கல்லூரியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜம் அவர்களின் 135வது பிறந்ததினத்தினை முன்னிட் டு தேசிய கணித தினம் கொண்டாப்பட்டது. எண் கணித்தில் சீனிவாச ராமானுசம் 1729 என்ற எளிய எண் மூலம் 2 வேறு வகையான கணித தீர்வுகள் கண்டதால் அதனை போற்றும் விதமாக 1729 கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட கணித சாதனை நிகழ்ச்சி கலாம் புக் ஆப் வேர்ல்டு ரொக்கார்டு மூலம் பதிவு செய்யப்பட்டது. கணிதத்து துறையில் 1729 என்ற எண் பிளாக் எண் (கருப்பு எண் என அலைக்கப்பட்டது. இதனை கணித மேதை சீனிவாச இராமனுஜம் எளிய முறையில் 1729 என்ற எண்ணை மாற்றும் விதமாக மாற்றி 2 வழியில் கணித தீர்வு கண்டார். அதனை போற்றும் விதமாக 1729 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட கலாம் புக்...
தமிழகம்

திருமங்கலம் அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய, கம்பீரமாக தோற்றம் அளிக்கும் சார் பதிவாளர் அலுவலகத்தை, தங்களது கிராமத்தை விட்டு மாற்றக்கூடாது எனக்கூறி , கிராம மக்கள் அலுவலகம் முன்பு போராட்டம் மற்றும் எட்டு கிராமத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் , ஊராட்சி தலைவர்கள் உட்பட உண்ணாவிரத போராட்டம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்து பட்டி கிராமத்தில் , ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சார் பதிவாளர் கட்டிடத்தை , அருகில் உள்ள கிராமத்திற்கு மாற்றுவதாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதை கண்டித்து, காளப்பன்பட்டி /சிந்துப்பட்டி, தும்மக்குண்டு உள்ளிட்ட 8 கிராமத்தைச் சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், சார் பதிவாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிந்து பட்டி கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இங்கு உள்ள சார் பதிவாளர் கட்டிடம் 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டி முடித்து , இதுவரை அந்த கட்டிடம் ஒரு துளி அளவு கூட சேதம் இல்லாமல் கம்பீரமாக தோற்றமளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த கட்டிடம் சேதம் அடைந்துள்ளதாக கூறி சிலர் சுயநலம் கருதி, அருகில் உள்ள கிராமத்திற்கு...
தமிழகம்

நோ பேக் டே – ஒரு நாள் பள்ளிபாடப்புத்தக பைக்கு விடுமுறை அளித்த பள்ளி.மகிழ்ச்சியில் மாணவர்கள்

மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப பள்ளிப்பாடங்களும் மாறி பெரும்சுமையாய் பள்ளிக்குழந்தைகள் தலையில் விழுகின்றன.இதில் செய்முறைத்தேர்வு வீட்டுப்பாடம் தேர்வு என பள்ளிக்குழந்தைகளை இயந்திரத்தனமாய் சுழல வைக்கின்றன.இதனால் பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கு செல்வதையே பெரும் சுமையாய் கருதி மன உளைச்சலுடன் பள்ளிக்குச் செல்கின்றனர். மேலும் பள்ளியில் சரியாகப்படிக்காமல் இடைநிற்றல் தற்கொலை போன்ற சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.இதனை மாற்றும் முயற்சியாக புத்தகப் பையில்லா நாள் என்ற நாளை உருவாக்கி பள்ளிக்குழந்தைகளை பள்ளியில் ஜாலி மூடில் வைத்திருக்கும் நாளை உருவாக்கி கடைபிடித்து வருகிறார் பள்ளி தலைமைஆசிரியர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட் டையில் உள்ளது அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சாஸ்வதி தொடக்கப்பள்ளி.இங்கு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.கொரோனா தாக்கத்திற்குப்பின் பள்ளி வருவதற்கவே பெரும்பாலான மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுவதை அறிந்த பள்ளித் தலைமைஆசிரியர் மதன்பிரபு பள்ளிக்குழந்தை கவரும்...
தமிழகம்

