உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இளம் தலைமுறை கலை ஆர்வலர்களால் வெளியிடப்பட்ட சர்வதேச மகளிர் தின சிறப்பு பாடல் “பாவையின் சிறகுகள்”

120views
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இளம் தலைமுறை கலை ஆர்வலர்களால் பெண்களை போற்றி பெருமிதம் கொள்ளும் வண்ணம் ஒரு புதிய பாடல், “பாவையின் சிறகுகள்” என்ற பெயரில் நேற்று வெளியாகியுள்ளது.
இசை அமைப்பாளர் திரு.ஷஹீது ரஹ்மான் படைப்பில் GulfCuts வலையொளி நிறுவர் திரு. பிரவீன் ஜாய் இயக்கத்தில், திரு வினீஷ் தயாரிப்பில், திரு.தாமோதரன் வரிகளில், திரு.ஜகன்னாதன் முத்துக்குமார் மற்றும் திரு.ஜார்ஜ் குரலில், திரு.ராஃபி (DOP), திரு.ஜெயராஜ்(Design), திருமதி.ஜெர்ரின் (துணை இயக்குனர்) உதவியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலை பிரபல அமீரக தமிழ் பண்பலை 89.4 வானொலியில் RJ பிரியா மற்றும் RJ மது ஆகியோரால் மாலை 8 மணியளவில் வானொலியிலும் GulfCuts வலையொளியிலும் வெளியிடப்பட்டது.
தமிழுக்கே உரித்தான ஒரு பொருள் தரும் பல சொல் பண்பினை கொண்டு பெண்களுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்களை பாடல் வரிகளில் அமைத்துள்ளனர்.
இந்த பாடலை http://www.youtube.com/gulfcuts வலையொளியில் காணலாம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!