தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் அவருடைய குருவான கமல்ஹாசனையே வைத்து விக்ரம் என்ற படத்தில் இயக்குகின்றார்.
இந்த படத்தை 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் இறுதியாக நடித்து வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கின்றார்.
அதே 2022ஆம் ஆண்டு பொங்கல் தினத்திலேயே தளபதி 65 திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் தளபதி 65 படக்குழுவினர். ஒரே நேரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள இந்த இரண்டு படங்களும் வெளியானால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த இரண்டு படங்களும் மோதிக்கொள்ளுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.