நேபாளத்தில் இன்று அதிகாலையில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் போகாராவிலிருந்து கிழக்கே 35 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ் (USGS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தின் அருகில் வசித்தவர்களுக்கு பூகம்பத்தின் தாக்கம் அதிகம் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.
காத்மாண்டுவிலிருந்து 113 கி.மீ வடமேற்கில் நேபாள நாட்டின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. “10 நிமிடங்களுக்கு முன்பு காத்மாண்டுவில் (Nepal) 113 NW ஐ பூகம்பம் (earthquake) தாக்கியது” என்று EMSC வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை. பூகம்பத்தால் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
“லாம்ஜங் மாவட்டத்தின் புல்பூலே (Bhulbhule of Lamjung District) என்ற இடத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது, அங்கு இது 5:42 NPT இல் நிகழ்ந்தது. 5.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது” என்று தேசிய பூகம்ப கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (National Earthquake Monitoring & Research Centre) தலைமை நில அதிர்வு நிபுணர் டாக்டர் லோக் பிஜய் ஆதிகாரி தெரிவித்துள்ளார்.
156views
You Might Also Like
துபாய் மம்சார் பூங்காவில் புளியங்குடி மக்கள் ஒன்றுகூடல் – புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு
27-05-2026 அன்று துபாய் மம்சார் பூங்காவில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வரும் புளியங்குடியைச் சேர்ந்த நலம்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள்...
தமிழ் நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு A.M.ஷாஜஹான் அவர்களுக்கு அய்மான் சங்கம் வாழ்த்து
இந்திய முஸ்லிம் சமூகத்தின் தாய் சபையாக கருதப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாணியம்பாடி திரு....
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம்
துபாய் : தொழிலாளர்கள் நம் அமீரக உள் கட்டமைப்பின் நாயகர்கள் என்பதை உணர்ந்து, தொடர்ந்து பல வருடங்களாக அமீரக தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தி வரும் நமது...
துபாய் கிரீன் குளோப் சார்பில் நடந்த ‘மொழி நம் வழி’ நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் முதன் முறையாக மேடையில் பேசி அசத்தினர்
துபாய் : துபாயில் பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகளை துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறையின் ஆதரவுடன் செய்து வரும் கிரீன் குளோப் அமைப்பு புதிய முன்னெடுப்பாக, "மொழி...
தமிழ்நாட்டிலிருந்து உலகின் மிகப் பெரிய மரத்தான்கள் வரை: நியாஸ் கானின் ‘Six Star’ பயணம்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் தொடங்கிய ஒரு கனவு, இன்று உலகின் மிகப் பெரிய மரத்தான் அரங்குகளில் நிறைவேறியுள்ளது. நியாஸ் கான் அவர்களின் பயணம் ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் நீண்டகால...