திருமங்கலம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூபாய் 1.5 கோடிக்கு மேல் மோசடி செய்த பெண் தலை மறைவு – பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை- 50க்கும் மேற்பட்ட பெண்கள் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் சேது பாண்டி - யின் மனைவி போதுமணி, அப்பகுதியில் 50க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டிற்கு பணம் பெற்றுக்கொண்டும்,குறைந்த வட்டிக்கு பணத்தை வாங்கி வெளியில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்தும், ரூ 1.5 கோடிக்கு மேல் மோசடி செய்து, கடந்த மூன்று மாத காலமாக தலைமுறைவாகியுள்ளார். தலைமறைவாகியுள்ள பெண்ணின் மீது மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் , பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு,பணத்தை இழந்தவர்களுக்கு பணம் பெற்று தரக்கோரி தெரிவித்தனர்.   பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை ஏலச் சீட்டு பணத்தை செலுத்தி வந்துள்ளனர். சீட்டு...
தமிழகம்

திருப்பரங் குன்றம் மேலக்கால் அருகே கி.பி.9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை புடைப்பு சிற்பம் .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் அருகே கணவாய் கருப்பசாமி கோவில் எதிரே ஊரணி கரையில் 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது. மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவர், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி அஸ்வத்தாமன் ஆய்வாளர் அனந்த குமரன் பன்னியான் மலை கணவாய் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது கி பி 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் புதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் கூறியதாவது : பழங்காலத்தில் ,தமிழர்களின் வழிபாட்டுமுறை இயற்கை அடிப்படையாகக் கொண்டவை. அதன்பிறகு,பஞ்ச பூதங்கள் மற்றும் மரங்கள் ஆகியவை வழிபடு பொருட்களாகப் பாவிக்கப்பட்டன.இதன் தொடர்ச்சியாக வளமையின் குறியீடாகப் பெண்ணை வழிபடும் மரபு தமிழர்களின்...
தமிழகம்

காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் நியாய விலைக் கடையை ஆய்வு செய்த வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்

வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் காட்பாடி அடுத்த பள்ளிகுப்பத்தில் இயங்கிவரும் நியாயவிலைக்கடை (ரேசன்) யை ஆய்வு மேற்கொண்டார். எடை இயந்திரம், முதலுதவி பெட்டி, கடை சுத்தம், அரிசி தரம், பருப்பு, பாமாயில் இருப்பு, ஆகியவற்றை ஆய்வு செய்தார்.பின்பு பொதுமக்களிடம் கடை திறக்கப்படுகிறதா? பொருள்கள் சரியாக போடுகிறார்களா? என்பதையும் விசாரித்தார். ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, தாசில்தார் ஜெகதீஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலர் சௌந்தர், வழங்கல் அலுவலக வட்ட பொறியாளர் சிவா, மாநகராட்சி திமுக கவுன்சிலர் விமலா, நியாயவிலைக்கடை விற்பனையாளர் குமரேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

மதுரையில் மாநகராட்சியினர் வாகனத்தில் பிடித்துச்சென்ற தனது குட்டியை பின்தொடர்ந்து ஒடிச்சென்ற தாய்க்குதிரையால் நெகிழ்ச்சி

மதுரை மாநகர் பகுதியின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள், குதிரைகள் சுதந்திரமாக பகல் மற்றும் இரவு நேரங்களில்வலம் வருவதால் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்து வரக்கூடிய நிலையில் மதுரை மாநகரில் இருக்கக்கூடிய சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கால்நடைகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்டவை சாலைகளில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள நிலையில் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் மதுரை வைகை தென்கரை பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்திற்கு சுற்றித்திரிந்த குதிரைகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் குட்டி குதிரை ஒன்றை பிடித்து வாகனத்தில் ஏற்றிய போது தாய்க்குதிரை தனது குட்டியை பிரிய மனமின்றிய நிலையில் வாகனத்தில் ஏற மறுத்து வாகனத்தின் பின்னாலேயே மாநகராட்சி கால்நடை காப்பகம் வரை...
1 368 369 370 371 372 563
Page 370 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!