வேலூரில் நள்ளிரவு சந்தன மரத்தை கடத்தியவர்களை சினிமா பாணியில் மடக்கிபிடித்த காவல்துறை
வேலூர் அடுத்த காட்பாடியிலிருந்து நள்ளிரவு சந்தன மரத்தை வெட்டிவேலூர் வழியாக ஆரணிக்கு கடத்தி செல்வதாகவேலூர் எஸ்.பிக்கு தகவல் கிடைத்தது. வேலூர் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையில் காவலர்களுடன் ஊரீசு கல்லூரி அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றபோது நிற்காமல் செல்ல, காவலர்கள் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்தனர்.பின்பு ஒருவனை கைது செய்தனர். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். 20 கிலோ எடை கொண்ட சந்தனமரம், கத்தி, 2 சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவளை காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
