தமிழகம்

தமிழகத்தில் 7 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 7,700 செவிலியர்களை நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்யக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

371views
தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், நீதிமன்ற உத்தரவின் படி எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,500 செவிலியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்,

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும், முறையான போட்டி தேர்வின் மூலம் தேர்வு செய்து 7 வருடத்திற்கு மேலாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் 7,700 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!