உலகம்

உலகம்உலகம்

ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட ராணுவ வீரரின் நிலை: உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சி படம்

ரஷ்யாவின் பிடியிலிருந்து தப்பிய தங்கள் நாட்டு ராணுவ வீரரின் புகைப்படத்தை உக்ரைன் வெளியிட்டிருப்பது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள்...
உலகம்

ஹங்கேரியில் வாகனம் மீது ரெயில் மோதி விபத்து- டிரைவர் உள்பட 7 பேர் பலி

ஹங்கேரி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள குன்பெஹெர்டோ கிராமத்திற்கு அருகே ரெயில்வே கிராசிங்சை வாகனம் ஒன்று கடக்க முயன்றபோது வேகமாக வந்த ரெயில் மோதியது. இந்த விபத்தில் அந்த வாகன டிரைவர் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரெயில் ஓட்டுனர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் ரெயில் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த கிராமப்புற ரெயில் கிராசிங்கில் கேட்...
உலகம்

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு சிறந்த தொகுப்பாளருக்கான ‘எம்மி’ விருது

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் இணைந்து 'ஹையர் கிரவுண்ட்' என்கிற பெயரில் இணைய தொடர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் 'அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்தது. இதில் உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காக்களின் சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. மொத்தம் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த தொடரை ஒபாமாவே தொகுத்து வழங்கியுள்ளார். இந்த தொடர் கடந்த ஏப்ரல்...
உலகம்உலகம்

மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. கடந்த 2009 முதல் 2018 வரை மலேசியாவின் பிரதமராக நஜீப் ரஸாக் பொறுப்பு வகித்தபோது, அந்நிய முதலீடுகளை கவா்வதற்காக உருவாக்கப்பட்ட '1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்' (1எம்டிபி) மூலம் மொத்தம் 4.2 கோடி டாலரை (சுமாா் ரூ.347 கோடி) சட்டவிரோதமாக பரிவா்த்தனை செய்துகொண்டதாக ரோஸ்மா...
உலகம்உலகம்

ஜெர்மனியில் இன்று 800 விமானங்கள் ரத்து – காரணம் இதுதான்!

விமானிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, ஜெர்மனியின் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் இன்று 800 விமானங்களை ரத்து செய்யவுள்ளது. ஜெர்மனியில் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் நிறுவனம் இதனை ஏற்றுக் கொள்ளாததால் விமானிகள் சங்கம் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு, சலுகைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமானிகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து, ஜெர்மனியின்...
உலகம்உலகம்

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 3 மாதமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பாகிஸ்தானின் சிந்த் மாகாணம், கைபர் பக்துன்க்வா , பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் தான் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ள பாதிப்பால் பாகிஸ்தானில் தேசிய அவசர நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில்...
உலகம்உலகம்

மாணவிகள் வெளிநாடு செல்ல ஆப்கன் தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து படிப்பதற்காக வெளிநாடு செல்ல பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து, அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்தது. தலிபான்கள் தலைமையிலான இடைக்கால அரசு செப்டம்பர் மாதம் பதவியேற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொறுப்பேற்ற தலிபான் அரசு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக வேலைக்கு செல்லவும் 6-ம் வகுப்புக்கு...
உலகம்உலகம்

தொடருந்து பழுதடைந்தது: ஈரோ சுரங்கவழியில் சிக்தித் தவித்த பயணிகள்!

பிரான்சிலிருந்து இங்கிலாந்து சென்றுகொண்டிருந்த ஈரோ சுரங்கவழி (Eurotunnel) தொடருந்து பழுதடைந்ததால் பயணிகள் பல மணி நேரம் சுரங்கத்தினுள் சிக்கித் தவித்ததாக இங்கிலாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. இதேநேரம் தொடருந்து பழுதடைந்ததை நிறுவனம் உறுதி செய்தது. மேலும் அவர்கள் பயணிகளை தனி ஷட்டில் சேவைக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மக்கள் முனையத்திற்கு பயணிக்க வேண்டாம், ஆனால் புதன்கிழமை காலை 6 மணிக்குப் பிறகு வருமாறு...
உலகம்உலகம்

சீனாவில் கடுமையான வெப்ப அலை காரணமாக சிவப்பு எச்சரிக்கை 10 நாட்களுக்கு நீட்டிப்பு

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. அங்குள்ள கான்சு, சான்சி, ஹெனான், அன்ஹுய் உள்ளிட்ட மாகாணங்களில் பகல் நேரங்களில் சராசரி வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இனி வரும் நாட்களில் சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சீனா முழுவதற்கும் அதிக வெப்பத்திற்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வெப்ப...
உலகம்உலகம்

தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினர்களின் புதிய அரசருக்கு மகுடம் சூட்டும் விழா : சந்தோஷத்தில் திளைத்த மக்கள்

தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினர்களின் புதிய அரசருக்கு முடி சூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. தென் ஆப்பிரிக்காவில் னங்குனி (Nguni) மொழி பேசும் பழங்குடியினர்களின் புதிய அரசருக்கு முடி சூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த பாரம்பரிய விழாவில் ஆயிரக்கணக்கான ஜுலு போர் வீரர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். 48 வயதான மிசுசுலு கா ஸ்வெலிதினி ஜுலு ராஜ்ஜியத்தின் அரசராக முடிசூட்டப்பட்டார். வழக்கப்படி ஏராளமான விலங்குகள் பலியிடப்பட்டு விழா கோலாகலமாகத் துவங்கப்பட்டது....
1 2 3 4 5 56
Page 3 of 56

Right Click & View Source is disabled.

error: Content is protected !!