நிகழ்வு

“பெரியார் பிராமணர்களின் எதிரியா?” – நூல் அறிமுக விழா

118views
வெண்ணிறச் சிகைக் கொண்டு தன் பொன்னிறப் பகுத்தறிவினால் எண்ணிலாப் பொதுப்பணி செய்து தமிழக மக்களின் சிந்தனையை திசைத்திருப்பிய பணிவுடைய பெரியோன்தான் பெரியார்.
இவர் பின்பற்றிய விதிமுறைகளையும், விட்டு சென்ற வார்த்தைகளும் இவர் இறந்து அரை நூற்றாண்டு ஆன பின்பும் இன்னும் தீப்பொறியாய் மக்களிடத்தில் சாதியை போற்றுபவன் மீது தூற்றிக்கொண்டு தான் இருக்கிறது.
இன்னும் பலமாக அவரது சொற்களை கல்வெட்டாக பதிய வழி வகுகிறார் எழுத்தாளரானா சோழ நாகராஜன். கலைவாணர் புகழ் பரப்புநர் கவிஞர், எழுத்தாளர், பாடகர், புகைப்படக் கலைஞர், ஊடகவியலாளர் என்று பன்முகம் கொண்ட சோழ நாகராஜன் – “பெரியார் பிராமணர்களின் எதிரியா?” என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் 24.12.22 அன்று டிஸ்கவரி புக் பேலஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எழுத்தாளர் பொன்ஸியின் வரவேற்புடன் விழா இனிதே ஆரம்பமானது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணை செயலாளர் மருதுபாரதி வாழ்த்துரை வழங்கினார்.

“பெரியார் இருந்து இருந்தால் என்ன செய்து இருப்பாரோ அதை ஒற்றை மனிதனாக எழுத்தாளர் சோழ நாகராஜன் செய்திருக்கிறார்” என்றார். “சொல்லுக்கும் செயலுக்கும் அதிகம் வித்தியாசத்தை காட்டி பல மாற்றங்களை கொடுக்கிறார் சோழ நாகராஜன்.” என்றார் மருதுபாரதி.
திராவிடர் கழகத்தின் பிரசார செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி நூலினை அறிமுகம் செய்தார். “தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ” என்று கூறி தன் உரையை ஆரம்பித்து இந்த புத்தகத்தின் முக்கியத்துவத்தை பற்றி அழகாக கூறினார்.

“இந்த புத்தகம் அறிவு தர்க தாக்கம் எல்லாம் எட்ட முடியாத, மாசுபடியாத பிள்ளை மனதில் இருந்து தொடங்கி இருக்கிறார் சோழ நாகராஜன், அதுதான் இந்த புத்தகத்தின் சுவைக்கு காரணம்” என்றார் அருள்மொழி.
நிறைவாக ஏற்புரை நிகழ்த்தினார் சோழநாகராஜன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடமை இருக்கும். அதை உண்ர்ந்து கொள்ள வேண்டும். இருக்கும் காலத்திற்குள் ஏதாவது செய்துவிட்டு போக வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் ஒரு பத்திரிகையாளனாக தன் செயல் இங்கே நிறைவுபெற்றிருப்பதாக சொல்லி அன்றி தெரிவித்துக்கொண்டார்.

விழா தொடக்கத்தில் வைய்யம்பட்டி முத்துசாமி பாடல்களை பாடி அரங்கை வேறுத்தளத்திற்கு இட்டுச்சென்ற விழாக்குழுவினர் நிறைவில் வெளியே பெய்த மழையில் கொஞ்சம் அன்பாக நனைந்துதான் போனார்கள்.
-லியா
கட்டுரை – புகைப்படங்கள்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!